Feb 18, 2014

புத்தக விமர்சனம்: இளமை எழுதும் கவிதை நீ.

கல்லூரி கதைதான், இரண்டு குடும்பம் சில நண்பர்கள்,ஒரு நேர்மையான மினிஸ்டர் என்று கதையை கடைசி வரைக்கும், அதன் விறுவிறுப்பு குறையாதவாறு கதையை நகர்த்திச் சென்றிருப்பார் குடந்தையூர்.ஆர்.வி.சரவணன். புத்தகத்தை படித்து முடித்தவுடன், இரண்டரை மணி (நீங்க நாலு மணி நேரம் படிச்சிட்டு, யாரும் கேள்வி கேக்கக் கூடாது) நேர திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தியிருப்பார், குடைந்தையூரார் அவர்கள்.  கதையில் வரும் வசனங்கள் அனைத்தும் கதைக்கு சிறப்பு சேர்ப்பன. காட்சிகள் மூலம் கதையை அழகாக சலிப்பு தட்டாத வண்ணம் கதையை சாமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்.

கதையின் நாயகன் சிவாதான் கல்லூரிக்கே தாதா,  அவர் வைத்தது தான் சட்டம். கல்லூரியின் முதலாளி அவரது தந்தை, கல்லூரியின் நிறுவனத் தலைவர் அவரது மாமா என்றிருக்க கல்லூரி முழுக்க அடிதடிதான், பிளே பாய் பையன். அவருக்கு ஆதரவாக அவரது தம்பி கார்த்திக் மற்றும் பல நண்பர்கள். நாயகன் சிவாவின் போக்கு கல்லூரி மாணவர்கள் உட்பட அவரது மாமா, அப்பா என யாருக்கும் பிடிக்காமல் அவரை எப்படி திருத்துவது என விழி பிதுங்கி தவிக்கும்போது கல்லூரியில் புதிதாக சேர்ந்திருக்கும் உமாவோடு பிரச்சனை ஆரம்பிக்கும்போது, அனைத்து பெண்களையும் ஓட ஓட விரட்டும் சிவா, உமாவைக் கண்டதும் பொறுத்துக்கொள்வது காதலுக்கான அறிகுறியோடு கதை ஆரம்பிக்கும். அதன் பிறகு பள்ளியில் படிக்கும் வரை நல்ல பையனாக இருந்த சிவா, கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அந்த இரண்டு வருடத்தில் ஏன் அப்படி மாறினான் என்று கூறும் காரணம் ஏற்புடையது. 


நாயகன் சிவா வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அவரது நிலை, அவரது செயல்கள் யாரும் எதிர்பார்க்காதது. கதையின் முதல் பாதியில் தாதாவாக இருந்தவர், பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் நல்லவராக மாறினாரா? அவரது தந்தை அவரை மீண்டும் ஏற்றுக்கொண்டாரா, அவர் முடிவில் உமாவிடம் போட்ட இரண்டு சவால்களில் வெல்கிறாரா? என்பதை கதையின் முடிவில் விறுவிறுப்பாக அதிரடிச் சண்டைகளுடன் கதையை முடித்திருப்பார். 


ஆனால் கதை முழுக்க பல வித எதிர்பாராத திருப்பங்களுடனும், அதிர்ச்சிகளுடனும் கதையின் விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச்சென்றிருப்பார். அங்காங்கே கலகலவென்ற நண்பர்களின் கிண்டல், காதல் என்று கதை முழுக்க கல்லூரியின் நினைவுகளை தட்டி எழுப்பியிருப்பார் குடந்தையூரார். 

கூட்டல்:
 • கதையை விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் செல்வது.
 • தேர்ந்த காட்சியமைப்பு மற்றும் வசனம்
 • பலவித எதிர்பாராத  திருப்பங்கள்
கழித்தல்:
 • கதையின் சில காட்சிகள் தவறாமல் சில திரைப்படங்களின் நினைவுகளை ஏற்படுத்திவிடச் செய்கிறது.
 • புத்தகத்தில் எழுத்தின் உருவத்தை பெரிதாக்கி, இருபுறங்களிலும் விடப்பட்டுள்ள அதிகப்படியான இடங்களை குறைத்திருக்கலாம்.
 • எழுத்துரு சிறியதாக இருப்பதால் தொடர்ந்து படிக்கையில் கண்ணுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.
புதினம் முழிவதும் குடந்தையூராரின் காட்சி வடிவமைப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். அவரது திரைப்பட இயக்குனர் கனவு விரைவில் நிறைவேற அவருக்கு வாழ்த்துகள். ஒரு காட்சியமைப்பை அவரால் சிறப்பாக விளக்க வருகிறது. சிறப்பான திரைக்கதை அமைக்க தனக்கு வரும் என்பதை இதில் நன்கு நிரூபித்திருக்கிறார். அவருடைய எழுத்துத் திறமை, காட்சியமைப்பு சாமர்த்தியம், வசனங்கள் எழுதும் திறன் அவருக்குள் நிரம்ப இருக்கிறதை இப்புத்தகம் நன்கு வெளிப்படுத்தியிருக்கிறது. ஆனால் சினிமாத்தனமான சில காட்சியமைப்புகள் இல்லாமல், வாழ்வியல் இயல்பை இயல்பாக கூறியிருந்தால் அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கும்.

