Sep 19, 2012

புள்ளையார் அதிர்ஷ்ட்டமும், தென்னகத்தில் அவர் வேரூன்றிய விதமும்

நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இந்த நல் நாளில் நாம் விநாயகரையும் அவர் தென்னகத்தில் வேரூன்றிய விதத்தையும் சிறிது அலசலாம் என்று நினைக்கிறேன்....

அனைவரும் சிறிது சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியாக கி.பி.624 ஆம் ஆண்டிற்கு செல்லுங்கள், ஏனெனில் அப்போதுதான் நம்மால் சரியாக அறிந்துகொள்ள இயலும்.

இந்த ஆண்டில்தான் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசி மாபெரும் போர் செய்து விநாயகர் தமிழகம் வர வழிவகுத்தான். இந்த போரில் காஞ்சி மன்னன் முதலாம் மகேந்திர வர்ம பல்லவன் தன் படைகளுடன் தனது காஞ்சிக் கோட்டையில் பதுங்கிக் கொண்டான். சில ஆண்டுகள் நீடித்த இந்த காஞ்சி முற்றுகையில் பல்லவர்கள் தோற்றனர் என்று சிலரும் சாளுக்கியர்கள் காஞ்சியை கைப்பற்ற இயலாமல் பின் வாங்கி தோற்று ஓடினர் என்று சிலரும் கூறுகின்றனர். இரு வேறு கருத்துகள் வழங்கப்படுகிறது வரலாற்று ஆசிரியர்களால். அமரர் கல்கி கூட தனது சிவகாமியின் சபதம் என்ற நூலில் முதலாம் மகேந்திர பல்லவன் வெற்றி பெற்றதாக எழுதியிருப்பார், நாம் இந்த இடத்தில் சிறிது சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியின் பலத்தையும் சிறிது அறிந்துகொள்ள வேண்டும். அக்காலங்களில் வட இந்தியாவில் மிகவும் சிறந்தவர் என்றும் பலம் பொருந்தியவர் என்றும் அழைக்கப் பட்ட ஹர்ஷரையும் இவன் வெற்றி கொண்டான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புலிகேசி
இந்த கி.பி.624ம் ஆண்டின் காஞ்சி முற்றுகைக்கு பழி வாங்கும் பொருட்டு முதலாம் மகேந்திர வர்மனின் மகன் நரசிம்ம வர்மன் கி.பி.641 ம் ஆண்டு சாளுக்கிய தலைநகர் வாதாபி மீது போர் தொடுத்தான். இந்தப் போரில் அவன் கி.பி.647ம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றான். அவன் வெற்றி வாகையுடன் திரும்பும் வழியில் சாளுக்கிய கோட்டையின் அரண்மனையின் நுழைவாயிலில் ஒரு சிற்ப்பத்தைக் காண்கிறான். அது மனித உருவிலும் யானை உருவிலும் கலந்து காட்சியளித்தது. அதிலும் அவன் புலிகேசியைத் தோற்கடிக்க பல்லவனின் யானைப் படை மிகவும் உதவியதாலும், அவன் இயற்கையில் கலை நயம் கொண்டதாலும் அவனுக்கு அச்சிலை பிடித்துப் போக காஞ்சி கொண்டுவந்து விட்டான்.

நரசிம்ம வர்ம பல்லவன்
இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, நரசிம்ம வர்மனின் தந்தையான மகேந்திர பல்லவனுக்கு தீராத வயிற்று வலி வந்தது, அதனை திருநாவுக் கரசர் தீர்த்து வைப்பார். அது வரை தமிழகத்தில் புத்தம், சமணம், இந்து மதம் சைவம், வைணவமாக பிரிந்து காணப்பட்டது. இருப்பினும் மேலை நாடுகளில் புத்தம் ஆட்சி மதமாகவும், தென் இந்தியாவில் பல்லவன் ஆட்சியில் சமணத்தையே அவன் தழுவி வந்தான். கிழக்கில் சோழர்கள் சைவம் மற்றும் பாண்டியர்கள் சைவம் மற்றும் வைணவம் என்று  தழுவினர்.

