Sep 30, 2012

மனித மூளையும் இரண்டு திருடர்களும்: ஓர் அசாத்திய தகவல்

மனித மூளை பற்றி நாம் அறிவதெல்லாம் உலகிலேய மிகவும் சிக்கலான ஓர் அசாத்தியமான அமைப்பு. அது நமது நரம்பு மணடலத்தின் தலைமை கட்டுப் பாட்டு அமைப்பு என்றும் அதுதான் நமது உடலை கட்டுப் படுத்துகிறது என்றும் அறிவோம். (இதனை ஆங்கிலத்தில் The brain is the part of the central nervous system located in the skull. It controls the mental processes and physical actions of a human being.) ஆனால் இன்னும் நமக்கு நமது மனித மூளை பற்றி தெரியாத தகவல்கள் என்பதைவிட, அறியாத தகவல்கள் ஒன்று உண்டு என்றும் கூறலாம்.

கேட்டால்  சிறு அதிர்ச்சி ஏற்படும் என நினைக்கிறேன்.

மனித மூளை பற்றி முதன் முதலில் ஆராய்ந்தவர் கி.மு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த அரிஸ்டாட்டில். அவர் மூளை பற்றி கூறுகையில் 'இதயம் செலுத்தும் இரத்தத்தை மூளை குளிர்விக்கும் வேலையையே செய்கிறது' என்று நம்பினார்.

அடுத்து முதலாம் நூற்றாண்டில் மருத்துவர் அலெக்சான்றியன் என்பவர், மனித எண்ணமானது இதயத்தை விட மூளையே கட்டுபடுத்துகிறது என்று நம்பினார், மேலும் ரோமன் மருத்துவரான காலன் என்பவர் மிருகங்களின் ஆன்மாக்களின் அமைவிடம் தான் மூளை என்று வரையறுத்தார். அதாவது அவரது கருத்துப் படி மனித மற்றும் விலங்குகளின் உயிர் மூளையில் தான் உள்ளது என்று கூறினார்.

மனித மூளை என்பதை ஆங்கிலத்தில் Brain என்றும் அழைக்கிறோமே? அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? யாராவது இப்படி சிந்தித்தது உண்டா? அந்த சிந்தனையின் தேடல்களின் விளைவு தான் இந்தப் பதிவு. சரி விஷயத்திற்கு வருகிறேன். The Brain என்ற சொல் Braegen என்ற லத்தீன்  சொல்லிலிருந்து தோன்றியது. Braegen என்றால் தேவையற்ற சதைப் பிண்டம் என்று பொருள். ஆம் ஆங்கில மருத்துவம் மேற்க்குலகில்  வளர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் மூளை பற்றி இப்படிதான் நினைத்தார்கள், இது நமது உடலில் தேவையில்லாத உறுப்பு என்று.

ஆனால் இதன் முக்கியத்துவம் இரண்டு திருடர்களாலே தான் உலகிற்கு தெரிய வந்தது என்றால் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை.

நண்பர்களை சுமார் ஆறு  நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், சரியாக கி.பி. 1543 ம் ஆண்டு. மேலை நாடுகள் முழுவதும் கிறித்துவம் ஆழாமாக வேரூன்றி அரசு, அரசன் என அனைத்தும் கிறித்துவ பாதிரியார்களான மதத்தலைவர்கள் கையில் தான் இருந்தது. அதனால் அவர்கள் மத வழக்கப் படி இறந்த உடலைத் தோண்டுவதும், அதுபற்றி ஆராய்வதும் கொடூர குற்றம் ஆகும். அப்படி தடையை மீறி செய்தால் மரண தண்டனை தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மத கோட்பாடுகளையும், பைபிள் கட்டளைகளையும் மீறுவோரை இவனுக்கு சாத்தான் பிடித்துள்ளது என்று கொடூரமான முறையில் கொன்றனர். இது கொலைக் குற்றமாக கருதவில்லை, பாவ மன்னிப்பு என்றே அனைவராலும் கருதப்பட்டது...

