Nov 2, 2012

நீ, நான்

உறக்கத்தில் நான்
       அதில் தோன்றும் கனவெல்லாம் நீ!!!

முகம் பார்க்கும் நான்
       அதில் தோன்றும் பிம்பமாய் நீ!!!

இரவெல்லாம் நான்
       அதன் உறக்கமெல்லாம் நீ!!!

வெளிச்சத்தில் நான்
       அதன் நிழலெல்லாம் நீ!!!

மழையில் நனையும் நான்
       என்னை நனைக்கும் மழையாய் நீ!!!

தாகத்தில் நான்
      தூரத் தெரியும் கானல் நீராய் நீ!!!

தூரப் பறக்கும் பறவையாய் நான்
       நான் துரத்தும் வான் முகிலாய் நீ!!!

கார் மேகமாய் நான்
       என்னைக் கிழிக்கும் மாய மோகினியாய் நீ!!!

காண்பதெல்லாம் நான்
      காணும் காட்சியெல்லாம் நீ!!!

வாழ்வதெல்லாம் நான்
     என்னை வாட்டும் துயரமெல்லாம் நீ!!!

தொலைந்து போன நான்
     தூரத் தெரியும் விளக்காய் நீ!!!

உடலாய் நான்
     என்னுள் ஓடும் உயிராய் நீ!!!

............................................................................வெற்றிவேல்


30 comments:

  1. வெற்றிவேல் அவர்களே....

    அருமை... அசத்திட்டீங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் முதல் வருகைக்கும், இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  2. அழகான வார்த்தைக் கோர்வை
    கலக்கல்.....கலக்குங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாஸ்...

      தொடர்ந்து வருகைத் தந்து சிறப்பியுங்கள்...

      Delete
  3. அழகிய காதல் வரிகள்!அருமை!

    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்துள்ளீர்கள்...

      வணக்கம் அண்ணா, தங்கள் வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  4. vetri super... antha nee yaaru???? may i know her name????

    ReplyDelete
    Replies
    1. நீ???

      உங்களுக்குச் சொல்லாமலா நண்பா???

      காலம் வரும்போது கண்டிப்பாக அனைவருக்கும் உரக்க சொல்லலாம் நண்பா...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  5. என்னப்பா வெற்றிவேல் காதல் கடிதம் எழுதி காண்பிக்க வேண்டியவர்களிடம் காட்டாமல் எங்ககிட்ட அப்ரூவல் வாங்க வந்துட்டீங்க

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா ஹாஆஆ

      அங்கயும் அனுப்பியாச்சு எழில்க்கா...

      நீங்க படிச்சி நல்லாருக்குன்னு சொன்னாலே ஓகே தான்...

      Delete
  6. என்னய்யா நடக்குது , பலமான காதல் காற்று வீசுது போல .. ம்ம்ம் .. எல்லாம் சுபமாக அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா. எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகுது...

      காற்றோடு நின்றுவிட்டால் போதுமே? அது புயலாக அல்லவா மாறிக் கொண்டு இருக்கிறது... நீலம் போன்று கடைசியில் சுபமாக அமைந்தால் நல்லதே...

      Delete
  7. Replies
    1. வணக்கம் நண்பா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்...

      Delete
  8. Uyier Kavithai puthumaiyaana !

    ReplyDelete
    Replies
    1. உயிர் கவிதை- கேட்கவே மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பா...

      Delete
  9. Anonymous7:08:00 PM

    பல வெற்றிகளை பெற்று மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா...

      வருகைக்கும்...

      வணக்கம், நன்றிகள்...

      Delete
  10. பிரிவில் வாடும் இளைஞனின் கவிதை .பாராட்டுகள் !!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  11. Super. Nalla iruku. Suba maangalyam thandhunanena ok than. Kaadhalla moolgidaadheenga. Ulagam romba perusu thambi... Vaalthukkal ullame.

    ReplyDelete
    Replies
    1. என்ன நண்பா? மந்திரம்லாம் பலமா இருக்கு. அய்யர் வேலைலாம் எப்போ பார்க்க ஆரம்பிச்சீங்க!!!

      தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய கருத்துக்கும் அன்பு வருகைக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  12. ennapa vetri enna ithellam.... sollave illa... romba naalave oru maargama iruka neee. all the best.... antha ponnu kita poi sollu intha kavithaya.. vazhthukkal vetri...

    ReplyDelete
    Replies
    1. இதுலாம் சொல்லிட்டா மலர் வருது... முன்னாடியே சொல்றதுக்கு...

      தங்கள் வாழ்த்து போலவே எல்லாம் அமையட்டும்...

      Delete
  13. வலைக்குள் படுத்திருக்கிறேன் நான்
    இரத்தம் குடிக்க அலையும் நுளம்பாய் நீ !

    எப்பூடி...........ஹிஹிஹி !

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சூப்பரா இருக்கே ஹேமா...

      ரெண்டுமே தூங்க விடாம பண்றதுதானே!!!

      Delete
  14. அட டா... என்ன நண்பா இதோட நிப்பாட்டிட்டீங்க...

    இன்னும் ஏதாவது சொல்ல்லிட்டுப் போங்க...

    நன்றி, வணக்கம் நண்பா..

    ReplyDelete
  15. மேகத் திரை விலக்கி

    சிகப் பழகு பொட்டுக்காரன்

    முகன் காட்டி சிரித்திடவே

    செவ்வாயோ முகம் சிவந்தாள்

    தடை கலைந்து தடன் பதிக்க

    மடை திறந்த வெள்ளமென

    கடை கண்ணே விடியலாக
    வாழ்த்துக்கள் என்றும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கவிதையும் அருமை...

      தொடர்ந்து வாருங்கள்...

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...