Oct 26, 2013

உதிரும் நான் -24

உதடு சுழித்து
கன்னம் கனியக்கனிய
அவள் கொடுக்கும்
முத்தங்களில்...

அடை மழையில் 
குடை சாயும்
வைக்கோல் வண்டியாய்
சரியவைத்து விடுகிறாள்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

உதிரும் நான், முத்தம், கன்னத்தில் முத்தம், காதல், Love, Love poets, காதல் கவிதைகள், கவிதை, மின்னல், minnal

Oct 23, 2013

உதிரும் நான் -23

காதல் தவத்தில்
நித்தமும்
வெந்துகொண்டிருக்கிறேன்
அவளுக்காய்...

வரம் கொடுக்கிறேனென்று 
எந்த தெய்வமும்
கலைத்துவிடாமல் இருக்கட்டும்
என் தவத்தை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Oct 21, 2013

தமிழக வரலாற்றில் களப்பிரர்கள் காலம் மட்டும் இருண்ட காலமானதேன்?

களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், களப்பிரர்கள் எனப்படுபவர்கள் என்பவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற இலக்கிய மாற்றங்கள் மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றம் பற்றியும் கடந்த மூன்று பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் களப்பிரர்கள் காலம் மட்டும் ஏன் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி விரிவாக அறிய முற்படுவோம்...

Oct 17, 2013

உதிரும் நான் -22

என்றோ வந்தவள்
என் மனவாசலில்
புள்ளி வைத்துச்
சென்றுவிட்டாள்...

நான் இன்னமும்
கோலமிட்டு வண்ணம் தீட்டிக் 
காத்துக்கொண்டிருக்கிறேன்
அவள் வருகைக்காய்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Oct 7, 2013

என்-காதல்

பழகுவதற்கு திருமகளையும்
பழகியபின் உன்னையும்
படைத்து எனெக்கென
அனுப்பிவிட்டான் நான்முகன்...

மோகம் கொண்டவேளையில்
அவன் படைத்துவிட்ட உன்கண்களால்
நித்தமும் வெந்து கொண்டிருக்கிறேனடி
என் காதல் தீயில்...

உன் கெண்டைக் கால் வனப்பில்
துளிர்விட்ட என் காதல்
உன் மார்புப் பள்ளத்தாக்கில்
விழுந்து கிடக்க ஏங்குதடி..

ஒற்றைச் சிரிப்பினில்
சிக்கிக்கொண்ட என் இதயம்,
உன் உதட்டுவரி  பள்ளத்தில்
உருகிக்கொண்டிருக்கும் என்உயிர்...

நிழலெனத தொடரும் உன்நினைவுகள்
என்னை கிறுக்கனாய் ஆக்குதடி...
உன்னை காணும்போது மட்டுமே -மீண்டும்
உயிர்பித்துக்கொல்(ள்)கிறேன் என்னை...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Oct 1, 2013

நானும் வண்ணத்துப் பூச்சியும்...

அவள் இதழ்களை
மலர் இதழென எண்ணி
தேனெடுக்க அமரவரும்
வண்ணத்துப்பூச்சி.

விட்டு விட்டு
சிமிட்டிக்கொண்டிருக்கும்
கண் இமைகளை
தன் ஜோடியின் இறக்கையென
நினைத்து காதல் பேச
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறது...

நான் மட்டும்தான்
அவளையே
சுற்றிக்கொண்டிருக்கிறேன் என 
நினைத்துக்கொண்டிருந்தேன்...

பாவம்...!
வண்ணத்துப்பூச்சிக்கும்
விதிவிலக்கில்லை போலும்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...