இந்தக் காலகட்டத்தில் ஒரு மருத்துவர் மனித உடல் பற்றி மிகவும் ரகசியமாக ஆராய்ந்து வந்தார், அவர் பெயர் தான் இயற்பியலாளரும் மருத்துவருமான   லியானார்டோ டாவின்சி.  இப்படிப்பட்ட மத நெருக்கடிகளால் அவரால் தனது ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ள இயலவில்லை. இதே காலகட்டத்தில் பாதுகாப்பும் பலப் படுத்திவிட்டதால் திருடர்களின் நிலையம் மிகவும் பரிதாபமாக ஆகிவிட்டது. அவர்களுக்கும் மரண தண்டனைதான் விதிக்கப் பட்டது. 

இந்த நேரத்தில் தான் வேலை இழந்த அந்த இரு திருடர்களும், இந்த மருத்துவரும் சந்தித்துக் கொண்டனர். இவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம், யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது. திருடர்களுக்கு அவர் தங்கம் போன்று பணம் கொடுக்க வேண்டும். இப்படிதான் இந்த கூட்டுக் களவானிகளின் வேலை ஆரம்பாமானது.

ஆரம்பத்தில் இந்த இரு திருடர்கள் மருத்துவருக்கு பணத்திற்கு மட்டுமே வேலை செய்தனர், பின் மருத்துவரின் அர்ப்பணிப்பு உணர்வு கண்டு, இவர்களும் அவருக்கு உண்மையாக உதவினர். இவர்கள் ஒரு பிணத்தை திருடி வந்தால் அவர்களின் பெயர், முகவரி, அவர் எந்த வியாதிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார், என்பது பற்றிய அந்த பிணத்தின் அனைத்து தகவல்களும் இவர்கள் கொண்டுவந்து விடுவர். 

இந்த நிலையில் தான் ஒருவரது (பிணத்தின்) மண்டையோட்டின் உட்பகுதியை அந்த மருத்துவர் பிளந்து பார்க்கும்போது அவரது இடது புற மூளை அனைத்தும் சிதைந்து காணப்பட்டது. அவரதுகுறிப்பை பார்க்கும்போது அவருக்கு வலது புறப் பக்கவாத நோய் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது தான் மனித மூளையின் செயல்பாடு உலகில் வெளியான முதல் நிகழ்வு. இதன் பிறகுதான் உடலின் இயக்கத்திற்கும், மூளைக்கும் மாபெரும் தொடர்பு உள்ளது என்று பின்னர்தான் அறிந்து இது பற்றிய முழு ஆராய்ச்ச்சியில் மேலை நாட்டு மருத்துவர்கள் இறங்கினர்.

இதன் பிறகுதான் பல விசேஷங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தது நம்மை கட்டுப் படுத்தும் நம் மூளைப் பற்றி. அத்தனை கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாண்டி இப்படி உதவிய அந்த இரு திருடர்களுக்கும் மருத்துவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோமாக!!!

நண்பர்களை மீண்டும் ஓர் சிறு இடைவெளிக்குப் பிறகு சந்தித்தில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் என் முதற்க்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டும், அப்படியே தங்கள் நலத்தையும் நான் விசாரித்துக் கொள்கிறேன்.

நண்பர்கள் படித்துவிட்டு தங்கள் கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள். முடிந்தால் கீழ் உள்ள ஓர் ஓட்டுப் பட்டையில் வாக்களித்து விட்டுச் செல்லுங்கள்...

நன்றி:
ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம்.
அறிவியல் இதழ்: The secret life of the BRAIN

21 comments:

 1. புதிதாக அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   தொடர்ந்து வருகை தாருங்கள்...

   நன்றி வணக்கம்...

   Delete
 2. சூப்பர் வெற்றி. காலைவேளையில் முதல் தகவல் அளித்த தங்களுக்கு நன்றி... அந்த மருத்துவர் வேற யாரும் இல்லை நான் தான்.....P.S don't laugh.

