Jul 26, 2012

மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்

கடந்த பதிப்பான மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல் எழுதியபோது நண்பர் சுரேஷ் அவர்கள் மறுஜென்மம் பற்றிய கேள்வியை எழுப்பியிருந்தார். அவரது சந்தேகங்களை நான் அப்பொழுதே பதிலுரையில் தெளிவுபடுத்தி விட்டேன். இருப்பினும் அதனையே பதிவிட்டு அனைவருக்கும் தெரியப் படுத்தலாம் என்ற நல்ல நோக்கத்தின் விடை தான் இந்த பதிவு. அடுத்த பதிவிற்கு நல்ல தொடக்கமும் அவரே கொடுத்துவிட்டார்.


மறுஜென்மம் அல்லது மறுபிறப்பு (RECARNATION) என்பது பரவலாக இந்து, பவுத்தம், இஸ்லாம் ஆகிய மதங்களில் தீவிர நம்பிக்கை உள்ளது, ஆனால் கிருஸ்தவ மதத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை சிறிது குறைவாகவே உள்ளது.

அனைத்து  மதங்களையும் விட இந்து மற்றும் பவுத்த மாதத்தில்தான் மறுபிறப்பு என்பதை ஆணித்தரமாக நம்புகின்றனர். இந்து மதத்தைப் பொருத்தவரை, மறுபிறப்பு ஒரு வலி தரக்கூடிய நிகழ்வாகவே கருதுகிறார்கள். ஒருவனது பாவங்கள் கழிந்து புண்ணியம் கிடைக்கும் வரை அவன் மறு பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது இந்து மக்கள் நம்பிக்கை. அதனால் தான் அவர்கள் தங்கள்  பாவங்களை போக்க கங்கை, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் மூழ்கி தங்கள் பாவங்களை கங்கையோடு அனுப்பிவிட்டு இவன் தன் பாவங்களை துறந்ததோடு இல்லாமல் மறு பிறப்பு என்ற பாவங்களையும் துறந்துவிடுகிறான். இது இவர்களது நம்பிக்கை. நமக்கு தற்பொழுது ஒரு கேள்வி எழும்? கங்கை ஏன் நமது பாவங்களைக் கழுவ வேண்டும்? என்பதுதான் அது. அவளும் ஒரு பாவத்தை செய்து விடுவாள். அது யாதெனில் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த முனிவர் தன்னை வணங்காமல் சிவன், விஷ்ணு, பிரம்மாவையே வணங்குகிறாரே என்ற பொறாமையில் அவருடன் இவர் பகைமையை வளர்த்துக் கொள்வாள். அப்பொழுது அந்த மாமுனி இவளின் திமிரினை அடக்குகிறேன் என்று பெரும் வேள்வி செய்வார். இவர் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுதே தேவி அந்த முனிவரைக் கொன்று விடுவாள். இந்த பாதி மந்திரத்தில் பிறந்த அந்த அசுரனை இவளால் அழிக்க இயலாது. அவனை இவள் விழுங்கி விடுவாள். அப்பொழுது அவனது விழம் ஆனது இவள் உடல் எங்கும் பரவி விடும், அப்பொழுது சிவ பெருமான் அவர்கள் இவளுக்கு சாப விமோச்சனம் அளிப்பார்,நீ கங்கையாக வற்றாத ஜீவ நதியாக ஓடு, எப்பொழுது மானிடர்களின் பாவங்களால் உனது நஞ்சு தீர்கிறதோ அப்பொழுது உன் பாவங்கள் விலகி நீ என்னை வந்து சேர்வாய் என்று கூறிவிடுவார். அதனால்தான் அவள் இன்னும் நமது பாவங்கள் மட்டும் இல்லாமல் தொழிற்சாலைகள் மற்றும் நகரங்களின் கழிவுகளையும் சுமந்து செல்கிறாள். இப்படியே சென்றால் அவள் விரைவில் சாபம் நீங்கி நம்மை விட்டு விரைவில் சென்றி விடுவாள்!!!!

புத்த மதத்தில் அவர்களது மன்னராக கருதப் படுபவர் தலாய் லாமா! இவர் அவளோகிதரின் வரிசையில் மறுபிரப்பாக வருபவராக அனைவரும் நம்புகின்றனர். தற்போதைய தலாய் லாமா இறந்தால் அடுத்த ஏழு நாட்களுக்குள் புதிய தலாய் லாமாவை அவர்கள் தேர்ந்தெடுத்து விடுவார்கள்.

மகாபாரதத்தில் கூட கர்ணன் முன் பிறப்பில் அசுரனாக இருந்தவன் தான், அவனுக்கு சூர்யபகவானின் பூரண அருள் இருந்ததனால் அவன் பல சக்திகளுடனும், நல்ல உள்ளத்துடனும் மறு பிறப்பில் மகாகர்ணனாக பிறந்தான் என்பது வரலாறு. 

இதுவரை நாம் ஆன்மிகம் துனையில் மறுபிறப்பு என்பதை ஆராய்ந்தோம், இனி நாம் அறிவியல் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். 

அறிவியல் வழியின் துனையில் நாம் மறு பிறப்பு என்பதை நாம் தேடினால், Dr.Ian Stevensonஐத் தவிர்த்து மறு பிறப்பு ( Recarnation) என்பதை நம்மால் விளக்க முடியாது. ஏனெனில் இவர் மறுபிறப்பை அந்த அளவிற்கு தேடி, அலசி ஆராய்ந்துள்ளார். 
  
File:Ian Stevenson.jpgஇந்த  மனிதர் மறுஜென்மத்தை பற்றி ஆராய்ந்து இந்தியா, இலங்கை, தென் அமேரிக்கா, வட அமேரிக்கா, ஆப்பிரிக்கா, அலாஸ்கா என்று யார் யாரெல்லாம் மறு பிறப்பு சிந்தனை உள்ளது என்று கூறுகிறார்களோ, அவர்களையெல்லாம் இந்த அசாதாரண மனிதர் சந்தித்தார். அவர்கள் கூறுவதை இவர் பதிவும் செய்தும் கொண்டார், இப்படி அவர் கடந்த தொலைவு எவ்வளவு தெரியுமா? 1966-1971 இந்த ஐந்து வருட கால இடைவெளியில் மட்டும் அவர் சுமார் 55000 மைல் கல்தொலைவு பயணம் செய்தார். இவர் தன் வாழ்வில் எப்படியாவது மறுபிறப்பு  என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்து விடவேண்டும் என்று உறுதியாக இருந்தார். இந்த மாமனிதர் தனது வாழ்வில் மறுபிறப்பு பற்றிய சிந்தனை உடையவர்களான 3000 பேரை சந்தித்து அவர்கள் கூறியதைப் பதிவிட்டு, கோப்புகளாகவும் சேகரித்து வைத்தார். அவர்கள் பதிவுகள் எல்லாவற்றையும் skeptical என்ற கேள்வி பதில் முறையில் சேகரித்து வைத்தார். இவர் மறுஜென்மம் என்பதை உறுதியாக நம்பியதன் விளைவால் ஒரு காரியம் செய்தார். அது என்ன என்கிறீர்களா? கேட்டால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள்.

