Jul 18, 2012

மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்

நேற்று எனது கிராமத்தில் ஒரு வயதான தாத்தா இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு என்ன நடக்கும், அவர் எங்கே செல்வார் என்று ஒரே குழப்பமாக இருந்தது, அந்த குழப்பத்தின் தேடல் தான் இந்த பதிவு.

அறிவியலானது பிரப்பினைப் பற்றி அதிகமாகவே விளக்கமாக கூறுகிறது, ஆனால் இறப்பு என்பது மனிதனுக்கும் சரி, அறிவியலுக்கும் சரி சற்று சவாலாகவே உள்ளது.

படங்கள் அதிகமாக இணைக்கலாம் என நினைத்தேன், சில படங்கள் அருவருப்பாக இருக்கும் காரணத்தினால் படங்களை இணைக்கவில்லை.
படங்களை இணைக்காமல் தான் முதலில் வெளிடிட்டு இருந்தேன், பிறகு நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தற்பொழுது படங்களையும் இணைத்து வெளியிடலாம் என முடிவு செய்து மறு பதிவு ஏற்றுகிறேன்.

அறிவியலோ இறப்பினை 'இதய துடிப்பு, மூளையின் செயல்பாடு (மூளை தண்டு உட்பட), மற்றும் சுவாசம் உட்பட உடலின் அனைத்து முக்கியமான உறுப்புகளும் செயல்பாடுகளை நிறுத்துதல்' என்று வரையறுக்கிறது.

ஆனால் மதங்கள் எப்போதுமே அறிவியலுக்கு மாறுபட்டுதான் நிற்கின்றது. உயிர் என்பது உயிராலும் உடலாலும் பிணைக்கப்பட்ட ஒரு கூடு ஆகும். எப்போது அந்த உயிர் நாம் வாழ இது தகுதி இல்லாத பிண்டம் என்று உடலை விட்டு பிரிகிறதோ அதனையே நாம் மதங்கள் இறப்பு வருணிக்கிறது.

சரி இனி நாம் நமது தலைப்பிற்கு வருவோம், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மதங்கள் ரீதியா முதலில் நாம் பார்ப்போம்.

இந்து மதம் என்ன கூறுகிறது என்றாள் இறப்பிற்குப் பின்னர் அவர்கள் தேவலோகம், வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் அல்லது நரகம் சென்று தங்கள் செய்வினைக்கு ஏற்ப சென்றுவிடுவார்கள். அவர்களது பாவம் கழியும் வரை மீண்டும் மீண்டும் புவியில் மறு ஜென்மம் எடுப்பார்கள் என்று கூறுகிறது.

புத்த மதம் என்ன கூறுகிறது என்றாள் மறு பிறவி என்பதையே அது ஆணித்தரமாகக் கூறுகிறது, அதற்க்கு சாட்சி தற்பொழுது அவர்கள் கடவுளாகப் பார்க்கும் தலாய்லாமாவே சாட்சி. அவர்கள் இறப்பிற்குப் பின் ஆன்மா மட்டுமே உடலை விட்டுப் பிரிந்து, வேறு ஒரு உடலில் சென்று சேர்ந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள்.

முஸ்லிம் மதத்திலும் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள்.

மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள்.
சரி இனி நாம் அறிவியலின் படி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்..
இறந்த பிறகு நமது உடலை ஒன்று எரிப்பார்கள், அல்லது புதைப்பார்கள். எரித்தால் 3 நிமிடங்களில் சாம்பல் தான். அப்படிப் புதைத்தால்........? கீழே காணலாம்.

இறப்பின் பொழுது என்ன நடக்கிறதென்றால்

இதயத் துடிப்பு நின்று விடுகிறது...
மூளை மற்றும் தண்டுவடத்தின் செயல்பாடு நின்று விடுகிறது
உடலின் தோல் பகுதி இறுகி சாம்பல் நிறமாக மாறிவிடும்.
அனைத்து சதைப் பகுதிகளும் தளர்ந்தது விடும்
குடல் மற்றும் சிறு நீர்ப்பை காலியாகத் தொடங்கும்..
உடல் பகுதிகள் அனைத்தும் விரைக்கத் தொடங்கும்..
உடலின் வெப்ப நிலையானது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 முதல் 1.5 டிகிரி வரை வீழ்ச்சியுறும்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு

தோல் நிறமானது ஊதா நிறமாகி மேழுபோல் ஆகாத தொடங்கும்
உதடுகள், கை மற்றும் கால் விரல் நகங்கள் மங்கலாகி இரத்தப் போக்கு இல்லாமல் வெளிர்ந்துவிடும்.
இரத்த ஓட்டம இல்லாமல் உடலானது நீல நிறத்திலிருந்து கருப்பாக மாறத் தொடங்கும் இதற்க்கு கன்றல் (Lividity) என்று பெயர்.
கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறத் தொடங்கும்.
இரண்டு கண்களும் மண்டையோட்டினுள் புதிய ஆரம்பிக்கும்.

