Sep 25, 2014

சிறுகதை: பேய்

என்றுமில்லாமல் திடீரென்று மாலையில் சிறப்பு வகுப்பு வைத்து தாமதப்படுத்திவிட்டதனால் பள்ளிக்கூடம் முடிந்து ஊருக்கு வரும் நகரப் பேருந்தைத் தவறவிட்டு, கடைசிப் பேருந்தை பிடித்து அப்போதுதான் ஆளரவமற்ற அந்தப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியிருந்தேன். இன்னும் இரண்டு கி.மீ சைக்கிள் மிதித்தால் தான் எனது ஊருக்குச் செல்ல முடியும். ஏழு மணியோடு கடைசி பேருந்தும் என் கிராமத்திற்குச் சென்று திரும்பிவிடும்! சந்தில் நிறுத்தியிருந்த சைக்கிளின் கேரியரில் கையிலிருந்த இரண்டு நோட்டுகளையும் வைத்துவிட்டு, சைக்கிளை வெளியே எடுத்தபிறகு, தனியாக எப்படிச் செல்வது என்ற யோசனையிலே தயக்கத்துடனே யாராவது துணைக்கு வருவார்கள் என்று பயத்துடன் நின்றுகொண்டிருந்தேன். வாட்சில் மணி பார்த்தேன். பெரிய முள் ஒன்பதைத் தாண்டியும் சிறிய முள் எட்டிற்கு அருகிலும் நின்றுகொண்டிருக்க நொடி முள் வேகவேகமாக ஓடிக்கொண்டு இருந்தது! ஊருக்குச் செல்பவர்கள் பேருந்தைத் தவறவிட்டு  என்னைப்போலவே யாராவது வருவார்கள் என்று காத்திருந்து பார்த்தேன். நேரம் நொடி முள்ளைப் போன்று வேக வேகமாக ஓட எனக்குள்ளும் பயம் அதிகமாகிக்கொண்டிருந்தது.

Aug 17, 2014

உதிரும் நான் - 34

கருக்கரிவாள் பார்வையால்
மனத்தைக் கீறி
காதல் விதை தூவிவிட்டாள்...!

கரட்டுப் பாறையில் முளைத்திருக்கும்
முரட்டு விதையாய்
ஆழம் வரை வேர்விட்டு
மெல்ல எட்டிப் பார்க்கிறது காதல்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Apr 13, 2014

வாரம் ஒரு இலக்கியப் பாடல்: என் மகளைக் கண்டீர்களா?

இன்று ஆடவர்களும், பெண்களும் காதல் கொண்டால் ஜாதி, பணம், அந்தஸ்து எனப் பல காரணங்களைக் கூறி காதலித்த இருவரையும் பிரித்துவிடுகிறார்கள். காதலித்த இருவரும் மணம் செய்து கொண்டாலும் அவர்களை கொன்றாவது தமது ஜாதிப் பெருமையை நிலை நிறுத்திக்கொள்ளவே அபலரும் முயல்கிறார்கள். ஆனால் காதலித்தவர்களின் மன நிலை, அவர்களின் ஆசை, தேடல், விருப்பம் என யாவற்றையும் கவனத்தில் கொள்ள மறுக்கிறார்கள். இப்படித்தான் காதல் கொண்ட இருவரது நிலை ஊருக்குத் தெரிந்துவிட்டது. உடனே காதலன் காதலியை அழைத்து சென்று உடன்போக்கு (நம்ம மொழில ஓடிப்போயட்டான்). பெண்ணைப் பெற்றத் தாயும் அவளைத் தேடி அலைகிறாள். வழியில் சில அந்தணர்களைக் (அந்தணர்கள் என்பவர்கள் பிராமணர்கள் கிடையாது. இது பற்றி தனிப் பதிவில் ஒரு நாள் விளக்குகிறேன்) கண்டு தனது மகளின் அடையாளங்களைக் கூறி கண்டீர்களா? என கேட்கிறாள். அவர்களும் கண்டோம் எனக்கூறி அவளுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். அறிவு தெளிந்த தாய், தனது கவலையை மறந்து வீடு திரும்புகிறாள். அந்த அந்தணர்கள் அந்தத் தாய்க்கு அப்படி என்ன ஆறுதல் சொன்னார் என அறிய கீழே தொடருங்கள். 


