Dec 20, 2012

என் விடியல்



மார்கழிப் பொழுதின்
மயக்கும் காலை.
வங்கக் கடலின் ஈரம் சேர்த்த 
மாயக் குளிர் காற்று.

ஊடலுடன் காதோடு காதாய் 
ரகசியம் 
பேசும் குருவிகள். தவழ்ந்து 
வரும் குளிர் காற்றோ 
பனியைத் தழுவியபடி 
ஈர இலைகளுடன் நடனமாட...

நீயிடும் புள்ளிக் கோலத்தில் 
தொலையத் 
தொடங்கும் நட்சத்திரங்கள்...

கனவுகள் நனவாகாதா என்ற நிலை
சென்று, நடந்தவை அனைத்தும் 
கனவாகாதா என்ற நிலையில்
ஏங்கித் தவிக்கும் மனம்...

நீ இல்லாத வானில்
பார்வையிழந்த நான் இங்கு 
தனியாக காத்திருக்கிறேன்
விடியப் 
போகும் என்
விடியலுக்காக...

..........................வெற்றிவேல்


30 comments:

  1. azhaku ...

    kavithai....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோ...

      Delete
  2. Azhagaana kavidhai. Ungal kanavu nichchayam nanavaagum. Vaazhththukkal.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பா...

      Delete
  3. ஓ அப்படியா ...
    காத்திருங்கள்...லீவுல இருக்கும் பொது ரூம் போட்டு யோசித்ததோ..
    நன்றாக இருக்கிறது நண்பா

    ReplyDelete
    Replies
    1. தூக்கம் போய் விடியல் காலை மூணு மணிக்கு எழுதுனது நண்பா....

      Delete
  4. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா..

      Delete
  5. கவிதை மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

      Delete
  6. விரைவில் விடியல் வரும். காத்திருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்...

      Delete
  7. தேவையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா...

      Delete

  8. ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு
    01.01.2013
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா...

      Delete

  9. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அய்யா... தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

      Delete
  10. புணரும் பொழுது புதியதாய் அமையும் ..நம்பு வெற்றி ..

    ReplyDelete
  11. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
    காண :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அறிமுகத்திற்கு என் மனமார்ந்த நன்றி அண்ணா...

      Delete
  12. அழகான கவிதை. . அருமையான வரிகள். . .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி...

      Delete
  13. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி... தங்களுக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. மகிழ்ச்சியான செய்தி, நன்றி...

    ReplyDelete
  15. சொல்லழகும் கருத்தழகும் நிறைந்த கவிதைகள் உங்களிடமிருந்து பிறக்கின்றன. திருமணத்திற்கு முன்பே நிறைய எழுதிவிடுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக, அப்புறமும் எழுத நேரம் கிடைக்காதுல்ல!!! வருகைக்கு நன்றி நண்பா...

      Delete
  16. விடியும் என்கிற நம்பிக்கை இருந்தாலே போதும் வெற்றி !

    ReplyDelete
    Replies
    1. அந்த நம்பிக்கையில் தான் சென்றுகொண்டிருக்கிறேன் ஹேமா...

      Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...