Feb 11, 2014

உதிரும் நான் -29

மலரை வருடும்
பூந்தென்றலாய் தான்
கடந்து சென்றாள்
என்னுள்...

இரயில் கடந்த
தண்டவாளமாய்
அதிர்ந்துகொண்டிருக்கிறேன்
இன்னமும் நான்...


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



34 comments:

  1. பிரிவின் துயரை மிக தெளிவாக உணர்த்திய கவிதை வரிகள் !
    வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  2. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்...!

    ReplyDelete
  3. ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபா
    செம

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆத்மா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. அடடா, அந்த அளவிற்கா உங்களின் இதயம் இருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அங்க மட்டும் அப்படி அண்ணா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வாருங்கள்.

      Delete
  5. அருமை... கவிஞர் வெற்றி...
    அதிர்வுகள் கவிதையாய்... நன்று

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மது சகோ.

      கவிஞர் வெற்றி...???? இது புதுசு எனக்கு. நீங்கதான் கவிஞர்னு முதல் முதல்ல சொல்லிருக்காங்க. நன்றி.

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  6. தங்களின் காதல் ஹைக்கூ கவிதைகளை எல்லாம் இப்போது தான் படித்து முடித்தேன். மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
    தொடருங்கள். தொடர்ந்து படிக்கிறேன்.

    நேரம் இருப்பின் என்னுடைய உரைநடை காதல் கவிதைகளையும் (4 மட்டும் எழுதியுள்ளேன்) படித்துப்பாருங்கள். உங்கள் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏதோ எனக்கு தெரிந்தவற்றை கிருக்கியிருக்கிறேன் .

    http://unmaiyanavan.blogspot.com.au/p/blog-page_31.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சொக்கன் சுப்பிரமணியன் அண்ணா...

      தாங்கள் அனைத்தையும் படித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... தாங்கள் தொடர்ந்து வருகிறேன் என கூறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி அண்ணா...

      தாங்கள் நான்கு குறும்காதல் கதைகளையும் வாசித்து, கருத்து வழங்கியுள்ளேன் அண்ணா... மிகவும் அழகாக உள்ளது. தாங்களும் தொடர்ந்து எழுதுங்கள்.

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  7. அதிர்ச்சி ...mild அட்டாக் தான் ,டோன்ட் ஒர்ரி ...heavyஅட்டாக் ஆகாமல் பார்த்துக்குங்க சகோ !
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பகவான்ஜீ அண்ணா,

      மைல்ட் அட்டாக் ஹெவி அட்டாக்கா மாறாமல் இருக்க முயற்சி செய்கிறேன் அண்ணா...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. சும்மா அதிருதுப்பா! எங்கள் மனதையும் அதிர வைத்து விட்டது! அசத்துரீங்கப்பா!

    அதிரும் இதயத்தைத்
    தாங்கிப் பிடித்து
    மீட்டினாளாமே!
    சுருதி சுத்தமாய்!

    வாழ்த்துக்கள்! தொடருங்கள் தம்பி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் துளசிதரன் அய்யா & கீதாமா...

      ஓ... அதிர்ந்தது நான் மட்டும் தான்னு நெனச்சேன், நீங்களுமா??? நல்லது.

      அதிரும் இதயத்தை
      மெதுவாகத்தான் மீட்டினாள்...
      ஆனால்
      சுருதியோடு உயிரும்
      சேர்ந்தல்லவா கசிகிறது....!

      தங்கள் இனிய வாழ்த்துகளுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி... தொடர்ந்து வருகைத் தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்... மனப்பூர்வ நன்றி...

      Delete
  9. தென்றல் வருடிய மலர்..
    இரயில் சென்ற தண்டவாளம்...
    என்னவொரு ஒப்பீடு..உவமை...அசத்துறீங்க போங்க. :)
    வாழ்த்துகள் வெற்றிவேல்! த.ம.5

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கிரேஸ் அக்கா...

      தங்கள் தொடர் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி.

      த.ம வாக்கிற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. அருமை. நல்ல நயம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  11. என்ன ஒரு முரண்பாடு... சூப்பர்...

    ReplyDelete
  12. வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    ReplyDelete
    Replies
    1. தேடி வந்து கருத்து வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

      தொடர்கிறேன், நன்றி...

      Delete
  13. சிறந்த உளப்பகிர்வு

    ReplyDelete
  14. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது வாழ்த்துக்கள்.
    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தாங்கள் எனது கவிதை பற்றி வாழ்த்தி அறிமுகப்படுத்தியுள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி...

      Delete
  15. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      மகிழ்ச்சி, தகவலுக்கு நன்றி...

      Delete
  16. வணக்கம் !
    அழகான கவிதைகள் அனைத்தும் வாசிக்க வருகிறேன் தொடர்ந்து.
    தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி...

      தங்கள் பாராட்டுகளும், வாழ்த்துகளும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது...

      நன்றி...

      தொடருங்கள், நானும் தொடர்கிறேன்... நன்றிகள் பல.

      Delete
  17. நீங்கள் தேர்ந்தெடுக்கும் படங்களும் அவற்றிற்கான உங்கள் கவிதையும் மிக அழகாய்ப் பொருந்துகின்றன.

    வாழ்த்துகள். தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  18. தங்கள் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி அண்ணா...

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...