Aug 26, 2012

நம்மை (தமிழை)ப் பற்றி உலகத்தார் கூறுவது

செந்தமிழ் மொழியை நன்கு பயின்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும், மேலை நாட்டு மொழிநூல் வல்லுநர்களும் தமிழின் அரிய தன்மைகளை நடுவு நிலைமையில் நின்று எடுத்துக் காட்டியிருப்பது காண்க.


வின்ஸ்லோ என்ற அறிஞர், "செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும், இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியினையும் வெல்ல வல்லது தமிழ்மொழி" என்றார். மேலும் அவரே, "அதன் (தமிழ்) பெயரே இனிமை என்று பொருள்படுவதற்கு ஏற்ப, அதனிடத்தில் கேட்டாரைத் தம் வசமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை" என்று கூறியுள்ளார்.

டெய்லர் என்பார், "அது (தமிழ்) நிறைந்து தெளிந்து ஒழுங்காயுள்ள மொழிகளுள் மிகவும் சிறந்ததொன்றாகும்" என்று மொழிந்துள்ளார்.

டாக்டர் G.U. போப் பாதிரியார், "தமிழ்மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழி அன்று" என்று கூறியதோடு நில்லாமல், தமிழ்மொழி மேல் அளவற்ற அன்பு பூண்டு தம் கல்லறையின மேல் "இங்கே தமிழ் மாணவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்புமுறி (will) எழுதி வைத்தார்.இவருக்கிருந்த தமிழ்ப்பற்றை என்னென்று பாராட்டுவது! இந்த அளவுசெந்தமிழ் மொழி, அந்தப் போப்பையர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
ஜி.யு.போப்
மொழி நூலறிஞர் டாக்டர் கால்டுவெல் துரைமகனார், "தமிழ் பண்டையது; நலம் சிறந்தது; உயர்நிலையில் உள்ளது;... விரும்பினால் வடமொழி உதவியின்றி இயங்கவல்லது" என்றார்.

கிரியர்சன் என்ற மற்றொரு ஐரோப்பிய அறிஞர், "திராவிட மொழிகளுள் தமிழ் மொழியே மிகத்தொன்மை வாய்ந்ததும் பெருவளம் பொருந்தியதுமாகும். மிகவும் சீர்திருந்தியதுமான உயர் தனிச் செம்மொழியுமாகும்; சொல்வளமும் மிகுந்தது,  அளவிட வொண்ணாப் பண்டைக்காலம் முதல் பயின்றும் வருவது" என்றார்.

சிலேட்டர் என்பார், "திராவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மக்கள் பேச்சு மொழிக்குரிய தன்மையைப் பெற்றுள்ள மொழி தமிழ்மொழி; தர்க்க அமைப்புடையதும் தமிழ் மொழியே" என்றார்.

விட்னி என்ற ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம், தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து தமிழை நன்கு கற்றுத் தமிழரைப் போலவே எழுதவும் பேசவும் வல்லவராய் விளங்கிய அமெரிக்கர் ஒருவர் தமிழ்மொழி எண்ணுவதற்கும் பேசுவதற்கும் எந்த ஐரோப்பிய மொழியையும் விடச் சிறந்தது என்று கூறியதாய் எழுதியிருக்கிறார். 

ஜான் மர்டாக் என்ற ஐரோப்பிய அறிஞர், "சீரிய மொழியாயும் அழகிய இலக்கியங்கள் உடையதாயும் விளங்குவது தமிழ் மொழியே" என்றார்.

F.W.கெல்லட் என்பார், "எந்த நாட்டினரும் பெருமை கொள்ளக்கூடிய இலக்கியம் தமிழ் இலக்கியம்" என்று தமிழைப் பாராட்டியுள்ளார். 
சார்லஸ் கவர் என்பவர், "தமிழ் மொழியின் மெருகு நிலையும் அருந்தமிழ்ப்பா நலமும் ஐரோப்பாவில் மிகுதியாகத் தெரியப்படுத்துதல் வேண்டும்" என்றார். 
 
ஜெர்மனி நாட்டவரும் ஆங்கில நாட்டின் குடிமகனானவரும் அக்காலத்துத் தலை சிறந்த மொழி நூல் வல்லுநராய் விளங்கியவரும், இருக்கு வேதத்தைச் சாயனருடைய உரையுடன் பதிப்பித்தவருமாகிய மாக்ஸ் முல்லர்  (Max Mueller), "தமிழ் மிகப் பண்பட்ட மொழி, தனக்கே உரியதாக இயல்பாய் வளர்ந்த சிறந்த இலக்கியச் செல்வமுள்ள மொழி" என்றார். 

