Nov 13, 2012

இன்று எனக்கு தீபாவளி தானா?

காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...

வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...

கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...


நிலவின் முதுகைச் சுரண்டி
முகத்தில் பூசிக் கொண்டாள்
என் தேவதை...

கீழை வானில் தோன்றிய
விடிவெள்ளியை எடுத்து தன்
நெற்றியிலும் இட்டுக்கொண்டாள்...


என் கனவில் இவளைப் பார்த்த
என் விழிகளைப் பறித்து- நான்
காணும் இருளைக் குழைத்து
கண் மை பூசிக் கொண்டாள்...

இப்படி செய்த இவள் இன்று
முழு தேவதையாக- முழுமதியாகி
என் வானில் உலாவுகிறாள்...

இவளே இன்று என் வானில்
முழு நிலவாக உலாவ- எனக்கு
எப்படி இன்று தீபாவளி?

தீபாவளி-- இது நிலவற்ற
அமாவாசையில் கொண்டாடும்
தீபத் திருநாள் அல்லவா!!!

நான் என்று கொண்டாடுவது?

..................................................வெற்றிவேல்...


17 comments:

  1. aahaaa .....


    kaathalthaan.....

    arumai!

    vaazhthukkal sonthame....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனி, தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா... அப்படியே முதல் வருகைக்கும்...

      Delete
  2. ம்ம்ம்.......அதானே எப்படி கொண்டாடுவது?!கவலைப் படாதீர்கள் மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லும் நாளாக அமைத்துக்கொள்ளுங்கள்...பவுர்ணமி வரட்டும்....வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி, தாங்கள் கூறுவது போலத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும்... பவுர்ணமி வரட்டும்......

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...

      Delete
  3. அழகாகத்தான் இருக்கிறது உங்கள் வர்ணனை .மகிழ்வுக்குத்தான் கொண்டாட்டம் அதனால் எல்லா நாளும் தீபாவளிதான் உங்களுக்கு பிறகென்ன ? கொண்டாடுங்கள் உங்கள் நிலவுக் காதலியுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் எழில், தினமும் தீபாவளியா??? இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்...

      Delete
  4. நல்ல கற்பனை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..

      Delete
  5. வீட்ல எத்தைனை பேர் இருக்காங்க.அப்பா நல்லெண்ணெய் வச்சுக் குளிப்பாட்டிவிட,அம்மா பொங்கல் ஊட்ட இருந்து......நினைவெல்லாம் எங்க...தீபாவளி வாழ்த்துகள் வெற்றி.அடுத்த வருஷம் தேவதையே வந்து தீபமேற்றுவாள்...பாருங்களேன் !

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருசமா! நடந்தா ரொம்ப சந்தோசம் ஹேமா.... எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்...

      Delete
  6. வணக்கம், அண்ணா... வருகைக்கு மிக்க நன்றி...

    தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...

    தீபாவளி எப்படி சென்றது.... நல்லபடியாகவே தானே!!!

    ReplyDelete
  7. "...தேவதையே வானில் முழுஉலாவர..." வர்ணனைகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. :) கருத்துக்கு மிக்க நன்றி...

      Delete
  8. அன்பின் வெற்றிவேல் - உன் வானில் நிலவாக அவள் உலவ - அதுவே உனக்கு தீபாவளிதானே ! - ஏன் அமாவாசி எதிர் பார்க்கிறாய் - வாழ்வு என்றும் அவளுடன் பொர்ணமித் தீபாவளியாக ஒளிர - ஒளி மிகுந்த மகிழ்ச்சியான நாட்களாக அமைய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    நேரமிருப்பின் படித்துப் பார் - http://cheenakay.blogspot.co.uk/2008/10/blog-post_26.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இணைப்பை படித்துப் பார்த்தேன் அய்யா... அழகான மலரும் நினைவுகள்... தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. நிலவு ஒளிரும் தீபாவளி ..!
    அழகான சிந்தனை..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      நிலவு அருகில் இருந்தால் தினமும் தீபாவளி தானே!!
      தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...