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு

உடலின் வெப்பநிலை குறைந்து குறைந்து சில்லென்று ஆகிவிடும். இதற்க்கு rigor mortis என்று பெயர்.
உடலில் உள்ள இரத்தம் உறைந்து கரு ஊதாவாக மாறத் தொடங்கிவிடும்.
உடல் சில்லென்று ஆகுவதாலும், இரத்தம் உரைவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கெல்லாம் உடலானது இறகி விரிக்க ஆரம்பித்துவிடுகிறது.

12 மணி நேரத்திற்குப் பிறகு

உடலின் வெப்ப நிலை மேலும் குறைந்து இரிகிவிடும்.

24 மணி நேரத்திற்குப் பிறகு 

உடலின் வெப்ப நிலையானது சுற்றுச் சூழல் வெப்ப நிலைக்குத் திரும்பும்.
ஆண்களின் விந்த்கத்தில் உள்ள விந்து மரணமடைந்து விடும்.
தலை மற்றும் கழுத்து இப்போது ஒரு பச்சை-நீல நிறமாக தோன்றும்.
பச்சை-நீல நிறம் உடல் முழுவதும் பரவத் தொடங்கும்.
முகத்தின் அமைப்பானது மாறி, அடையாளம் மாற ஆரம்பிக்கும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு

உடலின் வாயுக்கள் விரிவடைந்து உடலானது வீங்கி விரிக்கும்.
உடலானது பெரியதாகி அழுகத் தொடங்கும். இது குளிர் பிரதேசத்தில் மெதுவாகவும், வெப்பப் பிரதேசத்தில் வேகமாவும் நடைபெறும்.
திரவங்கள் வாய், மூக்கு, கண்கள், காதுகள் மற்றும் மலக்குடல் மற்றும் சிறுநீர் ஆகியவை கசியத் தொடங்கும்..

உடலில் உள்ள முடிகள் அனைத்தும் உதிரத் தொடங்கும்.

மூன்று வாரங்களுக்குப் பிறகு

தோல், முடி, நகங்கள் ஆகியவை உடலிலிருந்து உதிரத் தொடங்கும்.
உடலின் அதிக அழுத்தத்தைத் தாங்காமல் தோலின் மீது வெடிப்பும், பிளவும் தோன்றும்.
எலும்புகள் அனைத்தும் மண்ணில் மக்க ஆரம்பித்து விடும்.
உடலின் பல் மட்டுமே எஞ்சி இருக்கும். ஏனெனில் இது மட்டும் தான் உடலில் மிகவும் வலிமையானப் பொருள்.

ஆதலால் யாரும் தினமும் காலையில் பல் துலக்க மறக்க வேண்டாம்...

மூன்று மாதங்களுக்குப் பிறகு

வேற என்னங்க நடக்கும் புதைத்த இடத்தில் புள் முளைக்கத் தொடங்கிவிடும்..

தங்கள் கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.

38 comments:

 1. Anonymous11:43:00 PM

  நல்ல அலசல்..படம் இணைக்காதது நல்லது தான் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்தமைக்கும், கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி...

   சில படங்களை தேர்வு செய்தேன், அவை வெளிடிடும் படி இல்லை... ஆதல்லால் இணைக்கவில்லை...

   Delete
  2. "இந்து மதம் என்ன கூறுகிறது என்றாள்" இந்த சொற்றொடரை கவனித்தீர்களா? என்றாள் என்று பதிந்திருக்கிறீர்கள். என்றால் என்று இருக்க வேண்டுமல்லவா? தமிழ் எழுதும்போது ல ள போன்ற எழுத்துக்கள் மாறினால் அர்த்தமே மாறிவிடுகிறது. அர்த்தம் மாறும்போது மீணடும் ஒருமுறை படிக்க நேர்கிறது. நல்ல அலசல். சில வாரங்களுக்கு முன் இதைப்போன்ற நிலைகளை ஒரு மாத சஞ்சிகையில் படிக்க நேர்ந்தது. ஒரு சில மாற்றங்கள் இருந்தன.

