வெட்கங் கெட்டவனாய்
வீதியில் திரிந்து கொண்டும்,
ஏதோ நினைப்பில்
சிரித்துக்கொண்டும்
காரணமறியாமல் நான்...
தேய்ந்து வரும் நிலவை
வளர் பிறையோடு எப்படி
ஒப்பீடு செய்ய...
உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை'யாக நான்...
உன்னைப் போலவே தினமும்
பூக்க பன்னிரண்டு வருடம்
தவம் இருக்கும் குறிஞ்சி
மலர்...
உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!
எப்படி சொல்ல முயன்றாலும்
அத்தனைப் பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை எழுத!!!
ஆயினும் விழைகிறேன்.
அன்புத் தோழியான
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள் கூற...
இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்...
அன்போட வெற்றிவேல்...
வீதியில் திரிந்து கொண்டும்,
ஏதோ நினைப்பில்
சிரித்துக்கொண்டும்
காரணமறியாமல் நான்...
தேய்ந்து வரும் நிலவை
வளர் பிறையோடு எப்படி
ஒப்பீடு செய்ய...
உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை'யாக நான்...
உன்னைப் போலவே தினமும்
பூக்க பன்னிரண்டு வருடம்
தவம் இருக்கும் குறிஞ்சி
மலர்...
உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!
எப்படி சொல்ல முயன்றாலும்
அத்தனைப் பஞ்சம்- என்
சொற்களுக்கும்
கற்பனைக்கும் உன்னை எழுத!!!
ஆயினும் விழைகிறேன்.
அன்புத் தோழியான
அழகுத் தேவதைக்கு
அன்பான
வாழ்த்துகள் கூற...
இனிய
பிறந்த நாள்
நல்வாழ்த்துகள்...
அன்போட வெற்றிவேல்...
டிஸ்கி:
அனைவருக்கும் வணக்கம்... இன்று (அதாவது ஆடி 24, வெள்ளிக்கிழமை) எனக்கு பிறந்த நாள். பல வருடம் கழித்து வெள்ளியும் ஆடி 24ம் சேர்ந்து வருது... பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் கொஞ்சம் சந்தோசம். மேல இருக்கற கவிதை எனக்கு நானே எழுதுனது இல்ல, சில மாதங்கள் முன்னாடி நான் எழுதுனது... என்னோட கவிதை எப்படி இருக்குன்னு சொல்லிட்டு, அப்படியே வாழ்த்திவிட்டு செல்லுவீங்களாம்...
வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...
உருவகம் காட்ட முற்ப்பட்டு
ReplyDeleteதோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு!
அருமை
தங்கள் இனிய தோழிக்கு உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழவேண்டும் வளமுடன்
நன்றி...
Deleteதங்கள் முதல் வாழ்த்து எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது...
கவிதை அருமை சகோதரரே....இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !!!
ReplyDeleteவணக்கம் தமிழ் முகில்...
Deleteதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
கவிதை வித்தியாசமாக உள்ள முயற்சி .
ReplyDeleteநன்றாக உள்ளது.
இனிய பிறந்தநாள் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம்...
Deleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா...
Deleteதோழிக்கு வாழ்த்து தொகுத்தே வழங்கி
ReplyDeleteநாளிதே அந்த நல்லது எனக்குமே
சூழ்ந்திடும் தோழரே சொல்கிறேன் என்றாய்
வாழ்கநீ வாழ்க வழமோடு வாழ்கவே!
வெற்றிவேல்!
உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!.
// உருவகம் காட்ட முற்ப்பட்டு
தோற்கிறேன்- ஒப்பீடு என்பதே
இல்லாதவளுக்கு//...
ரசிக்கவைக்கும் நல்ல கற்பனை!
உங்கள் தோழிக்கு எழுதிய கவிதை மிக அருமை!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
த ம.1
வணக்கம் தோழி....
Deleteதங்கள் வாழ்த்துக் கவி எனக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது... மிக்க நன்றி சகோதரி...
தமிழ் மன வாக்கிற்கும் நன்றி...
அழகான உவமைத் தேடல்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
வணக்கம்...
Deleteதங்கள் இனிய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
நல்ல கவிதை.....
ReplyDeleteமனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் வெற்றி வேல்....
வணக்கம் அண்ணா...
Deleteதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...
இந்த விஷயத்தில் எப்போதுமே கவ்ஞர்கள் தோற்றுத்தான் போகிறார்கள்.ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அவள் ஒப்புவமை இல்லாதவள்தான்!அருமை!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள்
வணக்கம் அய்யா...
Deleteஅழகாக கூறியுள்ளீர்கள்... அவள் எப்போதுமே ஒப்பற்றவள் தான்...
வருகைக்கும், கருத்துக்கும் இனிய நன்றி...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.தேய்ந்து வரும் நிலவு தேய்ந்துகொண்டு மட்டும் போவதில்லையே,வளர்கிறதுதானே?
ReplyDeleteநிலவு தேய்ந்து வளரும் அண்ணா...
Deleteஆனால் அவள் அழகு தேயாமல் அல்லவா வளர்ந்து கொண்டு இருக்கிறது... அதனால் தான் அப்படி கூறினேன்...