அவர்  ஒரு மாபெரும் இரும்புப் பெட்டியை உருவாக்கினார், அதன் கடவுச்சொல்லை அவருக்கு மட்டும் தெரிந்த மாதிரி உருவாக்கி அவர் சேகரித்த பலதகவல்களை அதனுள் இட்டு பூட்டி விட்டார். நண்பர்கள் அந்த பெட்டி சாதாரண பெட்டி என்று நினைத்துவிட வேண்டாம். அது mnemonic device என்ற எந்திரம் மூலம் அந்த பெட்டியின் பூட்டை இணைத்துவிட்டார். இந்த பூட்டை திறக்க ஒரு சொற்றொடர் வேண்டும், அந்த சொற்றொடர் அவருக்கு மட்டுமே தெரியும், நான் எனது அடுத்த பிறப்பில் இந்த பூட்டை நிச்சயம் திறப்பேன். அதுவரை அனைவரும் பொறுத்து இருங்கள் என்று கூறி அவர் இறந்து விட்டார். 

எப்பொழுது அந்த இரும்புப் பேழை திறக்கப் படுகிறதோ, அப்பொழுதுதான் மறுஜென்மம் உலகத்திற்கு நிரூபிக்கப் படும், கடந்த 42 வருடங்களாக அந்தப் பெட்டி பூட்டியே உள்ளது. அது திறந்தால் தான் நாம் அனைவருக்கும் பதில் கிடைக்கும்.

பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் கருத்துரையிட்டுச் செல்லுங்கள். உபயோகமாக இருந்தால் பின்வரும் ஏதேனும் ஒரு பட்டையின் மூலம் வாக்களித்துவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே...


53 comments:

 1. ஆச்சர்யமான தகவல்! சிறப்பான பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி ஐயா!!!

   Delete
 2. மிகவும் சுவாரஸ்யமான விஷயம்...

  இதைப் பற்றி நிறைய எழுதலாம். சுருக்கமாக :

  மனிதனாக வாழ இந்த ஒரு பிறவியே போதாதா...? தன்னை முழுமையாக அறிந்தவர்கள் எல்லாம் " பிறவா வரம் வேண்டும் " என்று சொல்லி சென்று விட்டார்களே... (திருநாவுக்கரசரை தவிர- அவர் சொல்லியது வேறு)

  திருவள்ளுவர் குறள் எண் 10-இல்
  பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
  இறைவன் அடிசேரா தார்.

  பொருள் : இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.

  1966-1971 இந்த ஐந்து வருட கால இடைவெளியில், 55000 மைல் கடந்த Dr.Ian Stevenson அவர்கள்.... ஒரு வேளை பிறவிப் பெருங்கடலைக் கடந்தவரோ... அப்படி இருந்தால் அந்தப் பூட்டு பூட்டியே இருக்கும்.

  'அது திறந்தாள் தான்' என்பதை 'அது திறந்தால் தான்' என்று மாற்றவும்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்துரைத்ததர்க்கும் மிக்க நன்றி நண்பரே...

   எழுத்துப் பிழைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். தாங்கள் கூறிய பிழையை நான் சரி செய்து விட்டேன். எப்படித்தான் எழுதினாலும் சில நேரங்களில் சில பிழைகள் வந்துவிடுகிறது.

   தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் நண்பரே, அவர் ஒருவேளை பிறவிப் பெருங்கடலை கடந்திருக்கலாம். அப்படிக் கடந்திருந்தால் அவரால் திரும்பி வர இயலாது, அவர் தான் செய்த ஆராய்ச்சிகளின் முடிவுகளின்படி தான் நிச்சயம் மீண்டும் வருவோம் என்று அவர் உறுதியாக நம்பினார். அவருக்கு திருவள்ளுவர் கூறியது பற்றியோ, மதங்களின் கருத்துகளோ அவருக்கு ஏதும் தெரியாது...

   அவர் முழுக்க முழுக்க தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளையும், தன் கருத்துகளையுமே முழுவதுமாக நம்பினார். அதன் விளைவாகத்தான் அவர் அந்த பேழையை விட்டுச் சென்றுள்ளார்.

   நம் கையில் என்ன இருக்கிறது, நமக்கு முன்னால் சென்ற சான்றோர்களின் கருத்துகளையே நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது நண்பரே. நாம் இறந்த பிறகு கண்டிப்பாக பார்க்கப் போகிறோம் தானே. அதுவரை நமக்கு கடவுள் இட்டப் பணிகளை நாம் செவ்வனே செய்துவிட்டுச் செல்ல்வோம்.

   Delete
  2. ஆன்மிகம் துனையில்,அறிவியல் வழியின் துனையில் என்பதை துணை என்றால் சரிதானே? நண்பரே!!!!!

   Delete
 3. வணக்கம் சொந்தமே!இப்பிறப்பு போதும்......ஆனாலும் அறிவுபூர்வமான பதிவு.சீக்கிரம் அவர் வந்து சொன்ன பிறகாவது நம்மவர் திருந்தட்டும்.!என்னைக்கேட்டால் தனபாலன் அண்ணா சொன்னது போல் முழுதாய் நிறைவாய் றேர்மையாய் இப்போதே வாழ்ந்துவிடுவோம்
  சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

   தாங்கள் கூறுவது மிகவும் சரிதான் நண்பரே, இப்பிறப்பின் நமது பாவங்களை போக்க இன்னும் ஆயிரம் ஜென்மம் தேவைப்படும். இதில் கடவுள் நமக்கு இன்னொரு பிரப்பினையும் கொடுத்து விட்டால் அதன் பாவங்களைக் கழுவ நமக்கு காலம் போதாது.

   மேலும் இப்பிறப்பில் நான் சந்திக்கும் தோல்வி, துரோகம், வலி, தவிப்பு என இவற்றையே என்னால் தாங்க இயலவில்லையே, இதில் இன்னொரு பிறப்பா, கடவுளே வேண்டவே வேண்டாம்.

   ஆதலால் இப்பிறப்பிலே நாம் நல்ல செயல்களை செய்துவிட்டு, முக்தி அடைவதே நல்லதும் அறிவார்ந்த செயலும் கூட நண்பரே...

   Delete
 4. மிகவும் புதியதும் ஆச்சரியதுமான தகவல் நண்பா...ஆனாலும் என்னுடைய கருத்துப்படி மறு பிறப்பு என்பது ஒன்று இறுக்கிறது அது இந்த பூவுலகில் நடைபெறாது. அந்த மறுபின்போது தான் நாம் நமது எதிர்கால வாழ்க்கையான சொர்க்கம் அல்லது நரகத்தை தெரிவு செய்ய வேண்டியிருக்கிறது

  இந்த பூமில் நாம் செய்த செயல்களுக்கு ஏற்ற மாதிரிதான் நம்முடைய மறுவாழ்வு தீர்மானிக்கப் படுகிறது அதிக நன்மை செய்தவர் அதற்குறிய பயனையும் தீமை கெடுதி செய்தவர் அதற்குறிய பயனையும் அடைந்து கொள்வார்கள்.

  ஒரு போது இறப்பவர்கள் மறு பிறப்பாக இந்த பூமிக்குத் திரும்புவது கிடையாது..

  மேலும் அவர் கொடுத்த ரகசிய குறீயீடுகளை இந்த தொழிநுட்ப உலகில் இலகுவாக அறிந்துவிட முடியும் அதனை வைத்து நாம் மறுபிறப்பினை அறிய முடியாது......

  நிலவிலே ஹோட்டல் அமைக்கும் முயற்சியில் தற்போதைய அறிவியில் விஞ்ஞானிக்கு இதுவொரு பெறிய விடயமல்ல விரைவில் அந்த குறியீட்டை கண்டு பிடிப்பார்கள் என நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

   அறிவியல் மிகவும் வளர்ந்து விட்டது. ஆனால் அவர் தனது பேழையை (பெட்டியை) விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளார். ஆகவே நாம் நம்பலாம். நம் கையில் என்ன இருக்கிறது காலம் தான் இந்த விஷயத்தில் பதில் கூற வேண்டும்.

