Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

Sep 19, 2013

இருண்ட கால தேடல்: களப்பிரர்களும் தமிழ் மொழி வளர்ச்சியும்

கடந்த இரு பதிவுகளில் களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் காலம் ஏன் இருண்ட காலம் எனப்படுகிறது என்பது பற்றி பேசியிருந்தோம். இக்காலத்தில்  நடைமுறையில் இருந்ததாக  கூறப்படும் தமிழ் எழுத்து முறை மற்றும் இலக்கிய மாற்றங்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம். 

களப்பிரர்கள் காலத்தில் முக்கியமாக தமிழகத்தில் இரண்டு வகையான மாற்றங்கள் முன் எப்போதும், எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நடந்துள்ளது. அதாவது

Sep 11, 2013

இருண்டகால தேடல்: யார் இந்த களப்பிரர்கள்?

கடந்த பதிவில் (மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்)  களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள்  யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.

Aug 17, 2013

நாம் (தமிழ்) அழிந்து கொண்டிருக்கிறோமா? சில கேள்விகள்...!


அனைவருக்கும் வணக்கம், எனக்குள் பல நாட்களாக தோன்றிக்கொண்டிருந்த கேள்விகளின் பதில் தான் இந்த பதிவு. அனைவரும் கூறுகிறார்கள் தமிழ் மொழி தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று. இன்னும் சில பத்தாண்டுகளில் தமிழின் தடமே அழிந்துவிடும். அதாவது தமிழ் பேச்சு வழக்கிலிருந்து அழிந்து, அது தற்போதுள்ள சமஸ்கிருதம், கிரேக்கம் மற்றும் லத்தீன் போன்று ஏட்டளவில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அது தன் சுய மதிப்பை இழந்துவிடும் என இன்னும் பலவாறு வதந்திகள் நீண்டுகொண்டே இருக்கிறது... ஆனால் எனக்கு இவற்றில் உடன்பாடு என்பது சிறிதும் இல்லை...

Aug 7, 2013

உதிரும் நான் -12

என் உறக்கம், என் இரவு
என அனைத்தையும்
களவாடி விடுகிறாள்...

நான் உறங்கிவிட்டதாய் நினைத்து 

அவள் கொடுக்கும் ஒற்றை 
முத்தத்தில்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Aug 5, 2013

அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்

தேங்காய்ப் பூக்களாய்
உதிரும் அவள்
புன்னகையை
மொத்தமாக 
உண்ணத் துடிக்கும்
நான்...

சிறு சிறு தூறல்களாய்
நெடு நேரம் நனைக்காவிட்டாலும்
கோடை மழையாய் அவளை
சட்டென அணைக்க
ஆசைப்படும் நான்...

அவளைப் பார்த்து
மலரும் தாழம்பூ'வாய் 
தினமும் மலர நினைக்கும்
என் காலை...

அந்தி மாலையில்
கூவும் குயிலுக்குப் பதில்
நான் உரக்கக் கூப்பிட 
நினைக்கும்
அவள் பெயர்...

அவள் கண்ணசைவில் 
ஊஞ்சலாடிக்
கொண்டிருக்க்கும்
என் காதல்...

அவள் காதலுக்காகவே 
ஏங்கிக்கொண்டிருக்கும் 
என் உயிர்...

என இன்னும் 
எத்தனையோ, 
அவள் கேட்க மறந்த 
என் காதல் கனவுகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...




Jul 26, 2013

உதிரும் நான் -11

மழலை  தன் தாயிடமிருந்து
சிறுக சிறுக பேசக்
கற்றுக்கொள்வது போல்

நானும் அவளிடமிருந்து
மெல்ல மெல்ல
கற்றுக்கொண்டிருக்கிறேன்
காதலை...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jul 2, 2013

உதிரும் நான்- 7

ஏனோ நீ
சூடிச் செல்கையில் மட்டும் 
பருத்திப் பூவும்
வாசம் பெற்று என்னை
கிறக்கமடைய
செய்வதேனடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Jun 25, 2013

பொய்க்கும் நதிகள்

தன் கரைப் புற்க்களினால் 
தானாக சுரந்தோடும் பசும்பாலுடன்
கரையோர மரங்களின் 
மனம் பரப்பும் பூக்களோடும்
இளம் காளையரின் தோல் நனைத்து
கன்னிப் பெண்களின் மார் தழுவி..