இன்றைய மொழி நூலறிஞரான திரு. கமில் சுவலபில் (Kamil Zovelebil)*, "தமிழ், உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய பண்பட்ட மொழிகளும் ஒன்று. இஃது உண்மையிலேயே அச்சொற்றொடருக்கு ஏற்றவாறு உயர் தனிச் செம்மொழியாக இருப்பதோடு கூட இன்றும் பேச்சு மொழியாகவும் இருக்கிறது" என்று தமது ‘தமிழ் இலக்கண நெறி வரலாறு’ (Historical Grammar of Tamil) என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 

இனிப் பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் இருவர் தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளதைக் காண்போம்.

பேராசிரியர் மேய்ல் (Meil) என்பார் கூறியதாவது: "தமிழர்கள் நல்ல பண்புடையவர்கள். இயற்கையாகவே இந்த நற்பண்பு அவர்களிடத்தில் அமைந்திருக்கிறது. இதற்காகவேனும் நாம் அவர்கள் மொழியாகிய தமிழைக் கற்பது நன்று... அவர்களுடைய மொழியாகிய தமிழ் இலக்கியம் விந்தையும் வியப்பும் தரத்தக்கதாய் வற்றாத உயர் எண்ணங்களின் ஊற்றாய் இருக்கிறது. தமிழ் மொழி இந்தியாவின் மொழிகளுள் மிகப் பழமையானது. அதுவே முதல் மொழியாயும் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அஃது உயர்தனிச் செம்மொழி. அம்மொழியை நெடுங்காலத்திற்கு முன்னரே பிரெஞ்சுக்காரர்கள் கற்றிருத்தல் வேண்டும். அப்படிச் செய்யாது போனது பெருங்குறையே ஆகும்."

மேய்ல் கூற்றிற்கு இணங்க அவருக்குச் சிறிது காலத்திற்கு முன்னரே இருந்த பியேர் லொத்தி (Pierre Loti) என்ற மற்றொரு பிரெஞ்சு அறிஞர் குறிப்பிட்டிருப்பதையும் பார்ப்போம். அது வருமாறு: "இந்தியாவிற்குப் பிரெஞ்சுக்காரர்கள் வந்ததன் பின் அந்நாட்டின் மொழிகளுள் முதல் முதல் அவர்கள் கற்றுக் கொண்டது தமிழ் மொழியே. அந்த மொழி வாயிலாகவே தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சமூக அமைப்புகள், சமயக் கோட்பாடுகள் முதலியவற்றின் உண்மையான தத்துவங்களை அறிந்த கொள்ள வழி ஏற்பட்டது. "தமிழிலக்கியம் மிகவும் பரந்துபட்டது; மிக்க தொன்மை வாய்ந்தது. மற்ற எந்த மொழியும் வரிவடிவம் அடைவதற்கு முன்னமே தமிழ் எழுதப்பட்டு வந்தது. தமிழின் நெடுங்கணக்கு (Tamil Alphabet) முழுத்தன்மையுடையது; முதல் தன்மையும் உடையது. இந்த நெடுங்கணக்கை அமைத்த முறை மிக்க அறிவு சான்ற தரத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நெடுங்கணக்கில் மிக நுண்ணியதும், மிக நியதியுள்ளதுமான கண்ணோட்டத்தினை நாம் காண்கிறோம். இந்த நெடுங் கணக்குத் திடீரென்று ஏற்பட்டதன்று. இலக்கணப் புலவர் ஒருவரின் அல்லது புலவர் கூட்டம் ஒன்றின் நுண்ணறிவுள்ள நெடுங்காலப் பணியின் பயனாய் அமைந்ததாகும்." 

இப்பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் தமிழைப் பற்றிப் பாராட்டியுள்ள செய்தியானது, புகழ்பெற்ற பிரெஞ்சு மொழி அறிஞரும் பல தமிழ் நூல்களைப் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவருமான  ரா.தேசிகப் பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழகமும் பிரெஞ்சுக்காரரும்’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இத்துணைத் தமிழ்க் கவிஞர்களும் மொழியறிஞர்களும் தமிழ் கற்ற ஐரோப்பிய அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழியின் இனிமையையும் தனித்தன்மையையும், அதன் இலக்கியச் சிறப்பினையும் நலம் மிக்க சொல் வளத்தினையும் அரிய வன்மையையும் மிகுந்த தொன்மையையும் எடுத்துக் கூறியிருப்பதைக் காணும்போது, தண்டமிழ் மொழியின் உண்மைத் தன்மையை நன்கு உணரலாம். கூறியவையனைத்தும் உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.

