உன் விழிகள் இரண்டும்
என் இதயம் துளைக்கும்
வில் அம்புகள்...
உன் அம்புகள் துளைத்த
என் இதயத்தில் வழிவது
குருதி அல்ல- அது என் காதல்...
என் திசையெங்கும்
காற்றாய் சூழ்ந்திருக்கிறது
எனை திணறடிக்கும் உன் காதல்...
சுவாசிப்பது காற்றை அல்ல.
உன் காதலை...
தொடுவானமாய் ஆகிவிட்டதென்
காதல்...
தொட்டுவிடும் தொலைவில் நீ
தொட இயலாத தொலைவில் நான்...
காரணம்-
இது சிறைப் பறவையின்
சிறகொடிந்த காதல்...
திருமதி.வெ.தேவி...
தஞ்சை....
தோழி திருமதி.தேவி வெற்றிவேல் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இல்லத்தரசி. இவரது கணவர் இந்திய கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.மின்னஞ்சல் மூலம் அவர் அனுப்பிய கவிதை இது...
சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...