தன் மடியில் துள்ளித் திரிந்த மீன்கள்
ஒற்றைக் காலில் காத்திருந்து இறைதேடும் 
பச்சிகள் என் யாவற்றையும் இழந்து...

பாலிதீன் குப்பைகளையும் நகரக் கழிவுகளையும் 
தன்னோடு சுமக்கும் நிலை கண்டு
மனம் வெதும்பி, மழையைப் பொய்த்து 
கருவேல மரங்களாயும் பொட்டல் நிலமாகவும் 
மாறிக்கொண்டிருக்கும் நதிகள்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jun 23, 2013

எதிர் கால நினைவுகள் - மீள் பதிவு

அது ஒரு மாலைப் பொழுது, நானும் என்னவளும் எங்கள் ஊர் அழகிய நீரோடையில் காலாற நடந்து  உலாவிக் கொண்டிருந்த நேரம், மாலையில் சிறு உலா தான் அது. எந்தன் கையைப்பிடித்த படியே என்னுடன் பல கதைகள் பேசி நடந்து கொண்டே வந்தாள் என்தன் தோழி. மாலையில் நடந்த அந்த இரவுக்கும் வெளிச்சத்திற்கும் நடந்த அழகிய போராட்டத்தை ரசித்த படியே இருவரும் வீடு நோக்கி நடந்தோம். அந்த மாலைப் பொழுதின் ரம்யம் எங்களை அப்படியே கட்டி வைத்தது. அப்படியே என்னுடன் வந்த என்தன் அழகு ராட்சசியும் என்னை அவளது கரங்களால் சேர்த்து என் கரங்கள் வழியாக  என்னைக் கட்டிக் கொண்டாள்.

Jun 11, 2013

உதிரும் நான் -4


நத்தை
 தன் முதுகில் 
சுமந்து செல்லும்
நீர்க்குடம் போலத்தானடி
என் காதல்...

என் சுமையும்
அதுதான்...
என்னை உயிர்ப்பிப்பதும்
அதுதான்-


-------வெற்றிவேல்...
  சாளையக்குறிச்சி...



Jun 5, 2013

உதிரும் நான் -2


என் தோட்டமெங்கும் 
வண்ண வண்ண பூச்செடிகள்...ஆனால்

அது பூத்துக் குலுங்குவதெல்லாம்
உன்னையும் 
உன் புன்னகையையும் 
தானடி...

-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.


May 31, 2013

உதிரும் நான்- 1


என்னைப் போலவே, என்
கவிதையும் நீ(உயிர்)யின்றி
வாடுதடி...

ஒரு முறையேனும் வாசித்து- 
உயிர் கொடுத்துச் 
செல்லேன்...



-------வெற்றிவேல்,
-சாளையக்குறிச்சி.



May 28, 2013

மியூசியத்தில் சுட்ட படங்கள்:

நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்றேன், அது இரண்டாவது முறை. ஏற்க்கனவே சில வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன், ஆனால் அப்போது என்னால் எந்தப் படமும் எடுக்க முடியல, ஏன்னா அப்போல்லாம் நம்மகிட்ட மொபைல் இல்ல. இந்த முறை செல்லும்போதே படம் எடுக்கலாம்னு டோக்கன் கேட்டான். டோக்கன் 200 ரூபா. நாம தான் காச ஆத்துல போட்டாலும் போடுவோம் ஆனால் இது மாதிரி மட்டும் செலவு பண்ண மாட்டோமே! நுழைவுக் கட்டணம் மட்டும் செலுத்திட்டு உள்ளப் போனேன், நானும் என் இஷ்ட்டத்துக்கு படம் எடுத்துகிட்டு இருந்தேன், வளச்சி வளச்சி எடுத்தேன்னா பார்த்துகோங்களேன்.

May 8, 2013

கவிதைத் துளிகள்


கவிதை எதற்கு :

எண்ணமும் எழுத்தும் 

நீயென்றானபின் – இனி 

கவிதைகள் எதற்கு, 

கதைகள் எதற்கு- நீ 

ஒருத்தி மட்டும் 

போதுமே!




