Jun 30, 2013

ஏனடி?

நீ சென்ற 
என் காதலை நினைத்து 
ஏங்கித் தவித்து வருந்திய 
என்மனம்- இன்று ஏனோ
மறத்தும் போய்விட்டது...

ஆனால்
கார்மேகத்தினடையே 
தோன்றும் பேரொளியாய்
உன் முகம் மட்டும்
திரும்ப திரும்ப என்மனதில்
தோன்றி
நீர் பெருக்கை பெருக்கச்
செய்வதேனடி?

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 26, 2013

உதிரும் நான் -6

மழையில்லாத 
வறண்ட குளம் மாதிரி 
ஆகிவிட்டது 
என் மனம்...

நீயில்லாமல்
ஏதுமற்றதாய்!!!

வெற்றிவேல்
சாளையக்குறிச்சி...
Jun 25, 2013

பொய்க்கும் நதிகள்

தன் கரைப் புற்க்களினால் 
தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின் 
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..

தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும் 
பச்சிகள் என் யாவற்றையும் இழந்து...

பாலிதீன் குப்பைகளையும் நகரக் கழிவுகளையும் 
தன்னோடு சுமக்கும் நிலை கண்டு
மனம் வெதும்பி, மழையைப் பொய்த்து 
கருவேல மரங்களாயும் பொட்டல் நிலமாகவும் 
மாறிக்கொண்டிருக்கும் நதிகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 23, 2013

எதிர் கால நினைவுகள் - மீள் பதிவு

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

Jun 19, 2013

காதல் கடிதம்: திடங்கொண்டு போராடு- பரிசுப் போட்டி

அன்புள்ள ராட்சசிக்கு,

பார்க்கும் பார்வையில் மட்டும் என்னுள், என் ஐம்புலனில் தீயை  விதைத்துவிட்டு என்னை தூரமாக தள்ளி வைத்து ஏதும் அறியாதவள் போல் என்னை ரசித்துக் கொண்டிருப்பவளுக்கு நான் எழுதும் என் காதல் கடிதம்...

முதலில் கண்டபோது தென்றலாய் என்னை வருடி, பழகும் காலத்தில் அழகுத் தூறலாக என்னை நனைத்து, என் காதலியாய் என்  மனத்தைப் புயல் போல ஆட்கொண்ட என் பேரழகிக்கு...

நானாக இருந்த என் நாட்களை விட, நாமாக இருந்த என் நாட்களில் என்னுள் பல மாற்றங்களை விதைத்து விட்டுச் சென்றவளுக்கு...

உன்னுடன் காலாற நடந்தபோது வண்ணமயமான என் நிழல், நீயில்லாத என் வெற்று நடையைக் கண்டு என் நிழலும் என்னைக் கேளி பேச வைத்தவளுக்கு...

என் வாழ்வில் நான் மிகவும் கவனமாய் என் இதயக்கூட்டில் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகள், நாம் சந்தித்த பொழுதுகள் தானடி. ஆனால் அந்த இனிய சந்திப்புகள் மட்டும் தான் என்னை இன்னும் உயிரோட்டமாய் வைத்திருக்கிறது.

என் காதல் உனக்குத் தெரியாத நாட்களில் எல்லாம் என்னுடன் அளவாவிய நீ, ஏனோ என் எண்ணத்தைத் தெரிந்துகொண்ட பின் நான் காண இயலாத தூரத்தில் மறைந்துகொண்டு என்னை நித்தமும் வதைத்துக் கொண்டிருப்பவளுக்கு...

என் கனவு மற்றும் என் எண்ணங்கள் என அனைத்தையும் களவாடி என் உறக்கத்தோடு என்னையும் சேர்த்து நீயே என்னையும் களவாடுவாய் என்ற காத்திருப்பில் நானடி...

இப்போது என் மனம் உன்னை நினைத்தே என் உயிர் வேகுவது போல், உன் மடியில் என் உயிர் பிரிந்து, உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே என் உடல் வேகும்  இந்த வரத்தை மட்டுமாவது எனக்கு அளித்துவிடேனடி என் செல்ல ராட்சசியே!!!

அன்புடன் 
வெற்றிவேல்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------

இது போட்டிக்காக மட்டுமே எழுதப்பட்டது, எழுதியது அனைத்தும் கற்பனையே. ஆரம்பத்தில் எளிதாக எழுதிவிடலாம் என்று ஒப்புக்கொண்டேன், ஆனால் எழுத ஆரம்பித்த பின்பே அதன் கடினம் புரிந்தது. நல்ல, யாராலும் எளிதில் ஒப்புக்கொள்ள இயலாத தலைப்பைத் தான் நண்பர் சீனு வழங்கியுள்ளார். அவரது முயற்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல நண்பர்கள் எழுதுபவர்களை ஊக்குவிக்குமாறு பல போட்டிகளை நடத்த முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

எப்படியோ என்னையும் காதல் கடிதம் ஒருவர் எழுதவைத்துவிட்டார்.... நன்றிகள் பல...

