Nov 21, 2012

உயிர் முடிச்சு

உயிரில் எங்கேயோ
போட்டுக்கொண்ட முடிச்சு!
நட்பாய், காதலாய்!

நீ போட்ட முடிச்சா? இல்லை
நான் போட்ட முடிச்சா? இல்லை
நாம் நமக்காக போட்டுக் கொண்ட
முடிச்சா இது!!!

முடிச்சின் இரு துருவங்களாய்
நாம்! முன் பாதி நீ!
பின் பாதி நான்?

நெருங்கி வந்து உன்னுடன்
தொடரலாம்
என்றாலும், விலகிச் சென்றே
உயிரைக் குடிக்கிறாய்!!

அவிழ்த்துக்கொள்ள ஆசைப் பட்டு
விலகினாலும்
முடிச்சை இறுக்கி
உயிரை வாங்க விழைகிறாய்!

இருவரும் விலக முற்ப்பட
நம் நட்பு மட்டும்
முடிச்சில் மரணிக்க
எத்தனிக்கிறது நமக்காய்...

........................................வெற்றிவேல்...



36 comments:

  1. • வரப் போகும் தேவதைக்கு....
    இன்னும் எத்தனை நாட்கள்தான் தவிக்க விடுவாய்...
    ஒவ்வொரு நாளும் எத்தனை காதலை....
    நீ இழக்கிறாய் தெரியுமா...
    என்னை சந்திக்கும் நாளில்...
    நிச்சயம் வருந்த போகிறாய்...

    உன்னை எப்பொழுது பார்ப்பேனோ தெரியாது...
    ஆனால் பார்த்தபின்... அந்த நொடியிலேயே...
    துவங்கிவிடும் உன்னுடன் என் வாழ்வு...
    இத்தனை காதலை நீ நிச்சயம் மறுக்க மாட்டாய்...
    சந்திக்கும் நொடிக்காய் காத்திருக்கிறேன்...

    என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...
    முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...
    உங்களை தொட்டுப் பறிக்க...
    தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...
    அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

    உன் பெயர் என்னவென்று தெரியாது...
    நான் வளர்க்கும் பறவைகளிடம்...
    தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...

    நீ வீடு வரும் நாளில்...
    நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
    கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
    காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க...

    உன் கைக் கோர்த்தபடி...
    மழையில் நனைய வேண்டும்...
    உன் விரல் பிடித்தபடி...
    வாழ்வின் எல்லை வரை நடக்க வேண்டும்...

    உன்னை மார்பில் சாய்த்தபடி...
    குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
    உன் மடியில் சாய்ந்தபடி....
    என் மரணம் வரை உறங்க வேண்டும்...

    உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
    உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
    உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
    நிச்சயம் இருக்கும்...
    இவை தேவதைகளுக்கான குணங்கள்...
    உனையன்றி யார் பெற்றிருப்பார்...

    அதிகம் காத்திருக்க வைக்காதே....
    வீணாவது உனக்கான காதல்தான்...
    பின் வந்து என்னை குற்றம் சொல்லாதே...

    தோட்டம் முழுக்க பூத்திருக்கும் பூக்கள்...
    உன் பெயர் சொல்ல காத்திருக்கும் பறவைகள்...
    நம்மை நனைக்க காத்திருக்கும் முதல் மழை....
    இவற்றோடு சேர்ந்து காத்திருக்கிறோம்...
    முழுக்க முழுக்க காதல் நிரப்பி....
    நானும் என் இதயமும்......!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது... தொடர்ந்து இது போல் கவிதையை படியுங்கள்...

      வருகைக்கும், அழகான கவிதையை விட்டுச் சென்றதற்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  2. காதலின் எதிரொலியாய் தற்போது கவிதைகளைக் கொட்டுகிறீர்களோ...
    ரசித்த கவிதை......

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே, வணக்கம்... இடையில் இடைவெளி விட்டு வந்துள்ளீர்கள்... நன்றி...

      காதல் எதிரொலியா???

      Delete
  3. Kavidhaiyum kavidhaikku marumozhik kavidhaiyum arumai... Iravin punnagai valaith thalam kaadhal kavidhaigalukkaana viseda thalam aagiyirukkiradhu. Ungal dhevadhaiyaik kaana naangalum aavalaai ullom. Thodarattum ungal "kaadhal sevai".

    ReplyDelete
    Replies
    1. காதல் கவிதைகளுக்கான விசேட தளமா??? அப்படியெல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன் நண்பா... என்னை விட இங்கு கவிதை அழகாகவே அனைவரும் எழுதுகின்றனர்... நான் கத்துக்குட்டி, வளரும் குழந்தை...