தஞ்சைபெரிய கோயில் விநாயகர்
இது தான் தமிழகத்தில் சைவம் வேரூன்றிய கதை. சைவம் வேரூன்றிய பிறகுதான் பிள்ளையாரும் இங்கு வந்தார்.

வடக்கில் இருந்து கொண்டு வரப்பட்ட பிள்ளையார் சிலை வெற்றியின்அடையாளமாக நரசிம்ம் வர்மன் கருதியதாலும், அதே சமையம் பல்லவன் சைவத்தை தழுவியதாலும், சைவக் கடவுள் சிவா பெருமானின் மகனாக பிள்ளையார் கருதியதால் நாடெங்கும் புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் என்று அழைக்கப் படும் அரச மரத்தின் அடியில் இருந்த புத்த சிலை நீக்கப் பட்டு விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

திருச்சி உச்சி புள்ளையார் கோயில்
 
எனது  அனுமானம் சரியாக இருந்தால் திருச்சிராப் பள்ளி தெற்கில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலை தான் தென் இந்தியாவின் முதல் பிள்ளையார் சிலையாக இருக்கும். அதற்க்குக் காரணம் அங்கு உள்ள சிற்ப்பங்கள் அனைத்தும் பல்லவர்களாலும், சோழர்களாலும் நிர்மாணிக்கப் பட்டவை. விநாயகர் வந்தக் காலமும், தென்னகம் சைவ மதத்திற்கு மாறிய காலமும், பல்லவர்கள் முழுக் கட்டுப் பாட்டில் திருச்சி இருந்ததும் காரணம் ஆகும். வரலாற்று ஓலைச் சுவடிகளில் எங்கும் நம்மால் இதற்க்கு முன்பு அங்கு பிள்ளையார் வழி பாட்டு முறை இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

நரசிம்ம வர்மன்
பின்னர் பல்லவன் இட்ட கட்டளையான 'இனி இந்த யானை முக விநாயகனை வழிபட்டே அனைவரும் உள்ளே செல்ல வேண்டும்' என்பதுவே விநாயகனை முழு முதற் கடவுள் ஆக்கியது...

எப்படியோ இருப்பதை விட வந்தவைகளுக்கே நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது நம் தமிழர்களின் இரத்தத்தில் ஊறியது போலும், விநாயகர் முதல், இந்த பல்லவன் வரை.

முழு முதற்க் கடவுள் விநாயகா நீதான் இந்த மக்களை காப்பாற்ற வேண்டும், வஞ்சமில்லா மக்கள், பாத்துக்குங்க...

படிச்சிட்டு  உங்கள் கருத்துகளையும் மறக்காமல் தெரிவித்து விட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!!!

29 comments:

 1. முதல் தப்பு, ஹர்ஷர் தோற்கவில்லை. ஹர்ஷரின் படைகள் தோற்கும் நேரத்தில், ஹர்ஷரே போர்முனைக்கு வருவதாக இருந்தது அதனால் சமாதன உடன்படிக்கை செய்துகொண்டனர்.

  அடுத்தது, அந்த சாளுக்கிய - பல்லவ போருக்கு முன்பே பிள்ளையார் வழிபாடு தமிழகத்தில் இருந்தது. அதற்கு பல பண்டைய கோவில்கள் சாட்சி

  நரசிம்மவர்மன் போருக்கு செல்லும் முன்னே அவனது தந்தை மகேந்திர வர்மன் இறந்துவிட்டார். மகேந்திர வரமறுக்கு வயிற்று வலி வந்த காலத்தில் நரசிம்மன் பிறக்கவே இல்லை. :)

  மேலும் அந்த சமயத்தில் திருச்சி சோழர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அங்கு எப்படி பல்லவன் கட்டளை இட முடியும் ??