   Delete
 2. சில படங்களை வெளிடிடும் .படங்கள் அதிகமாக இணைக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. படங்கள் மிகவும் மோசமாக உள்ளது, ஒரே அமங்கலமாக உணர்ந்தேன்... முதன் முதல் வரும் பதிவர்களை அப்படி வரவேற்க வேண்டாம் என்று தோன்றியது... அதனால் தான் எந்த படங்களும் நான் இனிக்கவில்லை. தங்கள் எண்ணத்தை என்னால் நிறைவேற்ற இயலாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்...

   Delete
 3. சில படங்களை வெளிடிடும்

  ReplyDelete
  Replies
  1. படங்கள் மிகவும் மோசமாக உள்ளது, ஒரே அமங்கலமாக உணர்ந்தேன்... முதன் முதல் வரும் பதிவர்களை அப்படி வரவேற்க வேண்டாம் என்று தோன்றியது... அதனால் தான் எந்த படங்களும் நான் இனிக்கவில்லை. தங்கள் எண்ணத்தை என்னால் நிறைவேற்ற இயலாமைக்கு நான் மிகவும் வருந்துகிறேன்...

   Delete
 4. ஆனால் இறப்பு என்பது மனிதனுக்கும் சரி, அறிவியலுக்கும் சரி சற்று சவாலாகவே உள்ளது.
  படங்கள் அதிகமாக இணைக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. படங்கள் மோசமாக இருக்குன் காரணத்தினால் என்னால் இணைக்க இயலவில்லை நண்பரே...

   Delete
 5. What is after Death? A soul realises God or goes for Rebirth according to the imprints such as Good/Bad deeds.

  ReplyDelete
  Replies
  1. The world religions only explaining where the soul will go after death to the rebirth, heaven or hell. But Still It Does't Prove by Science...

   Delete
 6. what about your Opinion about tv reality shows(one private channel telecasting("marujenmam"). is it true or not?

  ReplyDelete
  Replies
  1. Thank you for visit my blog and ur comments.

   My Opinion in that type of show might be real or not. some time I was watching in that show. Compared us the reincarnation (மறுஜென்மம்) is researched more and deeply by Dr.Ian Stevenson. He trust the reincarnation. he roamed all over world particularly India, Srilanka and some south east Asian countries to collect the information about reincarnation. He could collect more than 3000 evidence about the children who can remember the past Birth. He strongly trust the reincarnation, So he did one Riddle with the locked cabinet. That Lock can open by himself only. He believed He can back again by rebirth for open the locked cabinet...

   Until open the locked cabinet, We can not accept or denying the reincarnation.

   Nearly 40 years ago, Stevenson bought and set a combination lock on a filing cabinet in the Division of Perceptual Studies. He based the combination on a mnemonic device known only to him, possibly a word or a sentence.

   A colleague, Emily Williams Kelly, told The New York Times: "He did say, that if he found himself able, he would try to communicate that. Presumably, if someone had a vivid dream about him, in which there seemed to be a word or a phrase that kept being repeated—I don't quite know how it would work—if it seemed promising enough, we would try to open it using the combination suggested." As of February 2007, the Times reports, the filing cabinet remains locked.

   If you wanna about more information about him. Use the following Link

   http://en.wikipedia.org/wiki/Ian_Stevenson

   http://reluctant-messenger.com/reincarnation-proof.htm

   Delete
 7. எங்கிருந்து யா இத்தன செய்திய புடிச்ச.. பெரியா ஆளுயா நீ.. நமக்கு தெரிஞ்சது எல்லாம் இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு..அவ்ளோதான்.

  ReplyDelete
  Replies
  1. நமக்குத் தெரிந்த செய்திகளை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணங்கள் தான் நண்பரே, அதிலும் நம்மை விட யாரும் இதனை விட சிறப்பாக கூறி விடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் நண்பரே...

   Delete
 8. பலே பலே...சூப்பர் தலைப்பு.குழந்தை முதல் பெரியோர் வரை அனைவருக்குமுள்ள சந்தேகம் தான்.அறிவியல் + ஆன்மிகம் இணைப்ப கலக்கல்.சந்திப்போம் சொந்தமே!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் என்னை சொந்தமாக கூறியதற்கு மிகவும் நான் பெருமைப் படுகிறேன் நண்பரே. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கும் இது சம்பந்தமாக சில சந்தேகங்கள் இருந்தது நண்பரே, அதனது தேடலின் விளைவு தான் இந்த பதிவு நண்பரே... தங்கள் வருகைக்கும் கருத்துறைப்பிர்க்கும் மிக்க நன்றி நண்பரே...

