சாவடித் தலைவர் ஈழவரையரிடமிருந்து விடைபெற்றுக் கொண்ட பத்திரையின் புரவித் தேரானது அடர்ந்த சம்பாபதி வனத்தை நோக்கி மெல்ல விரைந்துகொண்டிருந்தது. புரவித் தேரின் வேகமானது வண்டியினுள் அமர்ந்திருப்பவர்களுக்கு புரவித் தேரைக் குலுக்கி எந்தவொரு இடையூறும் அளிக்காத வண்ணம் அதே நேரம் வண்டியை விரைவாகவும் செலுத்திக்கொண்டிருந்தார் புரவித் தேரின் சாரதி.
Dec 11, 2013
சரித்திர நாவல்: வானவல்லி -2
முன்பொருநாள் சாரங்கலன்1 என்னும் சிறுவன் தன்னந் தனியாக சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டான். அங்கொரு பேய்மகள் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் தலையை தின்றுகொண்டு எலும்புகளை கையிலேந்தி இரத்தம் சொட்ட சொட்ட கூத்தாடிக் கொண்டிருந்தாள். இதனைக் கண்ட சிறுவன் இரத்தம் உறைய நடுநடுங்கி, பயந்து ஓடிவந்து தாய் கோதைமையிடம் கூறிவிட்டு நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் தாய் கோதைமை அவனை மார்போடு அனைத்து அச்சம் விலகும்படி ஆறுதல் படுத்த முயன்றாள், இருப்பினும் அவனது பயம் விலகியபாடில்லை.
Dec 7, 2013
Dec 4, 2013
சரித்திர நாவல்: வானவல்லி -1
ஈழம், யவனம், சாவகத் தீவு, பவளத்தீவு,
பாண்டிய நாடு, சீனம், கடாரம் போன்ற தேசங்களிலிருந்து வணிகர்களையும் கடலோடிகளையும்
கவரும் மாபெரும் துறைமுக நகரமாக நாவலந்தீவினுள் அமைந்திருந்த மாபெரும்
சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது புகார்.
பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.
பல தேசத்து வணிகர்களும் கடலோடிகளும் தொடர்ந்து வந்துகொண்டும், போய்க்கொண்டும் இருந்ததனால் புகார் நகரில் இருந்த துறைமுகம் எப்போதும் பரபரப்புடனே இருந்து கொண்டிருந்தது.
Subscribe to:
Posts (Atom)
அதிகம் விரும்பப்பட்டவை
- அசோகர்: வரலாற்றின் கரும்புள்ளி- மறைக்கப் பட்ட உண்மைகள்
- கவிதை: காதலியை வெறுக்கிறேன்...
- எண்ணெய் சுத்திகரிப்பு வேலை வாய்ப்புகளை அளிக்கும் இணையதளம்
- மரணத்திற்கு அப்பால்: ஓர் அலசல்
- மரணத்திற்கு அப்பால் மறுஜென்மமா? ஓர் அலசல்
- கடை திறப்பு -1: பெண்களே உங்கள் வீட்டுக் கதவினைத் திறப்பீராக.
- பிறந்த நாள் கவிதை
- ஹிந்தி தெரியாத நீ ஹிந்துஸ்தானியா?
- மற(றை)க்கப்பட்ட முன்னூறு ஆண்டுகள்: களப்பிரர்கள்
- தமிழிற்கு தி.மு.க (திரு.மு.க) செய்த மற்றுமொரு துரோகம்