Apr 10, 2014

கடை திறப்பு - 2: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

பரணி பாடிய செயங்கொண்டார் புலவர் பெண்களே உங்களது நலிந்து போகும் இடையைப் போன்று ஆசை அனைத்தையும் துறந்த யோகியராகிய ஞானிகளும் நலிந்து போகிறார்கள் என்கிறார். அப்படி அவர் ஞானிகள் ஏன் பெண்களின் இடையினைப் போன்று நலிந்து போகிறார்கள்? அதற்கு என்ன காரணம் சொலியிருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள கீழே தொடருங்கள். 

Apr 8, 2014

கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.

வானவல்லிக்காக கரிகாற் திருமாவளவனின் வெற்றி பற்றி தேடியபோது கண்ட நூல் தான் கலிங்கத்துப் பரணி. கரிகாற் பெருவளத்தான் இமயம் வரை படையெடுத்து வென்ற பின், இமயத்தில் தனது புலிச்சின்னத்தை பொறித்தான் என்று சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும் கூறுகிறது. கலிங்கத்துப் பரணியை வாங்கி வாசிக்கும் வரை அது போர் பற்றி விளக்கும் நூலாகவே கருதிக்கொண்டிருந்தேன். புத்தகத்தை வாங்காமல் விட்டிருந்தால் அதில் உள்ள 52 மயக்கவைக்கும் காதல் பாக்கள் பற்றி அறிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். அனைத்தும் சுவையுடையவை...

Apr 6, 2014

காதலும் இலக்கியமும்: நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

தலைவன் தலைவி முதல் களவி தற்செயலாக நிகழ்ந்து முடிந்தது. இது இயற்கைப் புணர்ச்சி. இது மீண்டும் நிகழும் காலம் தடைபட்டது. பின்னும் ஒரு சூழல் வாய்த்தது. அப்போது தலைவி தலைவனின் முகத்தைப் பார்க்கக் கூசி நாணத்தால் விலகி நிற்கிறாள். அவளது நாணத்தைப் போக்க அவளது உடம்பைத் தொட ஒரு பொய்ச்சாக்குச் சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதில் தன் அன்பின் மிகுதியால் தலைவியின் நலத்தைப் பாராட்டிப் பேசுகிறான் தலைவன். சின்னப் பொய் தான் தலைவன் கூறுகிறான், அவ்வளவுதான் தலைவியும் கவுந்துட்டாங்க....  அவன் கூறியதைக் கேட்டதுமே தலைவி மீண்டும் அவனை கட்டித் தழுவிக் கொள்கிறாள். அப்படி தலைவன் தலைவிகிட்ட என்ன பொய் சொல்லி கவுத்தான்னு தெரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க.

Apr 3, 2014

உதிரும் நான் -33

தங்கத் தேராய் 
அவள்
என் மனவீதியில்
வலம் வரும்போதெல்லாம்

சிதறுத் தேங்காயாய்
நெஞ்சம் நொறுங்குவது
ஏனோ???

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Mar 21, 2014

உதிரும் நான் -32

முதலில்
அவளது சிறுசிறு
அத்துமீறல்களைத் தான்
அனுமதித்தேன் என்னுள்...

பின்னர் சர்வாதிகாரமாய்
என்னை
முழுவதும்
ஆக்கிரமித்துவிடுவாள்
என்பதை அறியாதவனாய்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், கவிதை, காதல் கவிதை, kathal kavithai, love poet, love, அத்துமீறல்கள்,

Mar 18, 2014

சிறுகதை: ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு


 ஒவ்வொரு நெல்லுக்கும் ஒரு பாடு, சிறு கதை, மண் வாசனை, ஏற்றம், ஏத்தம்பட்டுப் பையம் வெள்ளிக்குச்சம்

தில்லாலங்கிடி லேலம்

பதினாறு வெத்தலையாம்

தில்லாலங்கிடி லேலம்

சின்னப் பையன் கொடுத்த பை

தில்லாலங்கிடி லேலம்

சிரிக்குதடி இடுப்பு மேலே

தில்லாலங்கிடி லேலம்


Mar 7, 2014

மரகதப் பச்சை பட்டுடுத்தி...



தொடுத்த மல்லிகையோடு
அகம் மலரச் செய்யும் 
சிரிப்புடன்
மரகதப் பச்சை பட்டுடுத்தி
கடந்து செல்கிறாள்
கன்னியொருத்தி...