நாம் அறியாத நமது புகழை மற்றவர்கள் சொல்லிக் கேட்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது

நன்றி: தமிழ் இணைய பல்கலைக் கழகம்

நண்பர்கள் தங்களது மேலான கருத்துகளை தெரிவித்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்...


21 comments:

  1. Nalla padhivu. Vaalththukkal ullame. Aanaal oru vidayam. Thamilaip pattri eppodhum perumaiyaagave pesik kodirukkirom. Thamilil muranpaadaana pala vidayangal irukkinrana. Avatraiyum pesa yaarenum mun vara vendum ena edhirpaarkkiren. Vaalththukkal ullame.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா. தாங்கள் இப்படி கூறக் கேட்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது, ஏனெனில் எனது கண்ணோட்டத்தில் தமிழில் முரண்பாடான விஷயங்கள் இருக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அது சீர்திருந்திய ஒரு தனிச் செம்மொழி, தமிழர்கள் மீதுதான் பல முரண்பாடுகள் இருக்க இயலும். அந்த எண்ணம் எனக்கும் இருக்கிறது...

      தமிழ் மீது ஏதேனும் முரண்பாடான விழயங்கள் இருந்தால் அவற்றையும் கண்டிப்பாக யாம் தயங்காமல் வெளிக்கொணர்வோம் என்பதை இங்கு நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நண்பா...

      வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  2. பெருமைப்பட வேண்டிய விஷியம்
    நன்றி



    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

      தாங்களும் ஒவ்வொரு முறையும் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்...

      நானும் வந்து பார்த்தால் எப்படி தலையங்க அட்டவணை அமைப்பது என்று தெரியாமல் திரும்பி விடுகிறேன்...

      Delete
  3. யப்பா எவ்வளவு பேர் எவ்வளவு அருமையா சொல்லியிருக்கிறாங்க....
    தமிழ் மொழியின் பெருமை அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பா. தங்கள் கருத்துகளுக்கும்...

      Delete
  4. Ungal pathu miga arumai .Goldwell,Pope are well known about their Tamil services. in southeren parts of our Tamilnadu.Others thoughts are brought by you are still be studied in depth by me.Vazhthukkal, my dear friend.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி அய்யா. தங்கள் கருத்து எனக்கு மேலும் மேலும் உற்ச்சாகம் அளிக்கிறது...

      Delete
  5. நிறையப் பேர் ஆழ அறிந்து தமிழைப் பற்றிப் புகழ்ந்திருப்பது எத்தனை பெருமை.ஆனால் நம்மவர்கள் ஆங்கில மோகத்தில் தமிழில் பெயர் வைப்பதைக்கூடத் தவிர்க்கிறார்கள்.கொடுமையான விஷயம்.புலம்பெயர் வாழ்வில் இது அதிகமாக நடக்கிறது.மொழி தெரியாவிட்டாலும் பெயரை வைத்தே அடையாளப்படுத்தப்படுகிறோம் சில இடங்களில்.அதுகூட விருப்பமில்லாமல் போகிறது சில நம்மவர்களுக்கு !

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அதே நிலைமைதான் ஹேமா!!! மூன்று வயதிலே குழைந்தைக்கு ஆங்கில மோகத்தோடு L.K.G & U.K.G அனுப்பிவிடுகின்றனர்... கொடுமையிலும் கொடுமை.

      பெயரும் அதே நிலைமைதான்... அதே ஆங்கில மோகம்.

      Delete
  6. சிறப்பான பகிர்வு...

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், தங்கள் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  7. முதலில் கொஞ்ச நாட்களாக தங்கள் வலைபூவிற்கு வரயிலாததர்க்கு வருத்தம் தெரிவிக்குறேன் நண்பா.. வேலை பளு அதிகம். இப்போது தான் விட்ட எல்லா பதிவையும் படித்து முடித்தேன். எல்லாவற்றிற்கும் சேர்த்து இங்கேயே கமெண்ட் போட்டு விடுகிறேன். லிபியாவை பற்றி போட்ட பதிவு அருமை. இன்னும் கடாபி போன்றோர்களை சில சர்வாதிகார நாடுகள் தான் உருவாக்குகின்றன. கடாபி characterரை வைத்து போராட் ஹீரோ ஒரு நகைச்சுவை படம் ஒன்று எடுத்துள்ளார் "The Dictator". அதே, போல தமிழை பற்றிய இந்த பதிவும் கடந்த பதிவும் அருமை வெற்றி. தற்போது சிலர் அதிமேதாவிதனமாக தமிழை தவிர்த்து ஆங்கிலம் புகுத்தி உரையாடுவது தான் கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழியாக எத்தனம் சேகர் வந்து விட்டார். மிக்க மகிழ்ச்சி...

