Jul 20, 2013

அவள் சென்று விட்ட பிறகு...

சமையலறையில்
சமைத்ததை நானும்
சமைந்ததை அவளும்
சமமாகப் பரிமாறிய நேரங்களில்
சிந்திய பருக்கைகளையும்
சிதறிய முத்தங்களையும்
பசியோடு 
அவள் சென்றுவிட்ட 
ஆடி மாதத்தில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
தனியாக நான்...

வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...


30 comments:

  1. அதானே...! எவ்வளவு சிரமம்...! ஆடி என்றால் பிரிக்கத்தான் வேண்டுமா...?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குப் புரிவது அவர்களுக்குப் புரிய மாட்டங்குதே! என்ன அண்ணா செய்ய... முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா....

      Delete
  2. Replies
    1. தமிழ் மண வாக்கிற்கு நன்றி...

      Delete
  3. ஆடியின் பிரிவு இப்படி ஒரு அருமையான கவிதையைத் தருமெனில் அதற்காகவே தம்பதிகளைப் பிரிக்கலாம் வெற்றிவேல்!

    ReplyDelete
    Replies
    1. :) வணக்கம் அண்ணா...

      இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  4. ஆடியில் பிரிவா மாப்பூ:))) அருமையான கவிதை தந்த அடுப்படி(சமையல் அறைக்குச் சொல்வோம் )நன்றி

    ReplyDelete
    Replies
    1. அடுப்படிக்கு நன்றியா...! நல்லது.

      வணக்கம் நண்பா... இனிய வருகைக்கும், அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  5. Replies
    1. வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அடப்பாவமே..... ஆடி விளையாடி விட்டதா!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆமாம் அண்ணா... ஆடி விளை'யாடி விட்டது... ஆடி பிறந்தால் அனைவருக்கும் வழி பிறக்கும், ஆனால் புது மன தம்பதிகளைத் தவிர...!

      Delete
  7. ஆடி.... இப்படி பிரித்து ஒரு ஆட்டம் போடுகிறதே.....

    நல்ல கவிதை....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      இனிய வருகைக்கும் அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  8. ஆடிவந்ததால் காதல் கவியும் பிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாதேவி...

      ஆடி வந்ததால் காதல் கவிதை பிறக்கவில்லை, அவள் பிரிந்ததால் வந்த கவிதை இது...

      Delete
  9. ஆடி கவிதை யில் பிரிவின் வாட்டம் தெரிகிறது

    கவிதை ரசித்தேன் நண்பா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்,

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  10. பிரிவின் வலி அருமை சொந்தமே!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      வருகைக்கும், இனிய கருத்தும் மிக்க நன்றி...

      Delete
  11. பிரிவின் வலியை மிக அழகாக சொல்லியிருகீங்க..சூப்பர். (5)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மணிமாறன்,

      வருகைக்கும் இனிய கருத்துக்கும் நன்றி... தமிழ் மண வாக்கிற்கும் என் உயரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

      Delete
  12. Replies
    1. வணக்கம் தோழி...

      வருகைக்கும், இனிய கருத்துக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. சகோ!... அடடா....
    இப்படி ஒரு பிரிவுத் துயர் இங்கே நடந்திருக்கா.அட பாவமே!
    என் கண்ணில் இது எப்படித் தெரியாம போச்சு...

    பிரிவுக் கவிதையிலும் தெரிவித்த நெருக்கம் அருமை!
    நல்ல கற்பனை!

    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழி,

      தங்கள் கமென்ட் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அப்படியே தங்கள் வருகையும்... உங்கள் கண்ணில் இது படாமல் போனது வருத்தமே!

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் அப்படியே தமிழ் மண வாக்கிற்கும் என் நன்றிகள்...

      Delete
  14. Anonymous2:54:00 PM

    வணக்கம்
    வெற்றிவேல் (அண்ணா)

    என்ன சுப்பர் கவிதை ஆடியில காற்றடித்தாள்பரியத்தான்பார்க்கும் ஆவணியில் காற்றடித்தால் சேரத்தான் பார்க்கும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்,

      நான் அண்ணனா? எனக்கு அப்படியொன்றும் இப்போது எனக்கு வயதாகிவிடவில்லை. சின்ன பையன்... குழந்தை என்று கூட சொல்லலாம், தவறில்லை... ஆவணி வரும் வரை பொறுத்திருக்க வேண்டுமே, அதானே இப்போது கஷ்ட்டம்...

      தங்கள் இனிய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...! வருகை தொடரட்டும்...

      Delete
  15. அன்பின் வெற்றிவேல் - கவிதை அருமை - ஆடி மாதப் பிரிவினில், சமைத்ததையும் சமைந்ததையும் பரிமாறிக்கொண்ட மகிழ்ச்சியான நாட்களை - மலரும் நினைவுகளை - நினைத்து மகிழ்வது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      வருகைக்கும், அழகான கருத்துக்கும், நன்றி அய்யா... பழைய ஞாபகங்கள் எப்போதுமே சுகம் தானே...!

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...