Jul 4, 2013

அவள் -ஆறாவது பெருங்காப்பியம்

உன் பொன் முகத்தில்
எப்போதுமே தவழும் 
புன்னகையை அணியாக்கி...

உதட்டுச் சுழித்தலை மோனையாக்கி
கண் சிமிட்டலை எதுகையாக்கி
பின்வரும் அழகு சிரிப்பை இயைபாக்கி...

உன் வெட்கம்- எனக்கு அந்தாதி
எனைத் தீண்டும் உன் குளிர்ந்த
பார்வையோ மடக்கு என்பேன்...

உன் செவ்வாயில் உதிரும் 
பன்சொற்களை செய்யுளாக்கி...
மனத்திரையில் ஓடும் நம்
காதலைப் பொருளாக்கி...

தமிழ் தனக்காக எழுதிக் 
கொண்டிருக்கும்
ஆறாவது பெருங்காப்பியம்
உன்னை'யும்
நம் காதலையும் தானடி...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...



34 comments:

  1. தலைப்பும் அதற்கு அருமையான
    அழகியவிளக்கமாய் அமைந்த கவிதை
    அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...அண்ணா.

      Delete
  2. Replies
    1. தமிழ் மன வாக்கிற்கு மிக்க நன்றி...

      Delete
  3. உதட்டுச் சுழித்தலை மோனையாக்கி
    கண் சிமிட்டலை எதுகையாக்கி///
    ஆஹா அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      தங்கள் இனிய வருகையும், கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது...... நன்றி.

      Delete
  4. சூப்பர்... வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete

  5. வணக்கம்!

    தமிழ்மணம் 5

    யாப்பின் உறுப்பெண்ணித் தீட்டிய பா!கன்னற்
    தோப்பின் சுவையெனச் சொல்லு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      அழகுக் கவிதையில் தாங்கள் கருத்தினை செலுத்தும் விதம் மிகவும் மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து வாருங்கள்...

      Delete
  6. காப்பியம் காட்டும் கவிதரும் கவிஞரே கரம்
    கூப்பியே மகிழ்வினைக் கூறினேன்!

    அருமை! வாழ்த்துக்கள் சகோ!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      என்னை கவிஞர் என்று அழைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தோழி...

      Delete
  7. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. தமிழ் அகராதியை கவிதையில் புகுத்திவிட்டேர்களோ ? அருமை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம்... அவளே ஒரு அகராதி தானே!

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  9. ஆறாவது பெருங்காப்பியம் யாப்பிலக்கணம் சொல்லுதோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா... அவள் கண்களே ஆயிரம் அணிகளுக்கு உவமையாயிருப்பாள்... யாப்பு சொல்வதில் ஆச்சர்யம் எது...

      Delete
  10. அன்பின் வெற்றி வேல் - சிந்தனை நன்று - ஆறாம் காப்பியம் அருமை - சொற்கள் தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட சொற்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... வருகை மகிழ்ச்சி அளிக்கிறது...

      Delete
  11. நல்ல சிந்தனை....

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  12. Anonymous12:00:00 AM

    தமிழ்காப்பிய அங்கங்கள் கவிதையானது அருமை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்...

      வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. அருமை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  14. தமிழ் இலக்கணத்தை உவமையாக்கி அழகானதோர் காதல் கவிதை. வாழ்த்துகள் சகோதரரே !!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் முகில்...

      தங்கள் வாழ்த்து என்னை மகிழ்ச்சியடைய வைக்கிறது... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  15. Replies
    1. வருகைக்கு நன்றி சீனி...

      Delete
  16. Anonymous10:21:00 AM

    வணக்கம்
    இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_16.html?showComment=1381898980443#c4078958374580460760
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் தகவல்களுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணா...

      Delete
  17. கவிதை அருமை வலைச்சரத்தில் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் கவி நாகா அண்ணா...

      தங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்க்யும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...