Apr 21, 2013

நினைவெல்லாம் நீதானே!




காலைக் கருக்கள் விழிப்பிலும்
   காதல் கனவுகளை சுமந்தபடி உன் நினைப்பு...

நீராடும் வேளையிலும்
   நெஞ்சாங் குழிக்குள் உன் நினைப்பு...

ஆனந்தச் சிரிப்பின் மகிழ்ச்சியிலும்
   அலையலையாய் உன் நினைப்பு...

காலை உணவின் சூட்டினூடே
   கசிந்து வரும் உன் நினைப்பு...

நீ என்னை நினைத்து வரும் விக்கலிலும்
   தித்திக்கும் உன் நினைப்பு...

சித்திரை வெயிலின் புழுதிக் காற்றிலும்
   வீசும் காற்றில் வசந்தமாய் உன் நினைப்பு...

அந்திக் கருக்கும் நேரத்திலும்
   அடி மனதில் உன் நினைப்பு...

கோவிலுக்குச் செல்லும் வேளையிலும்
   தேவதையானவளின் திகட்டாத நினைப்பு...

இரவுக் கனவினுள்ளும் தலையணையில்
சேகரித்தபடி அடுத்தநாளின் தேடலுக்கான
தவழ்ந்து வரும் அடங்காத உன் நினைப்பு...

..................................................... வெற்றிவேல்.

அனைவரும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில மாதங்களாக நானே விருப்பட்ட இடத்தில் மீள முடியாமல் தொலைந்த காரணத்தினால் என்னால் இங்கு வர முடியவில்லை.. ஆகையால் தான் பதிவுகள் போட இயலவில்லை, நண்பர்கள்/ தோழிகளின் தளத்திற்கு செல்ல இயவில்லை. இனி தொடர்ந்து வருவேன் என்று நம்புகிறேன்.

24 comments:

  1. அருமையான கவிதை ஐயா மீண்டு வந்ததில் ஆனந்தம் ஆனந்தம் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete

  2. வணக்கம்!

    வெற்றிவேல் நண்பா! விரைந்து செயல்படுக!
    பற்றியே ஓங்கும் படைப்பு!

    கொஞ்சும் தமிழில் கொடுத்த வரியாவும்
    நெஞ்சுள் நிலைத்த நினைவு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா. தங்கள் ஆதரவும், ஊக்கத்தோடும் எப்போது எழுதிக்கொண்டிருப்பேன். தங்கள் இனிய கவிக்கும், வருகைக்கும் மிக்க நன்றி அய்யா...

      Delete
  3. நண்பரே நலமா...?

    வரிகள் அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் நலம் அண்ணா. தங்கள் வாழ்த்துகளுக்கும், இனிய வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. Anonymous10:52:00 AM

    வணக்கம்

    மிகவும் அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் வெற்றிவேல்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, வருகைத் தொடரட்டும்.

      Delete
  5. நினைவுகளை விட்டு மீண்டு வருவதே கஸ்டம்தான்.மீண்டு வந்ததில் சந்தோஷம்.ஆனாலும் கவிதைக்குள் அதே நினைவுதான்.தொடருங்கள் வெற்றி.நினைவு ஒரு பக்கத்தில் இருந்தாலும் மனதைச் சில பிடித்த விஷயங்களுக்குள் விட்டால் ஓரளவு நாம் எம்மோடு வாழமுடியும் !

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்தாலும் மனம் அங்கேதான் சென்று முடிகிறது ஹேமா. புத்தகம் வாசித்தால் அங்கு வரும் கதாபாத்திரத்திலும் அவளே, கவிதை எழுதினும் எழுத்திலும் அவளே. நான் என்ன செய்ய ஹேமா. ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

      Delete
  6. எழுதத்தெரிந்தவர்கள் எழுதாமல் சோம்பிவிட்டால், எழுத முடிந்தவர்களெல்லாம் எழுத்தாளராகிவிடுகிறார்கள். எனவே, எழுதுங்கள். உங்கள் ஆற்றல் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கும் இனிய கருத்துகளுக்கும் மிக்க நன்றி அய்யா. இனி எழுதிக்கொண்டிருப்பேன் என நம்புகிறேன்.

      Delete
  7. மீண்டு வந்ததற்கும் அருமையான கவிதை தந்ததற்கும் வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா. தங்கள் இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. நலமா சகோதரரே! அழகான கவிதை! தொடருங்கள் உங்களின் மேம்பட்ட படைப்புகளுடன்!

    ReplyDelete
    Replies
    1. தற்போது நலமாக இருப்பதாக நம்புகிறேன் நண்பரே. தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பா...

      Delete
  9. Anonymous7:32:00 AM

    வருக நண்பரே! தொடருங்கள் பதிவுகளை.
    வரிகள் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஜெஷ்வா...

      Delete
  10. சோகங்களை கூட சுவையாக்கும் வித்தை காதலுக்கு உண்டு ...
    இவ்வரிகளும் அப்படித்தான் தம்பி .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

      வாழ்க்கை (காதல்) என்றால் அப்படித்தானே! சோகம், இன்பம்...

      Delete
  11. ஆனந்தச் சிரிப்பின் மகிழ்ச்சியிலும்
    அலையலையாய் உன் நினைப்பு...
    நினைவும் உங்களுக்கு நிம்மதியை கொடுக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா...

      நிம்மதி...! அதற்குத்தானே, இத்தனை முயற்ச்சிகளும்?

      தங்கள் வருகைக்கும், இனிய கருத்துக்கும், மிக்க நன்றி...

      Delete
  12. அன்பின் வெற்றிவேல் - எச்செயல் புரியினினும் அச்செயலில் அவளின் தாக்கம் இருக்கிறது - காதலில் மூழ்கித் தவிக்கும் கவிஞனின் கவிதை அருமை - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா...

      தங்கள் விமர்சனம் எனக்கு மேலும் உத்வேகம் அளிக்கிறது... தங்கள் இனிய கருத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...