      Delete
  4. காதலின் அவஸ்தை!நன்று

    ReplyDelete
  5. Replies
    1. என்னங்க ம்'ட போயிட்டீங்க, ஏதாவது சொல்லிட்டுப் போங்க...

      Delete
  6. Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  7. "உயிர்முடிச்சு" மனத்தை தொட்டு கவிதையாக.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, வணக்கம். தங்களின் அழகான வருகைக்கும், அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி...

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  8. இந்த உயர்முடிச்சு தான் உங்களை சுழல வைக்கும் உன்னத கருவி என்று கருதுகிறேன் ..

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, இந்த உயிர் முடிச்சு சுழல வைக்கும் கருவியா? இருந்தால் மகிழ்ச்சியே!!! எங்க, நகரவே விடமாட்டங்குது... நல்லதா நடந்தா சரி...

      Delete
  9. உங்கள் உயிர் முடிச்சாக இருக்கும்வரை இதே அவஸ்தைதான்.மெல்ல அவிழ்ப்பது புத்திசாலித்தனம்.இல்லையேல்....உங்கள் மனமறியாமல் முடிச்சு வேறிடம் விழுந்துவிடும்.வாழ்த்துகள் வெற்றி.அழகான கவி எழுத்த வைத்த காதலும் வாழ்க !

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஹேமா... நீங்களே இப்படி முடிச்சு வேறிடம் விழும்னு சொன்னால் எப்படி...!!!

      Delete
  10. போட்ட முடிச்சை அவிழ்த்திடாதீங்க:).. அழகாக இருக்கு கற்பனை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா... வணக்கம். வருகைக்கும், அழகான கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  11. அழகிய கவிதை.

    வெற்றிவேல்... பேசாமல் மூன்று முடிச்சாகப் போட்டு விடுங்கள்.
    அவங்களுக்குக் கழுத்திற்கும்
    உங்களுக்குக் காலுக்கும் மாக...

    ReplyDelete
    Replies
    1. மூணு முடிச்சா??? போட்டுடலாமே!!!

      உயிர் முடிச்சுல ஆரம்பிச்சது இங்கு மூன்று முடிச்சில் வந்து நிற்கிறது... இன்னும் வேறு எங்கே சென்று முடியுமோ!!!

      Delete
  12. அய்யோ நட்பை மரணிக்க அனுமதிக்காதீர்கள்.ஆவண செய்யுங்கள் வெற்றிவேல்.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் மாட்டேன் எழில்... நல்லதாகவே நடக்கும்...

      Delete
  13. விரைவில் நல்ல செய்தி சொல்லுங்க நண்பரே... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக அண்ணா... அப்படித்தான் நானும் நம்புகிறேன்...

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கயிறுகளின் முடிச்சன்று! காதல் பின்னும்
      கண்முடிச்சு! கவிமுடிச்சு! இறுகக் கட்டும்
      பயிருகளின் முடிச்சன்று! பருவம் மீட்டும்
      பண்முடிச்சு! பொன்முடிச்சு! குவித்து வைத்த
      துயருகளின் முடிச்சன்று! துன்பம் போக்கித்
      துணிவேந்தும் வன்முடிச்சு! சோ்த்த சொத்தின்
      உயிலுகளின் முடிச்சன்று! ஆம்..ஆம் காதல்
      உயி்ர்முடிச்சு! உயிர்முடிச்சு! உயிர் முடிச்சு!!

      Delete
    2. தங்கள் பதில் கவிதை அழகாக உள்ளது!!!

      வருகைக்கு மிக்க நன்றி, அழகான கவிதைக்கும்....

      தொடர்ந்து வாருங்கள்...

      Delete
    3. மிக்க நன்றி...

      Delete
  15. கவிதையில் அன்பை வைத்து பிணைத்து கட்டிய முடிச்சு காலத்தாலும் அவிழ்க்க இயலாத முடிச்சு அழகிய வெளிபாடு ஆழ்ந்த உணர்வு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்... தங்கள் வருகை தொடரட்டும்...

      தங்கள் வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete
  16. Anonymous12:11:00 AM

    ''...நம் நட்பு மட்டும்
    முடிச்சில் மரணிக்க
    எத்தனிக்கிறது நமக்காய்...''
    Not so good....
    congratz

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.... முடிவு எனக்கும் பிடிக்காதது தான்... அனைத்தும் நாம் எதிர்பார்த்தது போலவா நடக்கிறது...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  17. Anonymous3:25:00 PM

    இருவரும் விலக முற்ப்பட
    நம் நட்பு மட்டும்
    முடிச்சில் மரணிக்க
    எத்தனிக்கிறது நமக்காய்...

    மிகவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், சுந்தர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...