  பதில்கள் ப்ளீஸ் ?? திராவிட கட்சியினர் எழுதிய வரலாற்றை மட்டும் நம்பி எழுதாதீர்கள் ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. இல்லை அண்ணா, நான் திராவிடர்கள் எழுதிய புத்தகங்களை மட்டுமே படித்து நான் கூற வில்லை.

   1.ஹர்ஷர் நினைத்திருந்தால் தனது முழு பலத்தையும் திரட்டிக் கொண்டு புலிகேசியின் படையை தூள் தூளாக்கியிருக்க முடியும் அந்த நர்மதை ஆற்றங்கரையில். ஆனால் அவர் போருக்கு ஒரு முடிவு வேண்டும் என்பதற்காகவே தனது படையை அனுப்பாமல் அந்த இடத்தை விட்டுக் கொடுத்து விட்டு தானாக தோற்றுப் போனார் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் சொல்லப் படித்ததுண்டு... (ஆசிரியர் பெயர் என்ன என்று கேட்காதீர்கள், மறந்து விட்டது). ஹர்ஷர் சிறு பகுதியை இழந்தது உண்மைதான்... அதற்குப் பெயரும் தோல்விதான்...

   சிலர் இதனை தோல்வி என்றும், சிலர் இதனை விட்டுக் கொடுத்தார் என்றும் கூறுவார்கள்.

   2.எனக்குத் தெரிந்தவரை பல்லவர்களால் தான் விநாயகர் தமிழகம் கொண்டு வரப்பட்டார்,மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். நானும் உண்மையை அறிந்து கொள்கிறேன்.

   அது பற்றிய இலக்கியப் பாடல்கள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். நானும் தெரிந்து கொள்கிறேன். நீங்களே பாருங்கள் தமிழில் பழங்கால இலக்கியத்தில் முருகன், சிவம் பற்றி நிறைய பாடல்கள் வரும். ஆனால் இந்த யானை முகத்தான் பற்றி யாரும் கூறியிருக்க மாட்டார்கள்.

   3.அதனை நான் மாற்றி எழுதி விட்டேன், இந்தக் காலத்தில் என்று. நான் அவர் வயிற்று வலிக் காரணத்தை சைவ மதம் வேரூன்றியத்தை விளக்கவே குறிப்பிட்டேன். அவர் இறந்து விட்டாரா என தெரியவில்லை சரியாக எனக்கு. சைவம் வேரூன்ற இந்த இரு பல்லவர்கள் முக்கியமானவர்கள் என்பதை நம்மால் மறக்க இயலாது.

   இப்போது அதனை 'இதற்குப் பல வருடங்கள் முன்பே' என்று மாற்றி விட்டேன்.

   4.அப்போது சோழர்கள் குறு நில மன்னர்களாகவே இருந்தனர், மகேந்திரன் காலத்தில் பார்திபச் சோழன் ஆட்சியில் இருந்தான், பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் பெரும் போர் நடந்த போது விஜயாலயச் சோழன் பல்லவனுக்கு ஆதரவு வழங்கியமையால் அவனுக்கு சிறு சுதந்திரம் (ஆட்சி உரிமை) பல்லவர்கள் வழங்கினார்கள். அப்போதும் சோழ தேசத்திற்கு மகா ராஜா பல்லவர்கள் தான். ( பல்லவ ஆட்சிக்கு உட்பட்ட சோழ தேசம்)

   அண்ணா நான் இந்த திராவிடன் என்ற சொல்லையே நம்ப மறுக்கிறேன், அது இங்கு அரசியல் காரணத்திற்க்காக எழுப்பப்பட்ட ஒரு பிரிவு. திராவிடன் என்றால் தான் ஆரியன் திராவிடன் என்று பிரிவு வாசிக்க இயலும். தமிழன் என்பதே உண்மை...

   Delete
 2. //நாடெங்கும் புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் என்று அழைக்கப் படும் அரச மரத்தின் /

  போதி மரம்தான் அரச மரமா ?? இது என்ன புது கதை

  ReplyDelete
  Replies
  1. இது புதுக் கதை அல்ல அண்ணா. நானும் தேடினேன், இப்படிதான் பதில் வருகிறது...