பெளதீக விதி:

என் மனம் வான் முகிலாய்

பறக்கவும் செய்கிறது...

குளிர் மழையாய் விழவும்

செய்கிறது- யாவும் உன்னால்.



இதற்க்கு நியூட்டனின் பெளதீக

விதியில் விளக்கம் ஏதேனும்

உண்டா?

சொல்லேன்...





Apr 28, 2013

விட்டில் பூச்சியல்லடி நான்



உன் கோபக் கனலில் அருகில்
வந்தவுடன் எரித்துவிடும்
விட்டில் பூச்சியென்று
நினைத்தாயா என்னை!

நான் தேடிச் செல்வது –சிறு
வெளிச்சமும் அல்ல. நீ
எரித்தவுடன் சாம்பலாக
விட்டில் பூச்சியுமல்ல நான்.
பீனிக்ஸ் பறவையடி...

சுடும் சூரியன் எனத் தெரிந்தும்
உன்னை நோக்கியே
பறந்துகொண்டிருப்பேன்- உன்னாலே
நித்தமும்
மடிவதற்க்காய்!!!

................................வெற்றிவேல்...

Apr 26, 2013

காதல் துளிகள்





என் கனவு:

என் கனவின் தொடக்கம்

எதுவாகினும்- அது

ஏனோ சேருமிடம் மட்டும்

நீயாகிறாய்...



முரண்பாடு:

எத்தனை முறைதான் உன்னை

எழுத முற்ப்பட்டாலும்- மை

தீர்ந்து, சொல் காணாமல்

போய்விடுகிறது.



உன்னைப் பற்றிதான் எழுத

முடிகிறதே தவிற- உன்னை

எழுதிய பாடில்லை...!



என் தோஷம்:


என்  மனம்


உன்னை நினைக்கும்

போதெல்லாம்

பித்துப் பிடிக்கிறதே!


இதன் பெயர் தான்

கன்னி தோஷமோ!



மாற்றம்: 

புறமெங்கும் அனல் வெயிலாய்

புழுதிக் காற்று பறக்க...


அங்கமெங்கும் குளிர் காற்றாய்

புயல் அடிக்குதடி- இந்த மாற்றம்

யாவும் உன்னால் தானே!



இன்னும் மிச்சம் ஏதேனும் உண்டா!

பார்க்கும் பார்வையில் மட்டும்

என் ஐம்புலனங்களில் தீயை விதைத்து

செல்லும் பெண்ணே!!!


இன்னும் என்னை என்னவெல்லாம்

செய்வதாய் உத்தேசம்...

                                  -வெற்றிவேல்


Apr 21, 2013

நினைவெல்லாம் நீதானே!




காலைக் கருக்கள் விழிப்பிலும்
   காதல் கனவுகளை சுமந்தபடி உன் நினைப்பு...

நீராடும் வேளையிலும்
   நெஞ்சாங் குழிக்குள் உன் நினைப்பு...

ஆனந்தச் சிரிப்பின் மகிழ்ச்சியிலும்
   அலையலையாய் உன் நினைப்பு...

காலை உணவின் சூட்டினூடே
   கசிந்து வரும் உன் நினைப்பு...

நீ என்னை நினைத்து வரும் விக்கலிலும்
   தித்திக்கும் உன் நினைப்பு...

சித்திரை வெயிலின் புழுதிக் காற்றிலும்
   வீசும் காற்றில் வசந்தமாய் உன் நினைப்பு...

அந்திக் கருக்கும் நேரத்திலும்
   அடி மனதில் உன் நினைப்பு...

கோவிலுக்குச் செல்லும் வேளையிலும்
   தேவதையானவளின் திகட்டாத நினைப்பு...

இரவுக் கனவினுள்ளும் தலையணையில்
சேகரித்தபடி அடுத்தநாளின் தேடலுக்கான
தவழ்ந்து வரும் அடங்காத உன் நினைப்பு...

..................................................... வெற்றிவேல்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக நானே விருப்பட்ட இடத்தில் மீள முடியாமல் தொலைந்த காரணத்தினால் என்னால் இங்கு வர முடியவில்லை.. ஆகையால் தான் பதிவுகள் போட இயலவில்லை, நண்பர்கள்/ தோழிகளின் தளத்திற்கு செல்ல இயவில்லை. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.

