Jun 29, 2012

மூன்றே மூன்று நிமிடங்களில் ஓர் ஆண் எப்ப‍டிப்பட்ட‍வன் என்பதை ஒரு பெண்ணால் கணிக்க‍ முடியுமா?

கூர்மையாக உற்று நோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என் பதை கணித்து விடலாம்’ என்கி றார்கள், சில கில்லாடி பெண்கள்.
`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது?
உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?’ என் று கேட்பவர்கள் ஏராளம்.-`நான்கு வருடங்கள் காதலித் தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்துபோனேன் ‘என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்து படியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என் பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமை யாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவ ரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கி லத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார் கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?’ என்று கேட்டுப் பாருங்கள்.

பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடை யிருக்காது. டிப்- டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரைப்போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுகிறாள். நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடி யாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒரு வனை எப்படி சரியாககணிக்க முடியும்?

ஆனால் இன்றையபெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக் கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத் திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு–பகல் பாராமல் அவன் பேசும் போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப் பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்’ செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்க முடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்துவிடமுடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும்.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது மனிதனின் மனம் குரங்கு போன்றது எப்போது எப்படி வேண்டுமானாலும் தாவும். அதனை நம்மைப் படைத்த பிரம்மனாலும்கணிக்க இயலாது என்பதே நிதர்சன உண்மை.

வாசகர்கள் தங்கள் கருத்துகளை கீழே தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி:

11 comments:

 1. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான்//

  காதலைப் பற்றி சொல்லும் போது ஏன் எல்லோரும் இறுதியில் மேற்சொன்ன வரிகளிலே முடிக்கிறீர்கள்

  இதுதான் காதலா........:(

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக இது காதல் இல்லை நண்பரே... எங்கும் நடைபெருவதைத்தான் நான் கூறியுள்ளேன். காதல் என்பது மிகவும் ஆத்மார்த்தமானது... இப்படி முடிக்கும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டத்திற்கு வருத்தப் படுகிறேன்...

   Delete
 2. Nalla padhivu. Indraiya nadappai alagaaga eduththuch cholliyullergal. Vaalththukkal ullame.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...

   Delete
 3. வணக்கம், வருகைக்கு மிக்க நன்றி...
  தொடர்ந்து வாருங்கள்.

  ReplyDelete
 4. காதலும் காமமும் வேவாரனவை .காதல் மனசு சம்பந்த பட்டது .காமம் உடல் சமந்தபட்டது.இன்றயே மக்கள் அவை பற்றி வேறுபாடு காட்டாமல் குழப்பிவிடுகிறார். அன்பு ஆழம் ஆனால் காதல் கடைசிவரை இருக்கும் காமம் மட்டுமே எனில் உடல் தேவை மட்டும் பார்க்கும்.அன்புடன் வாழ்க வளமுடன் கருப்பசாமி.


  ReplyDelete
  Replies
  1. அப்பா வணக்கம், எனக்கு இதில் அன்பு மட்டுமே தேறியுள். மற்றதெல்லாம் இன்னும் அனுபவம் இல்லை... நண்பர் தளத்தில் பகிர்ந்தது... பிடித்திருந்ததால் அவர் அனுமதியுடன் நானும் இங்கு வெளியிட்டேன்....

   தங்கள் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பா.

   தொடர்ந்து வாருங்கள்...

   Delete
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_9356.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது... தங்கள், பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா...

   Delete
 6. Anonymous3:29:00 PM

  இப்படியே எல்லோரும் காதல் பற்றி தவறாக காமம் கலந்து எழுதிதான்
  அதற்குள்ள மரியாதை இன்று அதற்கு கிடைக்கவில்லை

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்கு நூறு உண்மைதான்...

   Delete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...