   Delete
  2. pothi maram ,gnana maram,arasa maram ellama onruthan lk

   Delete
  3. pothi maram ,gnana maram,arasa maram ellama onruthan lk

   Delete
  4. நன்றி சுனில்...

   Delete
 3. தமிழகத்தின் சத்ரிய பல்லவர்கள் இறுதியில் வெற்றி.
  அதே போல் தமிழகத்திலும் மீண்டும் தமிழர் ஆளப்போகிறார். இலங்கையில் ஈழம் இறுதியில் உறுதி.

  ReplyDelete
  Replies
  1. அப்படி நடந்தால் வெற்றியே நண்பா...

   நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்...

   Delete
 4. ஏதோ சொல்றீங்க வெற்றி நீங்க கலக்குங்க..

  ReplyDelete
  Replies
  1. என்ன சேகர், இப்படி சொல்லிட்டு தப்பிச்சிடலாம்னு நினைக்கிறீங்களா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறுங்கள்...

   தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

   தொடர்ந்து வாருங்கள் நண்பா...

   Delete
  2. உண்மையில் மிகசிறந்த கட்டுரை உணர்ந்து சிந்தித்து எழுதப்பட்டது என்பது உண்மையும் தேடலும் இதில் உள்ளதும் தெளிவாக புரிகிறது நீவீர் சொல்லுவது முற்றிலும் உண்மையே அதாவது வினயன் தான் விநாயகன் அஆனான் என்பது வரலாறு புத்த மத விகரங்கல்தான் இந்த்தய தமிழ கோவில்கள் கொலைகார புத்தமதம் அழிந்துபோகட்டும் தமிழன் எப்போது விழிப்பான் ?

   Delete
  3. விழித்தால் நல்லதுதான். யார் கையில் உள்ளது, அனைத்தும் காலத்தில் கையில். நல்லது நடந்தால் நன்மையே!!!

   தொடர்ந்து வருகை தாருங்கள், மிக்க நன்றி...

   Delete
 5. pillaiyar patti yentra thala varallaril indiavil muthaal muthalaka thondriya suyampu pillayar selaai ullathaka thkaval ullathu. sumaar 1500 varundankaluku munup ullathaka thgaval ullathu.

  ReplyDelete
  Replies
  1. சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் என்றால், நீங்களே (ஏறக்குறைய)கி.பி.600 முதல் கணக்கு போட்டு போட்டு பாருங்களேன் நண்பா. கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்கள் ஆகும். விநாயகர் என்பவர் வட இந்தியாவில் நெடுங் காலமாகமாகவே வணங்கும் கடவுள்கள் வரிசையில் இருந்து வருகிறார். ஆனால் நம் தமிழகத்தில் இந்தக் கால கட்டத்திற்குப் பிறகுதான் புள்ளையார் நம் தமிழகம் வந்து சேர்ந்தார் அதுவும் நரசிம்மவர்மன் வழியாக...

   எப்படி வந்தாரோ, நமக்கு தவறாமல் அவர் அருள் வழங்கினால் நன்றே!!!

   Delete
 6. வெற்றி...உண்மையில் சாமி பக்தியே இல்லாத ஒரு ஆள் நான்.எனக்கு இது எதுவுமே தெரியாது.ஆனாலும் சாமி கும்பிடுவன்.அவரிட்ட நியாயமெல்லாம் கேட்பேன்.

  நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களை வாசித்தேன்.உங்கள் தேடல் அற்புதம்.நம்பிக்கைகள் தொடரட்டும்.உங்களுக்குப் பு(பி)ள்ளையார் அருள் குடுக்கவேணுமெண்டு வேண்டிக்கொள்றன்.
  ஆனால் மோதகம் தரவேணும்.சொல்லிட்டன் !

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு கண்டிப்பாக அவர் நியாயம் கூறுவார் ஒரு நாள், உங்கள் நம்பிக்கை வெல்லும் ஓர் நாள்...