   Delete
 9. .அறிவியல் + ஆன்மிகம் இணைப்ப கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்தமைக்கும், கருத்து தந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே...

   Delete
 10. நல்ல தேடல்தான்.ஆனால் பயமாயிருக்கு !

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் பயப்படுகிரீர்களா!!! ஆச்சர்யமாக உள்ளது தோழி எனக்கு...

   Delete
 11. //முஸ்லிம் மதத்திலும் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள்.//

  அன்பு சகோதரரே,
  இஸ்லாத்தில் மறுஜென்மம் என்ற நம்பிக்கையே கிடையாது, மரணத்திற்குப் பின் அவரவர்களின் நன்மை தீமைக்கு ஏற்ப, சொர்கத்திலோ, நரகத்திலோ, நித்திய வாழ்க்கை உண்டு என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, இஸ்லாத்தில் மறுஜென்மம் என தாங்கள் தவறாக விளங்கி இருக்கின்றீர்கள் என கருதுகின்றேன், மறுஜென்மத்தைப் பொறுத்த வரை இஸ்லாமும், கிருஸ்தவமும் ஒரே கொள்கையை கொண்டுள்ளது.

  என்றும் அன்புடன்,
  அ.ஹாஜாமைதீன்.

  ReplyDelete
  Replies
  1. சரி நண்பரே, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், எனக்கு ஒரு முஸ்லிம் பெரியவர் தங்கள் நபிகள் அவர்கள் போன்று சில மகான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பிறப்பில் பிறந்தனர் (அவர் கூறிய பெயரை நான் மறந்து விட்டேன்) என்று கூறினார். அந்த வரிசையில் பிறந்தவர் தான் ஏசு என்றும் எனக்கு கூறினார். அவர் கூறியதைக் கேட்டுதான் நான் இஸ்லாமில் மறு பிறப்பை நம்புகின்றனர் என்று கூறினேன் நண்பரே...

   Delete
 12. Birth and rebirth will have so many contraversions for every religious.But somebody say and worry for any evils happened,because of our past sins NOT this birth sins.WE have to analyse in depth .I WILL do to have some clarifications with regard to the subjects.
  by DK .(D.Karuppasamy.)
  VAAZHKA VALZMUDAN

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் பா, ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு கருத்துகள் உள்ளது... இது இன்னும் ஆராய்ச்சி செய்யப் பட வேண்டியது...

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   வருகையைத் தொடருங்கள்...

   நன்றி, வணக்கம்...

   Delete
 13. Anonymous2:07:00 PM

  வணக்கம். திரு இவான் ஸ்டீவன்ஸன் மற்றும் டாக்டர் ராவுத் அவர்கள், சாந்தி தேவியின் மறு பிறப்புப் பற்றி ஆய்ந்ததைப் பற்றிய காணொளி என்னிடம் உள்ளது தேவையானால் அனுப்புகிறேன்- அன்புடன் நந்திதா

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அனுப்புங்கள் தோழி.... அது மிக உதவியாக இருக்கும்.

   Delete
 14. nalla thagaval, mikka nandri nanbarey

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்...

   வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தோழா...

   தங்கள் வருகைத் தொடரட்டும்...

   Delete
 15. நல்லதொரு விசயம் வெற்றி, நாள் வாரியாக இறந்தபோன உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்லியிருந்தமை நன்றாக இருந்தது!!
  //உயிர் என்பது உயிராலும் உடலாலும் பிணைக்கப்பட்ட ஒரு கூடு ஆகும்.//
  இந்த இடம் பிழைபோல தெரிகிறது,...
  //முஸ்லிம் மதத்திலும் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள். //
  இஸ்லாம் மறுஜென்மத்தை நம்பவில்லை,மறுமை வாழ்வு என்றழைக்கப்படும் மறு உலக வாழ்வை நம்புகிறது,இறுதி தீர்ப்பு நாள் என்றழைக்கப்படும் தீர்ப்பு நாளுக்கு இறந்த பிறகு செல்வதாகவும்,அங்கு நம் பாவ,புண்ணியத்திற்கு ஏற்ப தண்டனையோ,நல்ல வாழ்க்கையோ அமைக்கப்படுவதாக நம்புகிறார்கள்...
  புத்த மதத்தில் ஒரு புத்தகம் உள்ளது புத்தரின் கடந்த ஜென்ம வாழ்க்கைகளின் தொகுப்பு "ஜாதக கதைகள்" (jataka tales) என்ற பெயரில்...
  " மறுஜென்மம் "என்கிற தலைப்பில் இன்னொரு பதிவு முயற்சி செய் (இவான் ஸ்டீவ் ஆராய்ச்சி பற்றியெல்லாம் சொல்லி ) நன்பா.... :)