Jun 17, 2013

மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்...


வயிற்றில் இருக்கும் உனக்கு 
அழகுக் கதைகள் கூறி- உன் 
சிறு அசைவுகளையும் காதுவைத்துக்
கேட்டு ரசிக்கும் -என் அக்கா
மகளாய் நீயாக வேண்டும்...

உன் கரம் கோர்த்து ஊர் சுற்றி
ஆளானதும் பச்சை ஒலைக்கட்டி
என் குரலைக் கேட்டதும்- கதவிடுக்கில்
நாணத்துடன் மறைந்திருந்து பார்க்கும்
உன்ஆசை மாமனாக நானாக வேண்டும்...

சோம்பல் முறிக்கும் உன்பேரழகு,
அதிகாலையில் நீயிடும் கோலத்தின்
புள்ளியில் நான் தொலைந்து, உன்சிறு
புன்னகைகளையும் ரசிக்கும்படி உன்
எதிர் வீட்டில் நான் வசிக்க வேண்டும்...

நம் காதலுக்கு நம் பெற்றோரே 
தூபமிட்டு ஆசிவழங்க, உனக்குப்
பிடித்த பையனை முதல் வருடமும்
எனக்குப் பிடித்த பெண்ணை மூன்றாம் 
வருடமும் நாம் பெற வேண்டும்...

திகட்டும் அன்பில் இருவரும் திளைத்து
உன் மடியில் என்உயிர் பிரிந்து, இப்பிறப்பில்
உன்னை நினைத்தே என்உயிர் வேகுவது போல்
உன் பைந்தமிழ் அழுகுரல் கேட்டே- என்
உடல் வேகவேண்டும் என் மறுபிறப்பில்....

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 15, 2013

தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்

தி.மு.க தமிழர்களுக்கு செய்த துரோகம் ஊர் அறிந்ததே, ஆனால் அக்கழகம் 'தமிழ்' தான் உயிர் மூச்சு என அழைத்து அதற்க்கும் பெரும் துரோகத்தை இழைத்துவிட்டு இன்று எதுவுமே தெரியாதது போல இருக்கின்றனர். ஆம். மாபெரும் துரோகம். பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும், எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரத்தில் எதிர்க்காமலும் இருந்ததன் விளைவு.

Jun 14, 2013

உதிரும் நான் -5


மெழுகு தன்னை 
உருக்கி 
ஒளியூட்டுவது போல்

என்னை உருக்கி
உன்னைக் 
காதலிக்கும் 
என் மனம்...

-------வெற்றிவேல்..
சாளையக்குறிச்சி...


Jun 11, 2013

உதிரும் நான் -4


நத்தை
 தன் முதுகில் 
சுமந்து செல்லும்
நீர்க்குடம் போலத்தானடி
என் காதல்...

என் சுமையும்
அதுதான்...
என்னை உயிர்ப்பிப்பதும்
அதுதான்-


-------வெற்றிவேல்...
  சாளையக்குறிச்சி...Jun 9, 2013

உதிரும் நான் -3


உன் கைகோர்த்து
செல்லும்போது 
மட்டும்
என்  நிழலும்
வண்ணமாகி 
விடுவதேன்...

 -------வெற்றிவேல்,
  -சாளையக்குறிச்சி.
Jun 6, 2013

ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நான் கோயம்புத்தூர் சென்ற போது என்னைப்பார்த்து ஒரு CISF வீரர் கேட்ட கேள்வி இது தான்...

ஹிந்தி தெரியாத நீ ஒரு ஹிந்துஸ்தானியா? என்று.

ஹிந்தி தெரிந்திருந்தால் மட்டுமே நான் ஒரு ஹிந்துஸ்தானி என்றால், எங்களுக்கு அந்த ஹிந்துஸ்தானமே தேவை இல்லை. நான் தமிழன் என்பதிலேயே பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினேன்...

Jun 5, 2013

உதிரும் நான் -2


என் தோட்டமெங்கும் 
வண்ண வண்ண பூச்செடிகள்...ஆனால்

அது பூத்துக் குலுங்குவதெல்லாம்
உன்னையும் 
உன் புன்னகையையும் 
தானடி...

-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.