   மோதகம் என்றால் என்ன ஹேமா? அவர் அருள் கிடைத்தால் மிக்க மகிழ்ச்சியே! நானும் அவர் பக்தர்களில் ஒருவன். இந்த பதிவை நான் ஒரு வரலாற்று தேடலாகவே எழுதினேன். ஆனால் சிலர் என்னை ஒரு நாத்திகன் போலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவன் போலும்தான் பார்க்கின்றனர். சிறு வருத்தம்...

   எல்.கே.சார் கூட திராவிட கட்சியினர் எழுதிய புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு இப்படி கூற வேண்டாம் என்று சொல்லியிருப்பார்...

   Delete
  2. கொளுக்கட்டைபோலவே கூராய்ச் செய்தால் அதுதான் மோதகம்.நிச்சயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் வெற்றி.மோதகப் பிள்ளையாரென்றும் சொல்லும் வழக்கம் இருக்கே !

   Delete
  3. ஆமாம் ஆமாம் ஹேமா, ஞாபகம் வந்துவிட்டது... மிக்க நன்றி...

   Delete
 7. avvaiyarin kaalam mudale vinayakar vazhipaadu tamizhargalidam undu enbadai marandadhu eno?

  ReplyDelete
  Replies
  1. நான் அப்படி ஏதும் கேள்விப்பட்டதில்லை நண்பா, அவர் வழிபட்ட, அவர் கூறிய பாடல்கள் ஏதேனும் நினைவிருந்தால் கூறுங்களேன் நண்பா.

   வருகைக்கும், கருத்துகளுக்கும் வாழ்த்துகள்...

   Delete
 8. தமிழிலில் திருவிளையாடல் புராணம் சேக்கிழார் இயற்றியது எப்போ என்று பாருங்கள்.அதில் வினாயகர்க்கும் முருகனுக்கும் போட்டி என்றும் முருகனை மூத்தவரான பிள்ளையார் வென்றார் என்றும் பெரியபுராணம்.அந்த சேக்கிழார் ஆண்டு எப்போது என்று பாருங்கள். நான் இப்போ அமெரிக்காவில் இருப்பதால் அதை பற்றி ஒரு தகவல் மட்டும் தருகிறேன். அத்துடன் ஒரு முறை இதே பிள்ளையார் பற்றி தி மு க தலைவர் ஒரு கருத்து சொல்ல பெரும் வாத பிரதிவாதம் நடந்தது.அப்போது திரு சுகிசிவம். போன்றோர் சரியான விளக்கம் கொடுத்துள்ளார்.அதுவும் நமது சிந்தையில் ஏற்றுக்கொள்வோம்
  அன்புடன் பிள்ளையார் அருளட்டும் கருப்பசாமி.


  ReplyDelete
  Replies
  1. வணக்கம், சேக்கிழார் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்தவர். அவர் நான் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் சுமார் ஆறுநூறு ஆண்டுகள், அதாவது சுமார் ஆறு நூற்றாண்டுகள் கழித்து வந்தவர் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் அப்பா.எனக்கு கலைஞர் கூறியது பற்றி ஏதும் தெரியாது. அப்போது நான் சிறுவன், மேலும் அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய காலமும் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்...

   தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்....

   Delete
 9. அழகான விளக்கங்களுடன் அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 10. அருமை சகோ நன்றிகள் பல பல

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

   Delete
 11. அன்பின் வெற்றி வேல் - வரலாற்றினைப் படிக்கத் துவங்கினாலே விவாதங்களூம் மாற்றுக் கருத்துகளும் வரத்தான் செய்யும். விநாயகர் வந்து விட்டார் - எப்பொழுது வந்தார் என்பதோ அவர் எப்படி வேறூன்றினார் என்பதோ இப்பொழுது தேவையற்ற ஒன்று. இப்பொழுது அவர் இந்து மதத்தினரால் வழிபடப்படுகிறார். அவ்வளவு தகவல்கள் போதும் நமக்கு. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 12. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...