கடந்த மாத்திரத்தில்
கடந்த காலத்தில் 
காதலை உணர்ந்த தருணம்
நிழலாடத் தொடங்கிவிட்டது 
கண்களில்...

மறுத்தவள் ஏனோ
மறைந்துவிட்டாள்
என்னைவிட்டு...

மயங்கிய மனம் மட்டும்
இன்னமும் 
தவித்துக்கொண்டிருக்கிறது
அவளைத் எண்ணியே...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Mar 2, 2014

உதிரும் நான் -31

எந்த 
உத்தரவாதமும் 
இல்லை...

புதைக்கப்பட்டபின்
உயிர்த்தெழுவேன்
என்று...

ஆனாலும்
விழைகிறேன்,
அவளுள்
வி(பு)தைக்கப்படுவதற்காக...!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Feb 27, 2014

மீண்டும் என் சாம்பலிலிருந்து...

பீனிக்ஸ், கவிதை, சாம்பல், காதல் கவிதை

என்னுள் ஒளிந்திருந்த
காதலை
மெல்ல தட்டி எழுப்பினேன்...
பீனிக்ஸ் பறவையாக
உயிர்பெற்று 
சிறகடித்தது வானில்...

கண்கள் நிறைந்த
கனவுகளுடனும்
உள்ளம் முழுக்க
தன்னம்பிக்கையுடன்
மேலும் மேலும் உயர பறந்தது
அது...

எட்டாக் கணவாய்களையும்
நீண்ட கண்டங்களையும்
உயர்ந்த சிகரங்களையும்
அகன்ற ஆழிகளையும் கூட
சாதுர்யமாய் கடந்து
வீறு நடை போட்டது...

தகிக்கும் பாலையையும்,
பொசுக்கும் எரிமலையையும்
ஒய்யாரமாகக் கடந்து சென்றது
என் பீனிக்ஸ் பறவை...

நடுங்கவைக்கும் கார்காலத்தையும்
பொசுங்கவைக்கும் வேனிற்காலத்தையும்
உணவாகக் கொண்டு திண்ணமாய்
பறந்து கொண்டிருந்தது
வசந்தத்தை நோக்கியே...

வசந்தமென எண்ணி 
அவள் பார்வையில் அகப்பட்டதும்
எரிந்து பொசுங்கி
சாம்பலாகிவிட்டது
என் காதல் பீனிக்ஸ்.

மெல்ல உயிர்கொடுத்து
அவளுக்காக
என் காதலை தட்டி
எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.
மீண்டும் என் சாம்பலிலிருந்து...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 18, 2014

புத்தக விமர்சனம்: இளமை எழுதும் கவிதை நீ.

கல்லூரி கதைதான், இரண்டு குடும்பம் சில நண்பர்கள்,ஒரு நேர்மையான மினிஸ்டர் என்று கதையை கடைசி வரைக்கும், அதன் விறுவிறுப்பு குறையாதவாறு கதையை நகர்த்திச் சென்றிருப்பார் குடந்தையூர்.ஆர்.வி.சரவணன். புத்தகத்தை படித்து முடித்தவுடன், இரண்டரை மணி (நீங்க நாலு மணி நேரம் படிச்சிட்டு, யாரும் கேள்வி கேக்கக் கூடாது) நேர திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருப்பார், குடைந்தையூரார் அவர்கள்.  கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கதைக்கு சிறப்பு சேர்ப்பன. காட்சிகள் மூலம் கதையை அழகாக சலிப்பு தட்டாத வண்ணம் கதையை சாமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்.

Feb 16, 2014

உதிரும் நான் -30

கயிற்றருந்த கன்றுக்குட்டியாய்
கும்மாளமிட்டுத்
திரிந்துகொண்டிருந்தேன்
நித்தமும்...

சிறுக்கி மகளின்
சிரிப்பில் அகப்பட்டபின்
சின்னாபின்னமாகி
சீரழிவதேனோ???


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


உதிரும் நான், காதல் கவிதை, கவிதை, காதல், uthirum naan, kathal, kavithai

Feb 11, 2014

உதிரும் நான் -29

மலரை வருடும்
பூந்தென்றலாய் தான்
கடந்து சென்றாள்
என்னுள்...