  ReplyDelete
 16. அன்பு தம்பிக்கு நீங்கள் எனது வலைப்பக்கம் வந்ததும் நான் உங்கள் வலைப்பதிவுகளை பார்வையிட்டேன். உங்கள் கட்டுரைகளில் இந்த கட்டுரை கண்ணில் பட்டது. நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். சின்னவயது என்றாலும் ”மரணத்திற்கு அப்பால் : ஓர் அலசல் என்பதனை வித்தியாசமாகவே பார்த்து இருக்கிறீர்கள். என்னைப் போன்றவர்கள் சிந்தனை வேறு. நேரம் கிடைக்கும் போது எனது “ ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” - என்ற பதிவினை சென்று பார்க்கவும். நன்றி!
  http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

  ReplyDelete
 17. உங்கள் பதிவில் கருத்துரை எழுதியதும் நான் பதிந்த நேரம் மட்டும் வருகிறது. எனவே உங்கள் பதிவில் தேதியையும் நேரத்தினையும் சரியாக அமைக்க்வும். இது உங்களுக்கும் கருத்துரை தருபவர்களுக்கும் நல்லது

  ReplyDelete
 18. தயவு செய்து டாக்டர். பிரெயின் வீஸ் எழுதிய புத்தகங்களை படியுங்கள். விவரம் கீழே கொடுத்து உள்ளேன். அதன் பின் மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல் பற்றிய உங்கள் எண்ணங்கள் மாற வாய்ப்பு உள்ளது.

  Please read the book "Many Lives Many, Masters" written by Dr. Brain Weiss, a psychiatrist and practices in Miami, Florida, USA. Only Hindus and Buddhists believe in reincarnation but Christians also believed it till 3rd/ 4th Century as it was in the Bible. But the Bible was modified about reincarnation at that time. It is also explained in that book. He has written a number of books about live after death.

  ReplyDelete
 19. I recommend for reading is "Only Love is Real" written by Dr. Brain Weiss. In simple words, it is not the money you earned in this materialistic world counts during your life time but the real LOVE you earned only matters. I have given below all the books written by him:

  Many Lives, Many Master
  Only Love is Real
  Messages from Masters
  Meditation: Achieving Inner Peace and Tranquillity in Your Life
  Same Soul, Many Bodies
  Miracles Happen

  Dr. Brain Weiss has given lot real case studies in this regard. He is also in the Face Book.

  Another book, I recommend for reading is "Secret the POWER" written by Mr. Rhonda Byrne. on positive thinking, which can change your Life. Please also read this book. He is also in Face Book.

  ReplyDelete
 20. நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது. அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இறந்தப்பின் என்ன என்பதைப்பற்றி என்றுமே சிந்தித்ததே இல்லை. இருக்கும் வரை நல்லது நினைத்து பேசி பகிர்ந்து செயலாற்றுவோம் என்பதில் மட்டுமே இருந்தது கவனம், உங்கள் கட்டுரை படித்தப்பின் இன்னும் நிறைய அறிய ஆவலாகிறது. அருமையான பகிர்வு. நிறைய மெனக்கெட்டு விஷயங்கள் ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு தெரிகிறது இதில். அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 21. Anonymous10:15:00 AM

  அன்பின் சகோதர, சகோதரிகளே இஸ்லாம் சொல்லும் மரணத்திற்கு பிறகு பற்றி இந்த கடுரையில் படித்து சிறிது தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்வம் இருப்பின் உங்களின் தேடல் என்பது இஸ்லாம் வழி அதிகம் தெரிந்துக் கொள்ளலாம்.

  http://suvanappiriyan.blogspot.com/2012/02/blog-post_12.html

  http://www.readislam.net/portal/archives/4597

  ReplyDelete
 22. Howdy! This article could not be written any better! Reading through this post reminds me of my previous roommate! He always kept talking about this. I most certainly will forward this post to him. Fairly certain he will have a good read. Thanks for sharing!

  ReplyDelete
 23. I am regular visitor, how are you everybody? This article posted at this site is genuinely nice.

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...