Mar 20, 2012

புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்கபுகைப்படங்களை உருவாக்குவதற்கும், உருவாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையத்தளங்கள் உள்ளன.சிலவற்றின் போர்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சிலவற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணுவோம். புகைப்படங்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்களை நீக்க திட்டமிடுவோம்.

படங்களைத் தலைகீழாகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப்படுவார்கள்.
இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் Image Splitter என்ற இணையத்தளம் செயல்படுகிறது.

இந்த தளத்திற்குச் சென்றவுடன் நாம் எந்த படத்தில் மேலே சொன்ன மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறோமோ, அந்த பட கோப்பை பதிவேற்றம் செய்திட வேண்டும்.

கோப்பின் அளவு 20 எம்பிக்கு மிகாமல் இருக்க வேண்டும் பின்னர், என்னவகையான செயல்பாட்டினை மேற்கொள்ள விரும்புகிறோமோ, அதற்கான பட்டனைக் கிளிக் செய்தால், உடன் அந்த செயல் மேற்கொள்ளப்பட்டு படம் உங்களுக்கு தரவிறக்கம் செய்திடக் கிடைக்கும். இதனை நாம் தேர்ந்தெடுக்கும் டைரக்டரியில் சேவ் செய்து பயன்படுத்தலாம்.
இந்த தளத்தின் மூலம் jpeg, jpg, bmp, png, gif, ico ஆகிய போர்மட்கள் கையாளப்படுகின்றன. போர்மட் மாற்றுவதில் மட்டுமின்றி, படங்களின் அளவுகளை மாற்றுகையிலும், நெட்டு மற்றும் குறுக்காகப் படங்களை வெட்டிப் பெறுவதிலும் கூட உங்களுக்கு எந்த போர்மட்டில் தேவையோ அந்த போர்மட்டில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

படம் ஒன்றை ரீசைஸ் செய்வதற்கு எந்த அளவில் புதிய சைஸ் இருக்க வேண்டுமோ அந்த அளவினை தந்தால் போதும்.

அளவுகளைத் தந்த பின் Resize image என்ற பட்டனில் கிளிக் செய்தால் அந்த அளவிற்கான படம் கிடைக்கும். இதில் என்ன சிறப்பு எனில் நீங்கள் அகலத்தினை 50 பிக்ஸெல் அளவிற்கு மாற்றினால் அதற்கேற்ற வகையில் நீளம் சரி செய்யப்பட்டு படம் கிடைக்கும்.

மேலும் நாம் தரும் வரையறைகளின் படி ஒரு படத்தை மிகச் செம்மையாக வெட்டிப் பல கோப்புகளாக இந்த தளம் தருகிறது. பட கோப்பு ஒன்றை பதிவேற்றம் செய்துவிட்டு, எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை(Rows & Columns) என மட்டும் கொடுத்தால் போதும். உடன் ஒரு ஸிப் பைலாக இது தரப்படும்.

அதனை விரித்து பல துண்டுகளாக அழகாக இவற்றைப் பெறலாம். எடுத்துக்காட்டாக நான்கு சம துண்டுகளாக ஒரு படம் வெட்டப்பட வேண்டும் என்றால், 2 படுக்கை வரிசை மற்றும் 2 நெட்டு வரிசை எனத் தர வேண்டும். நான்கு சரியான துண்டுகளாகக் கிடைக்கும்.

இதற்குப் பதிலாக 4 நெட்டு துண்டுகளாக வேண்டும் எனில், 1 row and 4 columns எனத் தர வேண்டும். இதில் என்ன சிறப்பு எனில் படங்கள் வெட்டப்பட்ட பின்னர் எப்படி காட்சி அளிக்கும் என முன் தோற்றக்காட்சி காட்டப்படுகிறது. அதனைப் பார்த்த பின்னர் நமக்கு ஓகே என்றால் வெட்டுவதற்கு ஓகே சொல்லலாம்.

இதே போல படங்களின் அளவினைச் சரி செய்திடலாம். மேலே குறிப்பிட்ட வேலைகளை மிக நேர்த்தியாக இந்த தளத்தில் மேற்கொள்ளலாம். எந்த புரோகிராமினையும் தரவிறக்கம் செய்து பதிய வேண்டியதில்லை.
புதிதாக கணக்கு எதனையும் திறக்க வேண்டியதில்லை. கடவுச்சொல் எதுவும் கிடையாது.

இணையதள முகவரி

ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு...

கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும்.
இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று.

இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம்.

நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். 

உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள்.

தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும்.

இணையதள முகவரி

டிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்இந்திய கிரிக்கட் அணியில் டிராவிட்டுக்கு சிறந்த மாற்று வீரராக கோஹ்லி திகழ்வார் என்று முன்னாள் இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் வீராட் கோஹ்லி, மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 பந்துகளில் 183 ஓட்டங்கள் குவித்தார்.
கடந்த 5 போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் கடந்த 28 ம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை 85 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அவர் 11 சதம் அடித்துள்ளார்.
கோஹ்லி குறித்து இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியில் இருந்து முழுவதுமாக ஒய்வு பெற்ற ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 148 பந்துகளில் 183 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த கோஹ்லியைப் போன்றதொரு வீரரை இதுவரை என் கிரிக்கட் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றும் கங்குலி பாராட்டு மழை பொழிந்துள்ளார்.

உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்ள நா‌ம் எ‌த்தனையோ முறைகளை‌ப் ‌பி‌ன்ப‌ற்று‌கி‌ன்றோ‌ம். உட‌ல்‌நிலை பா‌தி‌த்தா‌ல் அதனை ச‌ரி செ‌ய்யவு‌ம் எ‌த்தனையோ ‌சி‌கி‌ச்சை முறைகளை‌க் கையாளு‌கிறோ‌ம்.ஆனா‌‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்,

Mar 15, 2012

தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களி​லுருந்து NTFSற்கு மாற்றுவதற்​கு

கணினிகளைப் பயன்படுத்தும்போது அதில் பயன்படுத்தப்படும் கோப்புவகைகளைப்பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இங்கு floppy disks, hard disk, optical disk போன்றவற்றில் தரவுகள் சேமிக்கப்படும்.

எனினும் விண்டோஸ் இயங்குதளத்தை

Mar 12, 2012

இந்தியாவின் முக்கிய நிறுவனங்களின் இலவச தொலைபேசி எண்கள் Toll Free Numbers (India)

இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்கள், அமைப்புகள் , தொழிற்சாலைகள் ஆகியவற்றின் இலவச எண்கள் நான் பார்த்தது நீங்களும் அறிந்து கொள்ளுங்கள். குறிப்பாக வங்கிகள் , விமானங்கள் ,மொபைல் நிறுவனங்கள் ,கம்ப்யூட்டர் ஐ.டி கஸ்டமர் சேவை  ,கோரியர்ஸ், நலபிரிவு, கல்வி நிறுவனங்கள், உணவு விடுதிகள், பயண முன் பதிவு போன்ற இலவச தொலைபேசி எண்கள் கீழே ....

எண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இணையதளம்

வேலை வாய்ப்புகளை உருவாக்கிகொள்ள எத்தனையோ இனைய தளங்கள் உள்ளன. அதிலும் தகவல் தொழில்நுட்பம், கணினி, தகவல் மற்றும் மின்னணுத் தொடர்பியல் போன்ற துறைகளிலேயே வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. எண்ணெய்