   மறு பிறப்பு பற்றி தங்கள் கருத்துகளை என்னால் ஏற்றுக்கொள்வதற்கும் இல்லை, மறுப்பதற்கும் இல்லை. சான்றோர்கள் கூறிய கருத்துகளை நான் தங்கள் முன் விவாவத்திற்க்கு வைத்துள்ளேன்.

   அவ்வளவுதான் நண்பரே...

   தாங்கள் கூறியபடி நாம் இறப்பிற்குப் பின் பூமிக்கு வர மாட்டோம் என்றாள், வேறு நாம் எங்கு செல்வோம்?

   Delete
 5. Anonymous8:33:00 PM

  மரணத்திற்கு அப்பால் ..

  திகில்...

  ReplyDelete
  Replies
  1. இதில் திகிலடையும் அளவிற்கு என்ன இருக்கிறது நண்பரே. சிறு விவாதம் தானே!!!

   Delete
 6. Anonymous8:13:00 AM

  ஆராய்ச்சியாளர் மீண்டும் மனிதபிறவி எடுக்காததே காரணம். அடுத்தபிறவி என்பது அவரவர் பாவபுண்ணியத்திற்கு ஏற்ப நடைபெறுகிறது. இதுதான் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. சில முறை இலக்கியத்தில் வந்த மறுபிறப்பு பல வருடங்கள் கழித்துதான் நிகந்துள்ளது, அந்த வரிசையில் 42 வருடங்கள் என்பது வெறும் சிறு காலம் தான் நண்பா, பொறுத்திருப்போம். ஒருவேளை அவர் முக்தி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கலாம். ஆனால் அவர் முழுக்க முழுக்க தன் ஆராய்ச்சிகளின் முடிவுகளையும், தன் கருத்துகளையுமே முழுவதுமாக நம்பினார். அதன் விளைவாகத்தான் அவர் அந்த பேழையை விட்டுச் சென்றுள்ளார்.

   அவரது நம்பிக்கையை நாம் பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்...

   Delete
 7. //மறுஜென்மம் அல்லது மறுபிறப்பு (RECARNATION) என்பது பரவலாக இந்து, பவுத்தம், இஸ்லாம் ஆகிய மதங்களில் தீவிர நம்பிக்கை உள்ளது, ஆனால் கிருஸ்தவ மதத்தில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை சிறிது குறைவாகவே உள்ளது.//


  அன்பு சகோதரரே,
  இஸ்லாத்தில் மறுஜென்மம் என்ற நம்பிக்கையே கிடையாது, மரணத்திற்குப் பின் அவரவர்களின் நன்மை தீமைக்கு ஏற்ப, சொர்கத்திலோ, நரகத்திலோ, நித்திய வாழ்க்கை உண்டு என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, இஸ்லாத்தில் மறுஜென்மம் என தாங்கள் தவறாக விளங்கி இருக்கின்றீர்கள் என கருதுகின்றேன், மறுஜென்மத்தைப் பொறுத்த வரை இஸ்லாமும், கிருஸ்தவமும் ஒரே கொள்கையை கொண்டுள்ளது.
  என்றும் அன்புடன்,
  அ.ஹாஜாமைதீன்.

  ReplyDelete
  Replies
  1. சரி நண்பரே, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு ஒரு முஸ்லிம் பெரியவர் தங்கள் நபிகள் அவர்கள் போன்று சில மகான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிறப்பில் பிறந்தனர் (அவர் கூறிய பெயரை நான் மறந்து விட்டேன்) என்று கூறினார். அந்த வரிசையில் பிறந்தவர் தான் ஏசு என்றும் எனக்கு கூறினார். அவர் கூறியதைக் கேட்டுதான் நான் இஸ்லாமில் மறு பிறப்பை நம்புகின்றனர் என்று கூறினேன் நண்பரே...

   Delete
 8. இஸ்லாம் கிறிஸ்துவம் இதிலே எனக்க ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன. அதை பிறகு கேட்டு கொள்கிறேன். மறுபிறப்பு என்று இந்துக்கள் தான் அதிகமாக தம்பட்டம் அடித்து கொள்கிறார்கள். ஆதாரமாக நிறைய ஓலைசிவடிகளை காட்டுகின்றனர்...முடிவில்லா தொடர்கதை இது.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இது தொடர்கதை தான் நண்பரே. பாப்போம் எப்போது இந்த தொடர் கதைக்கு முடிவு கிடைக்கும் என்று...

   Delete
 9. நண்பரே வணக்கம்,

  இங்கு எனது சில கருத்துக்களையும், படித்துத் தெரிந்து கொண்ட விஷயங்களையும் விவரிக்க விரும்புகிறேன். இந்த கருத்துக்கள் முழுக்க முழுக்க விவரிக்கவே தவிர விவாதம் செய்ய அல்ல. இந்த கருத்துக்கள் யாருடைய மதத்தையோ அல்லது கருத்துக்களையோ புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் துளியும் எனக்குக் கிடையாது என்பதை அழுத்தமாக உங்கள் அனைவருக்கும் பணிவுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

  REINCARNATION - மறுஜென்மம் என்பது மிகப் பெரிய ஒரு சப்ஜெக்ட். அது ஆன்மீகம், மகான்கள், மறுஜென்மம் மற்றும் மதம் இவை நான்கும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.

  முதலில் எனக்குத் தெரிந்த மதத்தைப் பற்றிக் கூறுகின்றேன். பிறகு மற்ற மதங்களைப் பற்றிக் கூறுகின்றேன். மற்ற மதங்களைப் பற்றிய எனது கருத்துக்கள் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம்.

  முதலில் இந்து மதம். இதில் கடவுள்கள் வரிசையில் மகாவிஷ்ணுவிற்கு 10 அவதாரங்கள். இதில் எனக்குத் தெரிந்தவரை, ராமரும் கிருஷ்ணரும் மனிதர்களாக பிறந்தவர்கள். இந்த அவதாரம் இல்லாமல் இன்னும் சில அவதாரங்கள் மனிதர்களாக பிறந்து இருந்தாலும், அவர்களைப் பற்றி இங்கு ஏதும் கூறப் போவதில்லை.
  ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பும் வரத்தை கைகேயி கேட்கும் போது, ஸ்ரீராமரைப் பற்றி தசரதன் விவரிக்கும் வார்த்தை,”மனித உருவில் இருக்கும் கடவுள் ஸ்ரீராமன். அவனையா காட்டுக்கு அனுப்புவது? என்று கேட்கிறார். ஸ்ரீராமரையும், ஸ்ரீகிருஷ்ணரையும், ஏழுமலையானையும், மஹாவிஷ்ணுவையும் வணங்குபவர்கள் அனைவரும் அவர்களை அறியாமலேயே மறுஜென்மத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். மஹாவிஷ்ணுவிற்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் ஒரே ஆயுதம் அது “சக்ராயுதம்”.
  மஹாபாரதத்தை எடுத்துக் கொண்டால் பீஷ்மரை பழிவாங்க ஒரு பெண் அலியாக மறுபிறவி எடுப்பாள். இது போல் பல கதைகள் மஹாபாரத்தில் உண்டு.
  ராமாயணத்தை எடுத்துக் கொண்டால், ஸ்ரீராமருக்கு ஒரு தாரம்தான். அதனால் ஸ்ரீராமரை மணக்க விரும்பும் (சீதையால்லாத) மற்ற பெண்களிடம் ஸ்ரீராமர் என்ன சொல்கிறார் என்றால் “எனது இந்த பிறவியானது உதாரண புருஷனாக வாழ்ந்து காட்டுவதற்காக எடுத்த பிறவி. அதனால் இந்த பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். நீங்கள் எனது அடுத்த அவதாரமான கிருஷ்ணாவதாரத்தில் என்னை அடையலாம்” என்று கூறுகிறார்.

