Nov 25, 2012

களவாடப் படும் கனவுகள்


தினமும் வந்துவிடுகிறாள்
என்னுள், தவறாமல்
கனவுப் பொழுதிலும்,
நினைவுப் பொழுதிலும்...

வரும் வேளையில்
என் தேவதை
அழகுடன் உலாவுகிறாள்...

எங்கும் வருகிறாள்...
அவளாகவே கொஞ்சுகிறாள்,
மகிழ்ச்சியின் எல்லைக்கும்
கூட்டிச் செல்லுகிறாள்...

கரம் பிடித்து நடக்கிறாள்,
செல்ல சண்டையிடுகிறாள்,
காதோடு காதாய் ரகசியம் பேசுகிறாள்
என்னுள் நித்தமும், எனக்கு
மட்டும் கேட்பதுபோல்...

அத்தனையும் கொடுத்துவிட்டு
செல்லும் வேளையில் மட்டும்,
மறக்காமல் என் உறக்கத்தையும்,
கனவையும் அவளுடன்
களவாடிவிட்டுச் சென்றுவிடுகிறாள்...

கனவுடன், என்னையும் களவாடுவாள்
என்ற எதிர் பார்ப்பில்
களவாடப்பட  காத்திருக்கிறேன்
அவள் வருகைக்காய்
 அடுத்த நாளும்...!!!

.................................வெற்றிவேல்...28 comments:

 1. Anonymous4:36:00 AM

  ''..செல்லும் வேளையில் மட்டும்,
  மறக்காமல் என் உறக்கத்தையும்,
  கனவையும் அவளுடன்
  களவாடிவிட்டுச் சென்றுவிடுகிறாள்..''
  mmm....காதல் படுத்தும் பாடு!.....களவாடப் படட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கோவைக் கவி...

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   வருகைத் தொடரட்டும்....

   Delete
 2. ஆகா ஆகா.....தொலைச்சாச்சா நித்திரையை...அவ்ளோதான்.....!

  அழகான கவிதை வெற்றி.இயல்பான உணர்வோட வந்திருக்கு வரிகள்.நல்ல தலைப்பு.நானும் இந்தத் தலைப்புக்கொரு கவிதை எழுதவேணுமே !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஹேமா, எல்லாமும் போயே போச்சு...

   வணக்கம். கவிச்சக்கரவர்த்தினி கையால் பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி...

   வருகையும், பாராட்டுகளும் தொடரட்டும்... மகிழ்ச்சி..............!!!

   Delete
 3. காத்திருங்கள் எப்போதாவது ஒர் நாள் வருவாள் கூட்டிச் செல்ல.....
  அழகான கவிதை ரசித்தேன்.....

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சிட்டு... தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   வருகைத் தொடரட்டும்...

   Delete
 4. அருமை அருமை
  வித்தியாசமான ரசித்து மகிழும்படியான சிந்தனை
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம், ரமணி அண்ணா...

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 5. விரைவில் வர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன் அண்ணா, வணக்கம்... தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

   Delete
 6. Arumaiyaana kavidhai "kaadhal kavignar vettri" avargale. Yaar yaarai kalavaadap pogiraargal enbadhai poruththirundhu thaan paarkka vendum. Photola ullavanga thaan unga aalaa??? So cute....

  ReplyDelete
  Replies
  1. காதல் கவிஞர் வெற்றி'யா??? எனக்கு சிரிப்புதான் வருகிறது நண்பா...

   படத்தில் இருப்பவர் யாரென்றே தெரியாது எனக்கு, அவர் எதோ ஓர் படத்தில் நடித்தவராக இருக்கலாம்... இப்படி தாங்களாக எந்த முடிவும் எடுக்க வேண்டாமே!!!

   Delete

 7. வணக்கம்!

  களவாடப் பட்ட கனவுகளை எண்ணி
  உளம்வாடத் தந்தகவி ஓங்க! - வளத்தை
  வழங்குக வண்டமிழ்! வெற்றிவேல் நாளும்
  முழங்குக காதல் மொழி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துகள் போல் அனைத்தும் அமையட்டும் அய்யா...

   வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் வணக்கம்

   பிரான்சு கம்பன் கழகத்தில் ஒவ்வொரு மாதமும் கவியரங்கம் நடைபெறுகிறது. 24.11.2012 அன்று நடைபெற்ற கவியரங்கின் தலைப்பு இரவின் புன்னகை!

   கழக கவிஞா்கள் எழுவா் இரவின் புன்னகையை இனிய தமிழில் வழங்கினா்!

   இவ்வார இறுதியில் அனைத்துக் கவிதைகளும் என்னுடைய மின்வலையில் புன்னகை புரியும்!

   படித்து மகிழுக! பைந்தமிழ்த் தேனைத்
   குடித்து மகிழுக! நற்சுவையில் நெஞ்சம்
   தடித்து மகிழுக! தன்னோ் கருத்தை
   வடித்து மகிழுக வந்து!

   Delete
  2. தவறாமல் வந்து படித்துவிடுகிறேன் அய்யா... தகவலுக்கு நன்றி...

   Delete
  3. கவிதை வாசித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

   Delete
 9. இந்த காத்திருப்பின் சுகமே தனி தான் தம்பி ..
  நித்தம் வந்து இன்பம் பொங்க காதல் செய்வீராக...

  ReplyDelete
  Replies
  1. நித்தம் வந்து காதல் பொங்க!!!

   கேட்க நல்லாத்தான் இருக்கு.

   Delete
 10. //
  அத்தனையும் கொடுத்துவிட்டு
  செல்லும் வேளையில் மட்டும்,
  மறக்காமல் என் உறக்கத்தையும்,
  கனவையும் அவளுடன்
  களவாடிவிட்டுச் சென்றுவிடுகிறாள்...

  //

  அழகான வரிகள் ..

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ராஜா, அண்ணா. வணக்கம். தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் இனிய நன்றி...

   வருகைத் தொடரட்டும்...

   Delete
 11. Replies
  1. படித்து விட்டேன், கருத்தும் வழங்கிவிட்டேன்... அருமையான சட்டம். வடிவம் பெறுமா என்று பார்ப்போம்...

   Delete
 12. Arumai nanba... Manathukku iniya virunthu.
  VARIKUDHIRAI ARUNPRASATH

  ReplyDelete
  Replies
  1. நீண்ட நாள் கழித்து வந்துள்ளீர்கள்... வணக்கம் அருண். நலமா? படிப்புலாம் எப்படி போகுது?

   Delete
 13. அன்பின் வெற்றிவேல் - அருமையான களவாடப்படும் கனவுகள் கவிதை -விரைவினில் நீயும் களவாடப்பட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அந்த நம்பிக்கையில் தான் காலம் நகர்த்திக்கொன்டிரருக்கிறேன் அய்யா...

   வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றிகள்...

   Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...