இரயில் கடந்த
தண்டவாளமாய்
அதிர்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் நான்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



Feb 10, 2014

ஆவிப்பா- புத்தக விமர்சனம்

இன்று தனது முதல் நூலான ஆவிப்பா நூலை வெளியிடும் நண்பர் கோவை ஆவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 

நஸ்ரியா புகழ், நஸ்ரியாதாசன் என வாத்தியார் பாலகணேஷ் அவர்களால் புகழப்பட்ட கோவை ஆவி எனப்படும் ஆனந்த விஜயராகவன் அவர்கள் தனது குறும்பாக்கள் அனைத்தையும் தொகுத்து மாலையாக்கி புத்தக வடிவில் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.

Jan 25, 2014

உதிரும் நான் -28

கல்லும் மண்ணும் கடந்து 
உருண்டும், எழுந்தும், விழுந்தும்
நதியாய் பயணிக்கிறேன்
வாழ்க்கையில்...

சமுத்திரமாய் நீயணைப்பாய்
உன்னோடு சங்கமிப்பேன்
என்ற நம்பிக்கையில்....

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


Jan 23, 2014

கர்வம் தகரும் தருணத்திற்காக...

அருகில் அவள்
இல்லாததாலோ என்னமோ
எழுதும் கவிதைகளும்
உயிரற்றதாகவே தோன்றுகிறது...!

அவள் எச்சில் முத்தமில்லாமல்
தினமும் பருகும்
காலைத் தேநீரும்
கசக்கவே செய்கிறது...!

பெருத்த சண்டையில்லை
சிறு கருத்துவேறுபாடே.
அவள் சென்றுவிட்டாள்
நான் விட்டுவிட்டேன்...!

அவள் அழைப்பாளென நானும்
நான் அழைப்பேனென அவளும் - என
இருவருமாய் தோற்றுக்கொண்டிருக்கிறோம்
எங்கள் காதல் பந்தயத்தில்...!

அவளுடளான ஊடலில் என்
கர்வம் தகர்ந்து- காதல் பெருகும்
தருணத்திற்காக பொறுமையுடன்
காத்திருக்கிறேன் எங்களுக்காக...!!!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Jan 5, 2014

என் உயிர்

உன் விழியில்
பார்வையாக
நான்...

உன் சுவாசத்தில்
மூச்சாக
நான்...

உன் செவியில்
ஒலியாக
நான்...

உன் இதழில்
வார்த்தையாக
நான்...

உன் நாவில்
சுவையாக
நான்...

உன் இதயத்தில்
துடிப்பாக
நான்...

உன் உடலில்
உதிரமாக
நான்...

உன் உயிரில்
உணர்வாக
நான்...

உ ன் விரலில்
தீண்டலாக
நான்...

உன் பாதம் பதியும்
இடமாக
நான்...

உன் நிழல் விழும்
நிலமாக
நான்...

உன் பசியில்
உணவாக
நான்...

உன் மகிழ்ச்சியில்
புன்னகையாக
நான்...

உன் சோகத்தில்
ஆறுதலாக
நான்...

உன் விழிமூடலில்
உறக்கமாக
நான்...

உன் உறக்கத்தில்
கனவாக
நான்...

உன் கனவில்
நினைவாக
நான்...

உன் தலைசாயும்
தாய் மடியாக
நான்...

உன் கொஞ்சலில்
மழலையாக
நான்...

உன் ஜீவனில்
காதலாக
நான்...

உன் காலம் வரை
உன்னில் எல்லாமாக
நான்...

உன்னில் நீயாக
நான் வாழ
வேண்டும்...

இம்மண்ணைவிட்டு
நீங்கும் போதும்
உன்னைவிட்டு நீங்காத
உன்
ஆன்மாவாக வேண்டும்
 நான்...

நீ எடுக்கும் எல்லா பிறப்பிலும்...

திருமதி.தேவி...
தஞ்சாவூர்...

திருமதி தேவி  மின்மடல் மூலம் அனுப்பிய பதிவு இது...

Jan 3, 2014

உதிரும் நான் -27

பெருந்தாகங்கொண்டு கோடைமழையை
விழுங்கத் துடிக்கும்
வயல் வெடிப்பாய்

கடுந் தாகங்கொண்டு
காத்திருக்கிறேன்
அவளுக்காய்...

சி.வெற்றிவேல்...  
சாளையக்குறிச்சி...