  பட்டினத்தார் கதை உங்களுக்குத் தெரியுமா? அது அடுத்த பின்னூட்டத்தில்.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நமது இந்து மத புராணக் கதைகள் அனைத்திலும் மறு பிறப்பு பற்றிய தகவல்கள் ஏராளமாக நிறைந்துள்ளது நண்பரே! அனைத்தும் மறு பிறப்பிற்க்கான ஆதாரக் கதைகள் தான்.
   தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

   Delete
 10. பட்டினத்தார் கதை உங்களுக்குத் தெரியுமா?
  பட்டினத்தார் என்ற மிகப் பெரிய வணிகருக்கு வெகுகாலமாக குழந்தை பக்கியம் இல்லாமல் இருக்கின்றது. இவர் சிவ பக்தர். பல வருடமாக இறைவனிடம் ஒரு குழந்தை பாக்கியம் அருள வேண்டி பிள்ளைத் தவம் இருக்கின்றனர். பல வருடம் கழித்து ஒரு குழந்தை பிறக்கிறது. அக் குழந்தை மிகவும் சிறந்த அறிவுடன் விளங்குகிறது. இளம் பருவத்திலேயே வணிகம் செய்ய கப்பலில் கடல் கடந்து சென்று திரும்புகிறான் மகன். ஆர்வமிகுதியில் மகன் என்ன வியாபாரம் செய்து வந்திருக்கிறான் என்று பார்க்க பட்டினத்தார் கப்பலுக்கு செல்கிறார். பல மூட்டைகள் மகன் வாங்கி வந்திருக்கிறான் என்று தெரிகிறது. ஒரு மூட்டையில் இருந்து உருண்டையாக இருக்கும் பொருளை எடுத்துப் பார்க்கிறார் அது அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத மாட்டுச் சாண உருண்டைகள். கடுங் கோபத்துடன் வீடு திரும்பி மகனுக்காக காத்திருக்கிறார். மகன் வருகிறான். பட்டினத்தார் தன் கோபத்தையெல்லாம் மகனின் மேலே காட்டி கடும் வார்த்தைகளால் திட்டிவிடுகிறார். மகன் வருத்தத்துடன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
  கப்பலில் வந்த மூட்டைகள் எல்லாவற்றையும் வேலைக்காரர்கள் தூக்கிவந்து வீட்டில் பத்திரமாக அடுக்கி விட்டு செல்கின்றார்கள். சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய மரத்தாலான கைக்கு அடக்கமான பெட்டி ஒன்றை கொடுத்துக் செல்கிறார். பட்டினத்தார் பெட்டியை திறந்து பார்த்தால் அதனுள்ளே காதில்லாத ஒரு ஊசி இருக்கிறது. கூடவே ஒரு ஓலையில் “காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற வாசகம் இருக்கிறது. அதே சமயத்தில் பட்டினத்தாருக்கு திடீரென்று மனதில் மின்னல் அடித்தால் போன்ற ஒரு உணர்வு வருகிறது. ஓடிப் போய் மூட்டையிலுள்ள ஒரு உருண்டையை எடுத்து வெளிச்சத்தில் வைத்து உடைத்துப் பார்க்கிறார். உள்ளே அரிய விலை மதிப்பு மிக்க ஆபரணக் கற்கள் இருக்கின்றது. மொத்த மதிப்பும் பல சந்ததிக்கு வரும் அளவு மதிப்பு உள்ளது. பைத்தியம் பிடித்தவர் போல மகன் சென்ற திசையில் ஓடுகிறார். எங்கு தேடியும் மகனைக் காணவில்லை. தான் வணங்கும் ஈசனே தனக்கு மகனாக பிறந்திருக்கிறார். தம்முடைய அவசரத்தினால் மகனை இழந்துவிட்டோம் என்று உணர்கிறார். எங்கு தேடியும் மகன் கிடைக்கவில்லை இதன் பிறகு துறவறம் மேற்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
  இறைவனை நினைத்து முக்தி வேண்டி ஊர் ஊராக செல்கிறார். வழியில் பத்ரகிரி என்னும் மன்னனை சந்திக்கிறார். பல சுவாரசியமான சம்பவங்களுக்குப் பிறகு, பத்ரகிரி மன்னன், நாட்டைத்துறந்து பட்டினத்தாரின் சிஷ்யனாகிறார். இருவரும் பல ஊர்களுக்கு செல்கிறார்கள். பட்டினத்தார் ஒரு மரத்தின் கீழே உள்ள திண்ணையில் தங்கி இருக்க பத்ரகிரியார் ஊருக்குள் போய் பிச்சையெடுத்து வந்து பட்டினத்தாருக்கு கொடுத்து பின் தானும் உண்டு, பின் மிச்சமாவதை கீழே கொட்ட, அதை ஒரு பெண் நாய் தின்று பத்ரகிரியாருடனேயே வாழ்ந்து வருகிறது. நமக்கு வேண்டிய கதை இனிதான் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. பட்டினத்தார் கதைகளை கேட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு தெளிவாக தாங்கள் கூறக் கேட்டுதான் கேட்கிறேன், ஒரு அழகான கதையைக் கூறி வருகை தந்து எமது பதிவை சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...