      உண்மைதான், தமிழைத் தவிர்த்து ஆங்கிலம் புகுத்துவது மிகவும் கடினமாகத்தான் உள்ளது. இங்கு தமிழே படிக்கத் தெரியாமல் பல மேதாவிகளை நான் சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். அதனைவிட வருத்தம் இவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஒரு பாடம் தமிழ் படித்துள்ளனர். கொடுமையைப் பாருங்கள்.

      தொடர்ந்து வாருங்கள் நண்பா...

      Delete
  8. எவர் எவரோ தமிழின் பெருமை கூறும்போது நெஞ்சம் உவகை கொள்கிறது நண்பா ...
    நம் தமிழ் இளைய தலைமுறையினர் அந்நிய பித்தில் அலைவது தான் ஆதங்கம் கொள்கின்றது ...

    இருக்கட்டும் உணரும் காலம் வராமலா போய்டும் ..

    அப்புறம் டாக்டர் ஜி யு போப் அவரின் கல்லறை வாசகம் அவரின் மேல் மரியாதையை கூட்டுகிறது ...
    நான் அறியா தகவல்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் அறிந்திட வழங்கிய உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும் தோழரே ..

    ReplyDelete
    Replies
    1. அரியலூர் மண்ணின் மைந்தரின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. உண்மைதான், இப்படி அனைவரும் சொல்லும்போது உண்மையில் மகிழ்ச்சி ஏற்படத் தான் செய்கிறது. தொடர்ந்து வாருங்கள், அண்ணா....

      Delete
  9. எனது அலைபேசி எண் - 9952967645

    ReplyDelete
    Replies
    1. அழைக்கிறேன் அண்ணா....

      Delete
  10. உங்கள் பக்கம் வராமல் போனதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன் நண்பா... நேரம் போதவில்லை. நான் மிக ஆர்வமாக கஷ்டப் பட்டு எழுதி வந்த ஆய்வுக் கட்டுரையைக் கூட முடிக்க இயலாமல் தடுமாறுகிறேன். அவசர அவசரமாக கிரிக்கெட் பதிவு ஒன்றை போடவே நேரம் கிடைத்தது. மிக அருமையாக எழுதி உள்ளீர்கள். இன்னும் பலரும் தமிழை புகழ்ந்து பேசி உள்ளார்கள். நேரம் கிடைக்கும் போது பகிர்கிறேன். சிகரம் எந்த முரண்பாடு பற்றி பேசுகிறான் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை தமிழில் என்றுமே முரண்பாடு இல்லை . துரதிருஷ்டவசமாக தமிழர்களிடமே ஏராளமான முரண்பாடுகள் உண்டு...

    ReplyDelete
  11. ' அரசன் ஒழிக ' என்று கூச்சலிட்டு, ஆர்ப்பரித்து, போராட்டம் சைபவர்களை கைது சைது சிறையில் அடைத்தாலும், உள்ளே இருக்கும் கைதிகளுக்கு உணவு கொடுக்கவேண்டிய தர்மம் ஒரு மன்னனுக்கு உண்டு. அதுபோல், "கடவுள் இல்லவே இல்லை" என்று நாத்திகம் பேசினாலும், அவர்களையும் காப்பாற்றும் தர்மம் கடவுளுக்கு உண்டு .

    - திருமுருக கிருபானந்தவாரியார்.

    ReplyDelete
  12. தெய்வத்தமிழை கட்டிகாக்கவேண்டிய அரசே தமிழ்என்றொரு மொழிஇருந்தது அதன்நினைவு சின்னம்தான் இந்த தமிழ்தாய் சிலை என வரும்தலைமுறை கூறிக்கொள்ள வகை செய்து கொண்டுஇருக்கிறது ஆங்கலேயனே அவன்மொழியை ஓர் பாடமொழியாகத்தான் வைத்தான் இந்த மதி கெட்ட மூடர்கள் உணர வேண்டும் தெய்வதமிழ் மரியாது இச்சோதனையிலிருந்து காக்க வேண்டும்

    ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...