Nov 21, 2012

உயிர் முடிச்சு

உயிரில் எங்கேயோ
போட்டுக்கொண்ட முடிச்சு!
நட்பாய், காதலாய்!

நீ போட்ட முடிச்சா? இல்லை
நான் போட்ட முடிச்சா? இல்லை
நாம் நமக்காக போட்டுக் கொண்ட
முடிச்சா இது!!!

முடிச்சின் இரு துருவங்களாய்
நாம்! முன் பாதி நீ!
பின் பாதி நான்?

நெருங்கி வந்து உன்னுடன்
தொடரலாம்
என்றாலும், விலகிச் சென்றே
உயிரைக் குடிக்கிறாய்!!

அவிழ்த்துக்கொள்ள ஆசைப் பட்டு
விலகினாலும்
முடிச்சை இறுக்கி
உயிரை வாங்க விழைகிறாய்!

இருவரும் விலக முற்ப்பட
நம் நட்பு மட்டும்
முடிச்சில் மரணிக்க
எத்தனிக்கிறது நமக்காய்...

........................................வெற்றிவேல்...



Nov 17, 2012

கேள்விகளால் ஆனவள் ! கேள்வியாய் ஆனவள் !

வெறுமையாய் இருந்த என்
மனக் காகிதம் ...

கிறுக்கக் கூடத் தெரியாமல்
இருந்த நான்...

அழகாய் உள்நுழைந்தவள்
உயிரோவியமாய் ஆகிவிட்டாய்...

சில நேரம் அழகிய கவிதைகளாய்,
மனம் வருடும் ஓவியமாய்,
கடந்து செல்லும் கனவுகளாய்..

எப்படி நான் வரைந்தாலும் முடிவில்
மட்டும் தவறாமல் வந்து
நனைத்து விட்டுச்
செல்லும் மனச் சாரலாய் நீ ...

என் மன ஏட்டில் நான் வரையும்
எழுத்து, சொல்,
தொடர் புள்ளி, கார்ப் புள்ளி,
தவறாமல் வந்து முடித்து வைக்கும்'
முற்றுப் புள்ளி...
யாவும் நீயே!!!

காரணமில்லாமல் தோன்றும்
ஆச்சர்யம், வியப்பு, மகிழ்ச்சி
என நான் உணரும்
யாவும் நீயே...

ஆனால்  முடிவில் மட்டும்
தவறாமல்
கேள்விக் குறியாய் மட்டும்
நின்று கொள்கிறாய் என்னுள்...

விடையாய்  வரும் காலம் எப்போது???


Nov 13, 2012

இன்று எனக்கு தீபாவளி தானா?

காலையில் எழுந்தாள்
மேகம் கரைத்த மழையைக் கொண்டு
நீராடினாள்- என்
அழகு தேவதை...

வைகறையில் திரண்டிருந்த
இருட்டு அனைத்தையும் சுருட்டி
உடையாக்கிக் கொண்டு
கதிரவனுக்கும் வழிவிட்டாள்...

கரும் மேகங்களுக்கிடையில்
தோன்றிய மின்னலைக் கொண்டு
தலையைத் துவட்டி
சிண்டு போட்டுக் கொண்டாள்...


நிலவின் முதுகைச் சுரண்டி
முகத்தில் பூசிக் கொண்டாள்
என் தேவதை...

கீழை வானில் தோன்றிய
விடிவெள்ளியை எடுத்து தன்
நெற்றியிலும் இட்டுக்கொண்டாள்...


என் கனவில் இவளைப் பார்த்த
என் விழிகளைப் பறித்து- நான்
காணும் இருளைக் குழைத்து
கண் மை பூசிக் கொண்டாள்...

இப்படி செய்த இவள் இன்று
முழு தேவதையாக- முழுமதியாகி
என் வானில் உலாவுகிறாள்...

இவளே இன்று என் வானில்
முழு நிலவாக உலாவ- எனக்கு
எப்படி இன்று தீபாவளி?

தீபாவளி-- இது நிலவற்ற
அமாவாசையில் கொண்டாடும்
தீபத் திருநாள் அல்லவா!!!

நான் என்று கொண்டாடுவது?

..................................................வெற்றிவேல்...