   Delete
 11. நமக்கு வேண்டிய கதை இனிதான் வருகிறது.
  ஒரு நாள் மரத்தடியில் தூங்கும் பத்ரகிரியாரை சில வழிப்போக்கர்கள், ”அய்யா சம்சாரியே” எழுந்திரும் என்று கூறி எழுப்புகிறார்கள். தூக்கத்திலிருந்து விழித்து எழும் பத்ரகிரி, நான் ஒரு சன்யாசி, என்னை ஏன் சம்சாரி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு வழிபோக்கர்களும், சற்று தொலைவில் உள்ள மரத்தின் கீழே படுத்திருக்கும் பட்டினத்தாரைக் காட்டி, அந்த சன்யாசியிடம் வழி கேட்டோம், அதற்கு அவர் “நானோ சன்யாசி, இந்த ஊரையோ அல்லது வழியையோ எனக்குத் தெரியாது. அதோ ஒரு சம்சாரி படுத்திருக்கிறானே அவனை போய் கேளுங்கள்” என்று கூறி உங்களை கை காட்டினார். அதனாலேயே உங்களை சம்சாரி என்று அழைத்தோம் என்று கூறுகிறார்கள். இதனால் கோபமுற்ற பத்ரகிரியார் நேராக பட்டினத்தாரிடம் சென்று, ஒரு நாட்டிற்கு மன்னனாக இருந்தும் அதையெல்லாம் உதறி விட்டு, சன்யாசியாக மாறிவிட்ட என்னை ஏன் சம்சாரி என்று கூறினீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பட்டினத்தார் சொல்கிறார், என்னுடைய உடமையாக இந்த கோவனத்தைத் தவிர ஏதும் இல்லை. ஆனால் உனக்கோ பிச்சை எடுக்கவும், தூங்கும் போது தலையில் வைத்துக் கொள்ளவும் ஒரு திருவோடு உள்ளது, மேலும் நீ போடும் மிச்சத்தைத் தின்று உன்னுடனே பந்தமாக இந்த நாயும் உள்ளது. எனக்கோ ஏதும் இல்லை. உனக்கோ உடமையாக திருவோடும், உறவாக நாயும் உள்ளது. அதனால் நீ சம்சாரிதானே என்று கூறி சிரிக்கிறார். ஒரு தேசத்தின் மன்னன் என்ற பதவியை துறந்தும், பிச்சையெடுத்து வாழ்ந்தும், இந்த திருவோடும், நாயும் சன்யாசி நிலைக்குப் போவதை கெடுத்துவிட்டதே என்று பத்ரகிரிக்கு வந்த ஆத்திரத்தில் திருவோடை எடுத்து நாயின் மேல் வீசி எறிகிறார். திருவோடு நாயின் மண்டையில் பட்டு நாயின் உயிரை பலி வாங்கிவிடுகிறது. சன்யாசிகளின் மிச்ச சோற்றை உண்ட காரணத்தால், நாய் புண்ணிய நிலை பெற்று, அந்த புண்ணிய நிலையின் காரணமாக ஒரு மன்னனின் மகளாக பிறக்கிறது. நாயாக இருந்து இளவரசியாக பிறந்த பெண்ணுக்கு திருமண வயது வந்ததும், மன்னன், திருமண ஏற்பாட்டை செய்கிறார். இளவரசிக்கு தான் போன ஜென்மத்தில் நாயாக இருந்து புண்ணிய பலனால் இளவரசியாக பிறந்த பூர்வஜென்ம விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உடனே இளவரசி தன் தந்தையிடம் சென்று தான் மணந்தால், தன்னிடம் அன்பாக இருந்து உணவளித்த பத்ரகிரியையே மணப்பேன் என்று பூர்வஜென்ம விஷத்தைக் கூறுகிறாள். மன்னனும் இதையெல்லாம் கேட்டு ஆச்சர்யப் பட்டு, தன் தேசத்தையும், சேனையையும் பாதியாக பிரித்து, பெரும் செல்வத்துடன் இளவரசியை பத்ரகிரியாரைத் தேடி ஒப்படைக்கும்படி படையுடன் அனுப்பிவிடுகிறான். இளவரசியும் பத்ரகிரியார் இருக்கும் இடத்தை தேடி வந்து, 12 வருடங்களுக்கு முன் திருவோட்டால் அடிபட்டு இறந்த நாய் நான்தான். நான் இப்போது உங்களை மணக்க வந்திருக்கிறேன் என்று பத்ரகிரியாரிடம் சொல்கிறாள். பத்ரகிரி பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார். தேசத்தை துறந்து வந்தாலும், பெண்ணும், பொன்னும், மண்ணும் தன்னை விட மாட்டேன் என்கிறதே என்று பட்டினத்தாரிடம் மிகவும் மனம் வருந்தி கூறுகிறார். பின் இறைவனை நினைத்து மனக் கஷ்டத்துடன் ஒரு பாடல் பாடுகிறார். உடனே ஒரு ஒளி தோன்றுகிறது. அந்த ஒளியில் பத்ரகிரியாரும், இளவரசியும் ஐக்கியமாகிவிடுகிறார்கள். இது கண்டு பட்டினத்தார் தனக்கு முக்தி கிடைக்கவில்லையே என மிகவும் வருந்தி ஒரு பாடல் பாட, அசரீரியாக ஒரு குரல் கேட்கிறது. அது பட்டினத்தானே வருந்தாதே கரும்பு எங்கு கசக்கிறதோ அங்கு உனக்கு முக்தி என்று அசரீரி கூறுகிறது. அதனாலேயே பட்டினத்தார் கரும்புடன் காட்சியளிக்கிறார். ஒவ்வொரு ஊரிலும், கரும்பைக் கடித்து, கசக்க வில்லையென்றால் அங்கு தனக்கு முக்தி இல்லை என்று அடுத்த ஊர் சென்று விடுவார். கரும்பு திருவெற்றியூரில் கசக்கிறது. பட்டினத்தார் அங்கு முக்தி அடைகிறார். அந்த மகானின் சமாதி திருவொற்றியூரில் இருக்கிறது.
  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. நான் மணலி, திருவெற்றியூரில் தான் தங்கப் போகிறேன் நண்பரே, கண்டிப்பாக சென்று அந்த மகானை தரிப்பேன் என்று நம்புகிறேன்...

   Delete
 12. ஏசு கிறிஸ்துவின் பெற்றோர் யூதர்கள். ஏசுவும் யூதர். ஏசு தோற்றுவித்த மதமே கிறிஸ்துவம். உலகின் தொன்மையான மதங்களில் யூத மதமும் ஒன்று. ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 3500 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் மோசஸ். அவரது வாழ்க்கைக்கும் ஜீசஸின் வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமை இருக்கும். மோசஸைப் போல யூத மதத்தில் பல மகான்கள் பிறந்துள்ளனர். அந்த வரிசைகளில் ஏசுவும் ஒருவர், முகமது நபியும் ஒருவர் என்று மறைந்த திரு. வலம்புரி ஜான் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கூறக் கேட்டிருக்கிறேன். வலம்புரி ஜான் அவர்கள் கிறிஸ்துவத்தைச் சேர்ந்தாலும், அவர் அனைத்து மதங்களையும் அவற்றின் தத்துவங்களையும் மதிப்பவர்.

  பைபிளில் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்று இரு வகை உண்டு. பழைய ஏற்பாட்டில் வரும் சில சம்பவங்களும் கதைகளும் பெயர்களும் இஸ்லாத்துடன் இணைந்த கதைகளுடன் தொடர்புள்ளது போலவே இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் படித்ததில்லை.

  ஒரு யோகியின் சுயசரிதை என்று ஒரு புத்தகம் உள்ளது. இந்த புத்தகம், இந்த நூற்றாண்டின் உலகத்திலேயே சிறந்த முதன்மையான 10 புத்தகங்களில் ஒன்று. இந்த புத்தகம் யோகோதா சத்சங்கத்தினால் வெளியிடப் படுகிறது. இந்த புத்தகத்தில் 2000 வருட வயதுள்ள பாபா என்ற மகானைப் பற்றியும் அவரது சிஷ்யர்களைப் பற்றியும் எழுதப் பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்தில் காட்டப்படும் பாபா இவர்தான்.
  இந்த புத்தகத்தில் மறுஜென்மம் பற்றியும், பிறவியற்ற நிலை பற்றியும், இறப்புக்குப் பின் அந்த பிறவியற்ற நிலையிலும் இந்த நம்முடைய உலகத்தில் எப்படி மனித உருவத்தில் மகான்கள் எப்படி சிஷ்யர்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளிக்கிறார்கள் என்பது பற்றியும், வேறெந்த புத்தகத்தை விடவும் விளக்கமாக தமிழில் விவரிக்கப் பட்டு உள்ளது.

  சர் ஐசக் நியூட்டன் அவருடைய புவியியல் கோட்பாடுகளையும், இன்னும் பல இயற்பியல்,கணித கோட்பாடுகளையும் 300 வருடத்திற்கு முன் எழுதினார். அவைகளையெல்லாம் படித்து அதை நம்புகின்றோம். இந்த புவியியல் கோட்பாட்டை நாம் செயலில் தான் பார்க்க முடியுமே தவிர, அதாவது பூமியின் புவியீர்ப்பு விசையை நாம் உணரத்தான் முடியும். புயியீர்ப்பு விசையினது தாக்கத்தை அது எப்படி அனைத்து பொருட்களிலும் நீக்கமற வியாபித்துள்ளது என்பதை உணரத்தான் முடியுமே தவிர, இதுதான் ஒரு கிலோ புளி என்று காட்டுவது போல புவியீர்ப்பு விசையை காட்ட முடியாது. பூமியை விட்டு மேலே, மேலே போனால் புவியீர்ப்பு விசை இருக்காதே என்று கூறினாலும், அங்கும் நீங்கள் ஈர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டுதான் இருப்பீர்கள். இங்கு இருந்தால் பூமியின் ஈர்ப்பு, மேலே போனால் சூரியனின் ஈர்ப்பு.