  ReplyDelete
  Replies
  1. அந்த மருத்துவர் தாங்கள் என்பது முன்பே தெரிந்திருந்தால் பெயருடன் போட்டிருப்பேனே, காலம் கடந்த தகவல் நண்பா. இருக்கட்டும் அடுத்த முறை மருத்துவர் சேகர் என்று போட்டுவிட்டால் போகிறது...

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

   Delete
 3. இருக்கிறதைப் பற்றி மட்டும்தான் கதைக்கவேணும் வெற்றி....இல்லாததைப் பற்றியெல்லாம்....சரி சரி நல்ல தகவல்தான்.வேலைக்கு நடுவிலயும் மூளை வேலை செய்திருக்கு உங்ககளுக்கு.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. உங்க கூட சேர்ந்ததுக்கு அப்புறம்,எப்படி இருக்குறத மட்டும் கதைக்க முடியும்...

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 4. அன்பு மகன், வெற்றி ,மிக நல்ல பதிவு .நண்பர் ஹேமா மிக நன்றாக நகைச்சுவை உடன் பதில் கொடுத்து உள்ளார் .நான் மூளை இருக்கா (எனக்கு) ஆராய தொடங்கியுள்ளேன் ..நீங்களும் என்க்கு இருக்க என்று ஓர் முறை பார்த்து செயல்படவும் ....ஹ. ஹா ஹா.
  அன்புடன் கருப்பசா

  ReplyDelete
  Replies
  1. ஹ ஹா ஹா. தாங்களும் நன்றாகவே நஹைச்சுவை செய்கிறீர்கள்.

   தொடர்ந்து வருகை தாருங்கள், மிக்க நன்றி அப்பா...

   Delete
 5. நல்ல தகவல்....
  எனக்கு மட்டுமல்ல என்னோடு சேர்த்து இன்னும் பலருக்கும் தெரியாத விடயமாகத்தான் இருக்கிறது...
  பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா
  தொடர்ந்தும் இப்படியான தகவல்களைத் தேடித்தாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி, வணக்கம்.

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

   Delete
 6. புதியதாக ஒரு தகவலை தந்ததற்கு மிக நன்றி..

  நன்றி,
  மலர்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி.

   என்னால் தங்கள் தலையங்க அட்டவணைப் பற்றி சரியாக எப்படி உபயோகிப்பது என்று தெரியவில்லை. முடிந்தால் விளக்குங்கள்...

   நன்றி, வணக்கம்...

   Delete
 7. தகவளுக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 8. புதியதொரு தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   தொடர்ந்து வருகைத் தாருங்கள்..

   Delete
 9. thanks for giving work to brain.........

  Ambur manju

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்... வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி...

   Delete
 10. thanks for giving work to brain.........

  Ambur manju

  ReplyDelete
 11. 1).நெஞ்சுக்குள்
  வஞ்சகத்தீயை
  வளர்த்தேன்
  அன்பெனும்
  அழகிய பூக்கள்
  கருகிப்போனதே!

  காமத்தீயை
  கண்ணுக்குள்
  வைத்தேன்
  சிற்றின்பம்
  சிதையில் போனது
  பேரின்பம்
  புதைந்துப்போனதே!

  அறியாமையை
  அறியாமல்
  அகம்பாவிதம்
  ஆனவத்தீயில்
  அகம் குளித்தேன்
  அறிவுதான்
  எரிந்துபோனதே
  அழிவுதான்
  வந்து சேர்ந்ததே!

  (வள்ளுவர் வாக்கு
  அணையாத
  அகல் விளக்கு
  அதை நீ
  ஏற்றி வைத்தால்
  அத்தீயில்
  வாழ்விருளும் கலையுமே
  வாழ்க்கையும் ஒளிருமே
  வாடாதே என் தோழா!)

  ReplyDelete
  Replies
  1. அருமையான கவிதையை விட்டுச் சென்றுள்ளீர்கள் அய்யா. மிக்க நன்றி...

   Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...