வலைப்பூவில் பதிவு எழுதுவதோடு மட்டும் இல்லாமல், தன் படைப்பை புத்தகமாக அச்சிட்டுள்ள அவருக்கு வாழ்த்துகள். அவர் இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டு, அவரது கனவு நிறைவேற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

புத்தகம் கிடைக்குமிடம்:

DISCOVARY BOOK PALACE PVT LTD
K.K.NAGAR WEST
CHENNAI -600078

MAIL : discoverybookpalace@gmail.com
ONLINE : www.discoverybookpalace.com
PHONE 044-65157525


அன்புடன்...

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

26 comments:

 1. நல்ல விமர்சனம்..

  ReplyDelete
 2. வணக்கம்
  தம்பி..
  தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது ..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   எனது பார்வையில் புத்தகம் நன்றாக உள்ளது... தங்கள் பார்வையில் தான் விமர்சனம் நன்றாக இருக்க வேண்டும்...

   Delete
 3. விமர்சனம் நன்று... நன்றி நண்பா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 4. தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது ..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...

   தங்கள் வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   எனது பார்வையில் புத்தகம் நன்றாக உள்ளது... தங்கள் பார்வையில் தான் விமர்சனம் நன்றாக இருக்க வேண்டும்...

   Delete
 5. ப்ளஸ், மைனஸ்கள் அனைத்தையும் குறிப்பிட்டு அலசியிருக்கும் விதம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா...

   வருகைக்கும், இனிய கருத்துக்கும்....

   Delete
 6. பதிவாக வந்த போதே படித்து ரசித்த புத்தகம்.. புத்தகம் வாங்கிவிட்டேன், மீண்டுமொருமுறை படிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சீனு அண்ணா...

   பதிவாக வந்தபோது படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. புத்தகமாகத் தான் படிக்க முடிந்தது. மற்றொரு முறை வாசிக்கலாம். நல்ல புத்தகம்...

   வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 7. நல்ல விமர்சனம்! தம்பி! இருபக்கத்தையும் சொல்லியிருக்கின்றீர்கள்! விமர்சனம் என்பது அதுதான்!

  கழித்தல்களில் எழுத்துரு பற்றி சொல்ல நினைத்தோம்! கொஞ்சம் சிறிதாகி விட்டாலும், அவரது எழுத்து அதை மிஞ்சிவிட்டதால் சொல்ல முடியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்...

   தங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

   உண்மை தான், அவரது எழுத்து நடை அனைத்தையும் மிஞ்சும் படியாக உள்ளது...

   நன்றி....

   Delete
 8. விமர்சனமே கதையை படிக்கத்தூண்டுவதாக இருக்கிறது.

  அருமையான விமர்சனம் .

  மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் சரவணன்.

  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி...

   வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

   தங்கள் வாழ்த்துகளை நிச்சயம் தெரிவித்துக் கொள்கிறேன்...

   நன்றி...

   Delete
 9. அருமையான ஒரு அலசல். கூட்டல் கழித்தல் என்று இருபக்கத்தையும் அலசியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா....

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

   Delete
 10. புத்தகச்சந்தையில் கேட்டு வாங்கினேன்! சென்ற வாரம் ஒரே மூச்சில் படித்தும் முடித்துவிட்டேன்! சுவையான நாவல்தான்! கொஞ்சம் சினிமாத்தனமாக இருப்பது மட்டுமே குறை! நல்ல விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா...

   சற்று சினிமாத்தனம் இல்லையெனில் சிறப்பான புதினம். நல்ல புதினம்.

   பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

   Delete
 11. தங்கள் புத்தக விமர்சனத்தை விரும்புகிறேன்

  ReplyDelete
 12. இன்னும் படிக்கவில்லை.... படிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக வாசியுங்கள்...

   வருகைக்கு நன்றி அண்ணா...

   Delete
 13. நல்ல விமர்சனம். அடுத்த தமிழக பயணத்தின் போது வாங்க வேண்டும்....

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் வாசியுங்கள் அண்ணா....

   நன்றி.

   Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...