  என்னுடைய முடிவான தீர்மாணம், ஈர்ப்பு விசையும், இறைவனும் ஒன்றே. இது போல் வேறு அறிஞர்கள் யாராவது சொல்லியிருக்கிறார்களா என்று தெரியாது. ஈர்ப்பு விசையும், இறைவனும் முழு பிரபஞ்சமும் அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஒருவேளை இப்படிக்கூட இருக்கலாம், அதாவது ஈர்ப்புவிசைதான் இறைவனோ?

  ReplyDelete
  Replies
  1. நமது விவாதம் மறுஜென்மத்தில் ஆரம்பித்து தற்பொழுது கடவுள் யார் என்று வந்து விட்டது, நான் சில தகவல்களை பதிவு மிகவும் நீண்டு விட்டால் படிப்பதற்கு மலைப்பார்கள் என்று பதிவிடவில்லை, எனக்கு யூதர்களைப் பற்றி அந்த அளவிற்குத் தெரியாது. அனைத்தும் புதிய தகவல்கள் மிக்க நன்றி நண்பரே. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே...

   Delete
 13. ஒரு கிலோ புளி என்பதும் புவீஈர்ப்பு விசையின் விளைவே/அளவே. புவீயீர்ப்பு விசை இல்லை என்றால் எப்படி அளப்பது, only volume based measurement தான் இருக்கும்.

  மறுபிறப்பைப் பற்றிக் கூற இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றது. இப்போதே எனது பின்னூட்டம் உங்கள் பதிவின் அளவை தாண்டிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துகள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது நண்பரே. உண்மைதான் தங்கள் பின்னூட்டம் எனது பதிவைவிட அதிகமாகிவிட்டது...

   Delete
 14. என்னக்குன்னா மறுபிறப்புல சுத்தமா நம்பிக்கை கிடையாது. இந்தப் பிறவியை முடிந்தவரை முழுமையாய் வாழ்ந்துவிட்டுப் போவோம். அதுதான் நமக்கெல்லாம் நல்லது. தங்கள் தளத்தில் சில எழுத்துப் பிழைகள் உள்ளன. திருத்திக் கொள்ளுங்கள். சந்திப்போம் தோழரே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் எண்ணமும் சரிதான் தோழி,, இப்பிறப்பிலே முடிந்தவரை வாழ்ந்துவிட வேண்டும். எழுத்துப் பிழைகள் இருப்பது எனக்கும் தெரியும் தோழி, வருத்தம் தான், முடிந்த வரை பிழையில்லாமல் தான் முயற்சி செய்கிறேன், எப்படியோ சில பிழைகள் வந்துவிடுகிறது. வருகைக்கும், தவறை சுட்டிக் காட்டியதற்கும் மிக்க நன்றி தோழி, சிந்திப்போம்...

   Delete
  2. தாங்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனது "கல்யாண வைபோகம் - பாகம் ஐந்து" வந்து விட்டது. தங்கள் கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்.

   Delete
  3. படித்து விட்டேன் நண்பரே... கருத்துரையும் வழங்கி விட்டேன்

   Delete
 15. மறுபிறப்புப் பற்றி நம்பிக்கை இல்லாவிட்டாலும் வாழ்வில் தவறிய சில விஷயங்களுக்காவே மறுபிறப்பென்று ஒன்றிருந்தால் வேண்டும் என நினைத்துக்கொள்வேன்.பூட்டுத் திறக்குமா !

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக தோழி, நம் வாழ்வில் நாம் தவறவிட்ட சில நிகழ்வுகளை மீட்பதற்க்காகவேணும் மறு பிறப்பு என ஒன்று இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதுவும் அந்த பிறப்பில் நம் இந்த பிறப்பின் நினைவுகளுடன் இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும், நம் சிறு தவறுகள் அனைத்தையும் நம்மால் திருத்திக் கொள்ள முடியும். நடக்குமா?
   பூட்டு திறப்பது நம் கையில் இல்லையே! அந்த மனிதர் திரும்பி வருவதாகக் கூறி சென்றுள்ளார். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

   Delete
  2. மறு ஜென்மம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு டாக்டரின் குறிப்பைப் படித்த நினைவை இங்கு கூறுகின்றேன். இது 10 வருடத்திற்கும் முன்பு மறுஜென்மத்தை
   பற்றிய எனது தேடலில் கிடைத்த விவரம். ஆதாரம் ஏதும் என் கையில் இல்லை. இந்த சம்பவம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு நடந்த விஷயம்.
   வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து ஒரு வீட்டைச் சேர்ந்த சிலர் ரயிலில் வேறு ஒரு ஊருக்கு ஏதே விஷயமாக சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களோடு அவர்கள் பெண் குழந்தையும் பயணம் செய்தது. அந்த ரயில் ஒரு ஊரைக் கடக்கும் போது, அந்த சிறுமி, அந்த ஊர் தன்னுடையது என்றும், அந்த ஊரில் தனக்கு வேண்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியது. குழந்தை ஏதோ பிதற்றுகிறது என்று பெரியவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஊர் போய் சேர்ந்தும் குழந்தையின் பிதற்றல் நிற்கவில்லை. வரிசையாக பல பெயர்களை கூற ஆரம்பித்தது. பல நபர்களின் பெயர்களை அவர்களின் பதவியோடும், தனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் அந்த குழந்தை தன்னுடைய பூர்வ ஜென்ம கதைகளை வரிசையாக கூறவே, பெரியவர்களும் இதை என்ன என்று தீர்மானமாக விசாரித்துவிடுவது என்று அந்த அடுத்த ஊருக்கு போய் விசாரிக்கிறார்கள். அங்கு குழந்தை சொன்ன அத்தனை நபர்களும், அந்த குழந்தை தன்னுடைய சொந்தங்கள் என்று கூறியவர்களும் இருந்தார்கள். இந்த விஷயம் ஆச்சரியமான ஒன்றாக இருந்தாலும், இரண்டு ஊர்க்காரர்களும் இதை ஒரு சோதனை மூலமாக கண்டறிய தீர்மானித்தார்கள். அந்த பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்களை இந்த குழந்தையை பார்க்க வரச் செய்தார்கள். ஆனால் இரண்டு பேருடைய பெயர்களையும் மாற்றி சொல்லுமாறு முன் ஏற்பாடு செய்தனர். அந்த ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட இருவரும், ஒரு நாள் அந்த குழந்தையை பார்க்க வந்தனர். ஆனால் அவர்களின் திட்டப்படி குழத்தையை ஏமாற்ற முடியவில்லை. குழந்தை இருவரின் சரியான பெயரை தெரிவித்ததுடன், உங்களுக்கு என்ன ஆயிற்று, ஏன் என்னை குழப்புகிறீர்கள் என்றும் கேட்டது. இப்போது வந்த இருவரும் திரும்பி சென்றனர். பின்னர் அந்த குழந்தை யாரை ரத்த சம்பந்த சொந்தங்கள் என்று கூரியதோ அவர்களே குழந்தையை பார்க்க வந்தனர். அந்த குழந்தையும் போன ஜென்மத்தில் தன்னுடைய மூத்த மகன் இவன், இளைய மகன் இவன் என்று சரியாக சொல்லியது. இது நடந்த போது அந்த குழந்தைக்கு 8 வயதோ அல்லது 12 வயதோ. ஆனால் அந்த குழந்தை, தனது பூர்வ ஜென்மத்து மகன்களை அவன் இவன் வாடா என்று ஒருமையிலேயே அழைத்தது. ஆனால் அது தனது போன ஜென்மத்து கணவனைக் கண்டதும் ஒரு வெட்கமும் நாணமும் அதன் முகத்தில் ஒரு பெரிய பெண்ணுக்கு வருவது போல வெளிப்பட்டது. கணவனைக் கண்டதும் தலையை குனிந்து கொண்டே பேசியது. பிறகு மறுபடியும் இந்த குழந்தையை அதன் பூர்வ ஜென்ம வீட்டிற்கு கூட்டிப் போனார்கள். வீட்டிற்குள் நுழைந்ததுமே அந்தக் குழந்தை கேட்டது இது யாருடைய வீடு, ஏன் இங்கே இருக்கிறீர்கள் என்று. அப்போதும் யாருக்கும் நம்பிக்கை வரவில்லை.

