Aug 26, 2012

நம்மை (தமிழை)ப் பற்றி உலகத்தார் கூறுவது

செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும், மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின் அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக் காட்டியிருப்பது காண்க.

Aug 25, 2012

அறிஞர்கள் வாக்கு

உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம், கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது   ஹென்றி போர்டு.

உங்கள் காலில் நில்லுங்கள், அது தானாக உங்களை வழி நடத்திச் செல்லும் சுவாமி சிவானந்தர்.

பதவிகளால் மனிதர்கள் மதிக்கப் படுவதில்லை. அவர்கள் மேன்மை குணங்களால் மட்டுமே   ஷேக்ஸ்பியர்

உங்கள் வாழ்வில் வெற்றி கிட்ட விரும்பினால், விடா முயற்ச்சியை உங்கள் இதய நண்பனாக்குங்கள்   தாமஸ் ஆல்வா எடிசன்.

உழைப்பு எப்போதும் வீண் போகாது. உழைப்பிற்கு தகுந்த பலன் ஒரு நாள் நிச்சயம் கிடைக்கு   மாவீரன் நெப்போலியன்.

எந்த சாதாரண மனிதனும் அற்புதங்களை நிகழ்த்தி விடலாம். அதற்க்கு தேவை, கடுமையான உழைப்பு மட்டுமே   தாமஸ் புல்லர்.

ரோஜா செடியில் முள் இருப்பதைப் பார்த்து வருந்தாதே; முள் செடியில் ரோஜா இருப்பதைப் பார்த்து சந்தோஷப் படு    ஆவ்பரி 

முயற்ச்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே, அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது   எமர்சன்

மனிதர்கள் தங்கள் பற்களினாலும், நாக்கினாலும் தங்களுடைய கல்லறையைத் தாங்களே தேடிக்கொள்கிறார்கள்  தாகூர் 

போதுமென்ற மனநிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறிலை   சாரதா தேவியார்.

நற்குணம் உள்ள இடத்தில் வணக்கமும், இன் சொல்லலும் இருக்கும் கன்பூஷியஸ் 

தங்கள் மேலான கருத்துகளை கூறிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!!!

Aug 18, 2012

தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்: இந்தியத் தமிழனின் சோதனை

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிகக்க மகிழ்ச்சி, உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு. நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில். இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம், நான் கூறுவது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

Aug 17, 2012

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி

உலகில் அதிக சொற்கள் கொண்ட மொழி எது? ஆங்கிலமா? என்று பலரும் கேட்கிறார்கள். ஆக்ஸ்போர்டு (Oxford) அகரமுதலி ஒரு பக்கத்தில் இந்த கேள்வியை எழுப்பி விடையும் தந்துள்ளனர்.
20 தொகுதி கொண்ட ஆக்ஸ்போர்டு அகரமுதலியில் 1,71,476 சொற்கள் உள்ளன. ஆனால் மொத்தம் 250,000 சொற்களுக்குக் குறையாமல் இருக்குமாம்.
சொற்பொருள்களைக் கணக்கில் கொண்டால் முக்கால் மில்லியன் (7,50,000) இருக்கலாம். ஆனால் தமிழில் 12,000 பக்கங்கள் கொண்ட தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியில் ஏறத்தாழ 5,00,000 தமிழ்ச்சொற்கள் உள்ளன.

Aug 14, 2012

இரவின் புன்னகையின் சுதந்திர தின சிறப்புரை

வலைதள நண்பர்களுக்கும், இந்தியக் குடிமக்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். பல சர்ச்சைகளுக்கும், சிக்கல்களுக்கும் இடையில் நாம் நமது பாராளுமன்ற ரகளைகளுக்கு இடையில் நமது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்திற்கும் நமது குடியரசுத் தலைவரும், பிரதமரும் ஏதேனும் ஒரு யாரோ எழுதிக்கொடுத்த ஒரு அறிக்கையை படிப்பர், அதில் ஒரு வேடிக்கை என்ன என்றாள், அவர்கள் கூறுவது அனைத்தும் அன்றைக்கு மட்டுமே அவர்களுக்கு ஞாபகம் இருக்கும், அடுத்த நாள் அதனை மறந்து விடுவர். நாமும் மறந்துவிடுவோம், படிக்கும் அவர்களும் மறந்து விடுவர்.

Aug 12, 2012

அப்பன் பேர் தெரியாத தமிழர்கள், தமிழ் போற்றும் பிரான்ஸ்!

நிலவன்பனின் ஒரு பதிவைப் படித்தேன், அது மிகவும் அருமையாக இருந்தது. உடனே பகிர்ந்துவிட்டேன், உலகிலேயே அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட மதம் சாராத ஒரே இலக்கியம் திருக்குறள் மட்டுமே! இன்று நேற்றல்ல எத்தனை கோடி ஆண்டுகளானாலும் அப்போதும் பயன்படும்! இலக்கிய ரீதியாகவும், உலக தத்துவங்கள், ஆராய்ச்சிகள் வழியாகவும் ”தமிழ்” அறிய காரணம் திருக்குறள் என்றால் அது மிகையாகாது.

Aug 10, 2012

ஊடகங்கள் மறைத்த லிபியாவின் நிஜ முகம்

என்றோ  இணையத்தில் படித்து சேமித்து வைத்தது, தற்செயலாக பார்த்தேன்.  நன்றாக இருந்தது. அதனால் அனைவரும் படிக்கட்டும் என்று வெளியிடுகிறேன். இதன் முழு உரிமையாளன் நான் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவை 800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டனர். சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துக்கள் மீது ஆட்சி நடத்தினார்கள். அதுவும் 8 நூற்றாண்டுகள். எப்படி முடிந்தது?

Aug 5, 2012

அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்

வரலாறு  என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும், அது மிகவும் சரியானதுமாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும்? சிறிது ஞாபகப்படுத்துங்களேன்.