தினமும் பூக்க குறிஞ்சி 12 வருடங்களாய்ச் செய்யும் தவம்.... நல்ல கற்பனை.
ReplyDeleteலாஜவாப்....பெமிசால்...அனாமிகா...!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றி.
லாஜவாப்....பெமிசால்...அனாமிகா...!!
Deleteஇந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்?
தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அண்ணா...
பிறந்த நாள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...
லாஜவாப், பெமிசால் என்ற வார்த்தைகளுக்கு 'ஈடு இணையற்ற' என்ற பொருள் வரும். அனாமிகா என்றால் பெயரில்லாதவள் என்று அர்த்தம்! :)
ReplyDeleteஈடு இணையற்ற..... மிக்க நன்றி அண்ணா...
Deleteஅனாமிகா என்றால் பெயரில்லாதவள் என்று அர்த்தமா??? பெயருக்குரிய குறிப்பை இந்த கவிதையிலேயே விட்டுள்ளேன் அண்ணா... முயற்சி செய்து பாருங்களேன்.
அதைப் பற்றி யாராவது கேள்வி கேட்பார்கள் என நினைத்தேன்...! யாரும் கேட்ட பாடில்லை...
"உன்னைப் பார்த்தே
தினமும் பூக்க முற்படும்
தாழை'யாக நான்...
அன்பின் வெற்றி வேல் - உன்னுடைய பிறந்த நாள் எப்படி என் கவனத்திற்கு வராமல் போனது - ஆடி 24 சென்ற வெள்ளிக்கிழமை - 09.08.2013 - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா...
Deleteதங்கள் இனிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...
அன்பின் வெற்றிவேல் - உன்னுடைய கவிதை அருமை - காதலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் கவிதை நன்று - ஆமாம் - ஏன் உன்னுடைய கவிதைகள் அனைத்திலுமே - கற்பனைக் ( ???? ) காதலியினை உயர்த்தியும் உன்னை ஒரளவு தாழ்த்தியுமே எழுதுகிறாய் - இன்ஃப்ரீயாரிடி காம்ப்லெக்ஸ் ஏன் ? சிந்த்தித்துப் பாரேன் - அடுத்த கவிதைகளில் எண்ணங்களை மறு பரீசிலனை செய் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவணக்கம் அய்யா... தாங்கள் கூறுவது போல் தாழ்வு மனப்பான்மை எல்லாம் ஏதும் இல்லை. என் கற்பனைக் காதலியை உயர்த்திப் பேசுகிறேன், அவ்வளவுதான் அய்யா. அவளை நான் உயர்த்தி பெருமையா பெசுவதான் என்னை நான் தாழ்த்திக்கொல்கிறேன் என்று அர்த்தம் இல்லை. தங்கள் எண்ணக் கருத்தை கூரியமைக்குமிக்க நன்றி அய்யா... எனது கவிதைகள் காத்திருப்பு, காதல், பிரிவு, ஆகியவை சேர்ந்ததாக இருக்கும், அதனை தாழ்வு மனப்பான்மை என்று எப்படி அய்யா கூற இயலும்...
Deleteதங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா...
இனிய தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே!!!
ReplyDeleteஆமாம் ஏன் உங்கள் பக்கங்களில் மாதமும் ஆண்டும் குறிப்பிடப்படவில்லை ....?
இதுபோல் பலவற்றை ஆவணப் படுத்தாததன் விளைவு நம் மொழி பல இன்னல்களுக்கும் பழிக்கும் ஆளாகி நிற்கிறது.
வரலாறு முக்கியம் அமைச்சரே ...கவனிப்பீரா?
சரி நண்பா... இனி வரும் பதிவுகளில் தேதிகளை குறிப்பிடுகிறேன், கவனத்தில் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றி...
Deleteதங்கள் வாழ்த்துகள் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது....
மிக்க நன்றி...
வணக்கம் தம்பி...
Deleteநீங்க இன்னும் அந்த மாற்றத்தை செய்யவில்லை(மாதம்:நாள்:ஆண்டு)காலம் அனுமதிக்கவில்லை போலும் ,எனினும் விரைவில் செய்ய முயலுங்கள்.
களப்பிரர்கள் ஆராய்ச்சி எந்த அளவில் உள்ளது?
நன்றி.
வணக்கம் அண்ணா...
Deleteதாங்கள் கேட்டுக்கொண்டது போல பதிவு வெளியிடப் படும், நேரம் காலம் இவற்றை காட்டும் மாற்றத்தை செய்துவிட்டேன், தாமதத்திற்கு வருந்துகிறேன்...
களப்பிரர்கள் ஆராய்ச்சி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இனி வரும் பதிவுகளில் எதிர்பார்க்கலாம்...
நன்றி, வணக்கம்...
அன்பின் வெற்றி வேல் - வழக்கமாக குறுங்கவிதை தானே இருக்கும் - இதென்ன நீண்ட கவிதை - பிறந்த நாள் வாழ்த்துக் கவைதை என்பதனாலா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅப்படியும் கூறலாம் அய்யா... பிறந்த நாள் கவிதை என்றால் சிறப்பு அல்லவா!!!
Delete