   ஹைலைட்டே இனிதான்.

   Delete
  3. ஹைலைட்டே இனிதான்.

   இப்போது அந்த பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம கணவர் அந்த குழந்தையிடம் ஒரு கேள்வி கேட்டார். அது, தனக்கும் தன் மனைவிக்கும் மட்டுமே தெரிந்த விஷயம் ஏதாவது ஒன்றை சொன்னால் மட்டுமே தன்னால் வந்திருப்பது மறுஜென்மம் எடுத்த தன் மனைவி என்று நம்ப முடியும் என்று சொன்னார். உடனே அந்த பெண் குழந்தை எழுந்து அந்த வீட்டை விட்டு வெளியெ செல்ல ஆரம்பித்தது. அனைவரும் விவகாரம் அவ்வளவுதான் என்று நினைத்தனர், அந்த குழந்தையின் பின்னேயே சில பேர்கள் சென்றனர். வெளியே சென்ற அந்த பெண் குழந்தை தூரத்தில் இருந்த ஒரு சிதிலமடைந்த வீட்டை தேடிச் சென்று, அந்த இடிந்திருந்த வீட்டின் சுவரில் இருந்த ஒரு மறைவான பொந்தில் கையை விட்டு அதில் இருந்து சில தங்கக் காசுகளை எடுத்து வந்து தனது பூர்வ ஜென்ம கணவன் கையில் கொடுத்தது. பிறகு அதன் விளக்கத்தை அந்த வயாதான கணவனே விவரித்தார். தானும் தன் மனைவி மட்டும் தனியாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் இந்த காசுகளை, தான் தன் மனைவியிடம் கொடுத்ததாகவும், மனைவி அதை மறைத்து வைத்ததாகவும் இது தங்கள் இருவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும், மறைந்திருந்த அந்த காசுகளை தாமே மறந்து விட்டதாகவும், தம் மனைவி இறந்த பின் சில வருடங்கள் கழித்து பழைய வீடு இடிந்து விழுந்ததால் அனைவரும் இப்போது புதிய வீட்டிற்கு மாறிவிட்டதாகவும், வந்திருப்பது உண்மையிலேயே தனது மனைவிதான் என்றும் அனைவருக்கும் கூறினார். அது மட்டுமல்ல
   இது இத்துடன் நிற்கவில்லை. குழந்தை யாரை தன் மகன்கள் என்று கூறியதோ அவர்களுக்கே 30, 40 வயதிருக்கும். கணவனுக்கோ 60க்கு மேல் இருக்கும். குழந்தையோ தனது கணவனோடு வாழவேண்டும் என்று கேட்டது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்று அவரவர் தமது ஊருக்கு திரும்பினர். குழந்தைக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வந்ததால் அதன் குழந்தை பருவமே சிக்கலாக ஆனது. கல்லூரி படிப்பையும் முடித்தது. ஆனால் போன ஜென்ம வாழ்க்கையும் இந்த ஜென்ம வாழ்க்கையும் ஒன்றை ஒன்று சந்திக்க முடியாமல் அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடுமையான மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. அதன் பின் அதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல நிலைக்கு வந்தது. ஆனால் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தார் அந்த பெண். உளவியல் சிகிச்சைக்குப் பிறகு தன்னுடைய பழைய வாழ்க்கை சம்பவங்கள் மறக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டு வேறு வாழ்க்கையை வாழ்ந்தார்.
   பூர்வ ஜென்ம ஞாபகம் என்பது ஒரு வரமல்ல, அது ஒரு சுமை, சாபம். இல்லையென்றால் கடவுள் அதை மறை பொருளாக, அடுத்தடுத்த ஜென்மங்களில் நினைவில் தொடர முடியாதவாறு ஏற்படுத்தி இருக்க மாட்டார். யோசித்துப் பாருங்கள், இந்த வாழ்க்கையின் நினைவுகளையே நம்மால் சில சமயங்களில் சுமக்க முடிவதில்லை. மேலே சொன்ன சம்பவம் ஒரு முந்தய ஜென்ம நினைவுகள் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது என்று பார்த்தால், ஒவ்வொருவருக்கும் இருந்த பல ஜென்ம நினைவுகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? அதனால் மறு ஜென்மத்தைப் பொறுத்தவரையில் மறதி என்பது ஒரு வரப்பிரசாதமே. பூர்வ ஜென்ம ஞாபகம் கூடு விட்டு கூடு பாயும் முறையில் வாழ்ந்தால் மட்டுமே உதவியாக இருக்கும்.

   Delete
  4. நான் கேள்விப்படாத தகவல் நண்பா, பூர்வ ஜென்ம நினைவுகள் என்பது கண்டிப்பாக ஒரு சுமைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பல விஷயங்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி...

   Delete
 16. அதிகம் யோசிக்கத் துாண்டும் பதிவு.
  அலசல் தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
   அலசல் கண்டிப்பாக தொடர்ந்துகொண்டே இருக்கும்...

   Delete
 17. பூட்டு திறக்காது

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே. பூட்டு திறப்பது என்பது நமது கையில் இல்லை நண்பரே, அனைத்தும் அவன் செயல். தங்கள் பதிலிலிருந்து தங்களுக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை என்று தெளிவாக தெரிகிறது.

   வணக்கம்...

   Delete
  2. இங்கு இன்னுமொரு விஷயத்தை கூற வேண்டும்.

   ஒவ்வொருவரும் உயிர் பிரியும் நேரத்தில் யாரை நினைத்தபடி இறக்கிறார்களோ, எதை நினைத்தபடி இறக்கிறார்களோ அதுவாகவே மீண்டும் பிறக்கிறார்கள், ஆனால் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப. மகளை நினைத்தபடி இறப்பவன், பெண்ணாகக் பிறக்கலாம், மகனை நினைத்தபடி இறக்கும் தாய், ஆணாக பிறக்கலாம். இப்படி ஒரு சாத்தியம் இருக்கிறது. பூட்டை பூட்டியவர் உயிரை விடும்போது மீண்டும் பிறந்து அந்த பூட்டை திறக்க வேண்டும் என்று தீவிரமாக நினைத்தபடி இறந்திருந்தால் நிச்சயம் மறுபடி பிறந்து அந்த பூட்டை திறப்பார். இதில் உள்ள சிக்கல் எண்ணவென்றால், அவர் எண்ணத்தின் தீவிரம் மற்றும் மறுபிறவியை கரெட்டாக Define செய்து இருந்தால் மட்டுமே. உங்கள் எண்ணத்தை நீங்கள் கரெக்ட்டாக Define செய்தால் நீங்கள் இந்த பிறவியிலேயே நீங்கள் நினைத்தை எல்லாம் அடைய முடியும். இதைத்தான் அனைத்து உளவியல் தத்துவ ஞானிகளும் சொல்கிறார்கள். Define செய்வது என்றால், கார் வேண்டும் என்று நினைப்பது ஒரு எண்ணம், ஆனால் அது சரியான இலக்கினை நோக்கி குறி பார்க்கப்படாத எண்ணம். இந்த ப்ராண்ட் கார், இந்த விலை, இன்ன கலர் என்று ஆசைப்படுவது Define செய்யப்பட்ட எண்ணம். நண்பர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். சரி இப்போது நான் ரோல்ஸ் ராய்ஸின் 4 கோடி விலையுள்ள காரை Define செய்து எண்ணிவிட்டேன் ஏன் எனக்கு அது கிடைக்கவில்லை என்று கேட்டீர்கள் என்றால், என்ன தான் தீவிரமாக நாம் நம் ஆசைகளை Define செய்து எண்ணினாலும் இன்று நீங்கள் எண்ணீய எண்ணம் ஒரு விதைதான். அந்த விதை முளைத்து ஆலமரமாக வளர்வது போல உங்கள் எண்ணமும் முளைத்து, முதலில் உங்களை அந்த 4 கோடி விலையுள்ள காரை வாங்கும் தகுதி உள்ளவராக மாற்றிய பின்னரே உங்களால் அந்த காரை அடைய முடியும்.
   நாம் எதை அடைய ஆசைப்படுகிறேம் என்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட அந்த ஆசை கனவுகளை அடைய நாம் நம்மை எவ்வளவு மாற்றிக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது. நம்மில் ஒரு மாற்றம் ஏற்படாமல் நாம்மால் நாம் நினைப்பதை அடைய முடியாது.
   பூட்டை பூட்டியவர் மீண்டும் பிறந்திருக்கலாம். திறக்கும் வழியும் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் அந்த பூட்டை திறந்தால் சந்திக்க நேரும் பிரச்சனைகளையும், ஆபத்துக்களையும் நினைத்தே அதை செய்யாமல் விட்டு இருக்கலாம்.
   உதாரணத்திற்கு, இறைதூதர் ஜீசஸ் இன்று மீண்டும் பிறந்திருந்து, வாடிக்கனுக்குள்ளே போக முயற்சி செய்தால் என்ன நடக்கும்?
   பகவான் கிருஷ்ணர் மீண்டும் பிறந்து திருப்பதிக்கோ, பண்டரிபுரத்திற்கோ சென்றால் என்ன நடக்கும்?
   நண்பர்கள் யோசித்துப் பாருங்கள்.

   Delete
  3. யோசித்தால் நடக்கப்போவதை நினைத்து வியப்பாகத்தான் உள்ளது நண்பரே, தாங்கள் எனக்கு மறு பிறப்பு பற்றிய தகவல்களை மேலும் கூறி, என்னை ஒரு முடிவுக்கு வர வைத்துவிட்டீர் நண்பரே, தெளிவாகிவிட்டேன்...

   Delete
 18. நண்பரே என்ன முடிவுக்கு வந்தீர்கள், என்ன தெளிவு பெற்றீர்கள் என்று இங்கே பகிர்ந்து கொண்டால் நானும், மற்ற நண்பர்களும் தெளிவு பெறுவோம், செய்வீர்களா!
  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.
  www.picturesanimated.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. இதனை எழுதும் போது ஒரு தெளிவில்லாமல் தான் எழுதினேன், ஆனால் இப்போது தங்கள் பதிலைப் பார்த்தோது ஒரு முடிவுக்கு வந்துள்ளேன்,அதாவது மறு பிறப்பு உண்டு என்பதே. ஆனால் அது அனைவருக்கும் வாய்க்கிறதா என்றால் சந்தேகம் தான். மறு ஜென்மமானது கடந்தகால நினைவுகள் இல்லாமல் இருக்கும் என்பதே. அதுதான் நல்லதும் கூட. நாம் செய்யும் காரியங்களுக்கு ஏற்ப்பவே நமக்கு எதிர்காலமும் மறு பிறப்பும் ஏற்ப்படுகிறது என்பதும்.
   தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.

   தங்கள்பின்னூட்டங்கள் இன்னும் பல பதிவுகள் போடும் அளவிற்கு நீண்டுவிட்டது. தங்கள் வரவு எனக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தி விட்டது.

   Delete
 19. ;-)))

  EXACTLY. மிகச் சரியாக சொன்னீர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  தெளிவு பெற்றேன்.

  பிரிவோம் சந்திப்போம்.

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  ReplyDelete
  Replies
  1. நாம் பிரிய வேண்டாம் நண்பா, எப்போதுமே இணைந்திருப்போம்...

   அதுதான் சாலச்சிறந்தது...

   Delete
 20. இந்த பிறப்பு பிறந்து விட்டோம் . இதனை முழுமையாக்குவோம்.மற்றவர் நம் இறப்பிற்கு பின் எத்தனை நாள் நினைக்கப் போகிறார்கள் என்பது தான் இறப்பின் பின் நாம் விட்டுச் செல்லும் அடையாளம்.

  எனவே,
  நாம் செய்ய நினைத்த உதவிகள்
  சொல்ல மறந்த நன்றிகள்
  கேட்க எண்ணிய மன்னிப்புகள்
  சொல்ல நினைத்த அன்பான வார்த்தைகள்
  கொடுக்க மனமில்லா மன்னிப்புகள்
  நினைத்தவுடன் உடனே செய்து விட வேண்டும் . ஏனெனில் அதற்கான சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காமலே கூட போய் விடலாம்.

  நம் சின்ன புன்சிரிப்பு , அன்பான அணுகுமுறை,கனிவான வார்த்தை,பிரச்சனைக்கு செவி மடுத்தல்,உண்மையான வாழ்த்து,சின்ன கரிசனம் ஆகியவை ஒரு வாழ்வையே மாற்றும் என்பது பல நேரங்களில் நமக்கு புரிவதில்லை.(ஒரு ஆங்கில மேற்கோளின் தமிழாக்கம்)

  இது என் பகிர்வில் வாழ்வின் தேடல் 1 -மரணத்திற்குப் பின் எனும் பதிவில் எழுதியுள்ளேன் முடிந்தால் பதிவைப் படியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் மிகவும் அருமையாக கூறியுள்ளீர்கள் தோழி. மேற்கோளும் அபாரம். இன்றே நாம் செய்ய நினைத்ததை செய்து விடுவோம்....

   கண்டிப்பாக தங்கள் பதிப்பை நான் படிக்கிறேன்.

   வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழி...

   தொடர்ந்து வருகை தந்து எமை சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்...

   Delete
  2. தாங்கள் தளத்தில் என்னால் மரணத்திற்கும் பின் என்ற பதிவைக் காண வில்லை தோழி, இணைப்பைக் கொடுத்தீர்கள் என்றால் மகிழ்வேன்...

   Delete
 21. naNbar vetRivel chinnaduRai avargaLukku,
  badhil kadidham anuppiyadharkku nandRi. maRupiRavi patRiya aaraaichi padikka suvaarasyamaai irundhadhu. aayinum islaam indha kootRai aaNiththaramaai maRukkindRadhu. naNbar haajamydeenum adhaiyE kuRippittu irundhaar. kaalam chendRa marupiravi aaraaichchiyaaLar kaalappettagam oruvELai thirakkappattaal adhu oru ulaga adhisayamaaidhaan irukkum. poruththiruppOmE. anwar baashaa, bashasdesk@gmail.com ilirundhu.nandRi.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்... ஆமாம், யார் கண்டது... காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்ல வேண்டும்...

   Delete
 22. thelastfool1:28:00 AM

  மக்களின் மூடத்தனத்தை அதிகரிக்க எண்ணும் உம்போன்ற நபர்களின் எண்ணிக்கை இன்னும் மேம்படாமலிருத்தலே நன்று!

  ReplyDelete
 23. This comment has been removed by the author.

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...