Jan 10, 2016

வதாபி (பதாமி) - பயணக் கட்டுரை

கர்நாடகத்தில் வட மாவட்டத்தில் ஒன்றான பாகல் கோட்டையில் தான் பதாமி அமைந்திருக்கிறது. வதாபியின் இன்றைய பெயர் பதாமி. வதாபி எனும் அரக்கன் அகஸ்திய முனிவரால் கொல்லப்பட்டதால் இந்த இடத்திற்கு வதாபி என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் வரலாற்றின் படி வதாபி'யை சாளுக்கிய மன்னன் முதலாம் புலிகேசிதான் கட்டமைத்து தனது தலைநகராக்கிக் கொள்கிறான். சாளுக்கியர்களின் வரலாறு இந்த வதாபியிலிருந்துதான் தொடங்குகிறது. வாதாபி கி.பி 540 இலிருந்து 757வரை சாளுக்கியர்களின் தலைநகராக இருந்திருக்கிறது. சாளுக்கிய அரசவம்சத்தைத் தோற்றுவித்த முதலாம் புலிகேசியின் மகன்களான கீர்திவர்மா - 1 மற்றும் மங்கலேஷா இருவரும் தான் வதாபியில் கற்கோயில்களையும்,குகைகளையும் அமைத்தவர்கள். இருவருக்கும் பிறகு வதாபியில் சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசிதான் பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தை முற்றுகையிட்டான். அவனது முற்றுகை வருடங்களுக்கு நீடித்தாலும் பிறகு மகேந்திர பல்லவனால் விரட்டப்பட்டான். பின்வாங்கினாலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றிருந்தான் இரண்டாம் புலிகேசி. மகேந்திர பல்லவனின் மகனான நரசிம்ம வர்மன் இரண்டாம் புலிகேசியின் முற்றுகைக்கு பழிவாங்கும் பொருட்டு கி.பி 642ல் சாளுக்கிய தேசத்தைத் தோற்கடித்து வாதாபியை மொத்தமாக எரித்து அழித்துவிட்டு பெரும் செல்வத்துடன் காஞ்சிபுரம் திரும்பினான். மீண்டும் பல்லவர்களைப் பழிவாங்குவதற்காக சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியின் மகன் விக்ரமாதித்யா சாளுக்கியன் வெற்றிகரமாக காஞ்சிபுரத்தைத் தாக்கிக் கைப்பற்றிவிட்டு தெற்கே திருச்சி வரை முன்னேறிச் சென்றான். ஆனால், தெற்கில் திருச்சிக்கு அருகில் அவனது படை தோற்கடிக்கப்பட்டு திருப்பி வதாபியை நோக்கி விரட்டப்பட்டது. பிற்காலத்தில் சோழர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் ஆகியோர் பெரும் வலிமையுடன் திகழ்ந்த காலத்தில் மேலைச் சாளுக்கியர் தங்களது தலைநகரை மான்யகேடயத்திற்கு மாற்றிக்கொண்டு சோழர்களுக்கு தீராத பகையுடன் விளங்கினார்கள். இவர்களை எதிர்ப்பதற்காகவே சோழர்கள் மேலைச் சாளுக்கியர்களின் பங்காளிகளான கீழைச் சாளுக்கியர்களுடன் (வேங்கி) உறவு வைத்துக்கொண்டு மேலைச் சாளுக்கியர்களை ஒடுக்கினர். இதுதான் வதாபியின் வரலாறு.

இனி பயணத்திற்கு வருவோம்...

நான் இப்போது தங்கியிருக்கும் முதூலிலிருந்து பதாமி கிட்டத்தட்ட 90 கி.மீ தொலைவில் இருக்கிறது. துணைக்கு நண்பர்களை அழைத்தபோது அனைவருமே பயங்கர பிசி, அனைவரும் பகல் வேலை. எனக்கு மட்டும் இரவு வேலை. இந்த தினத்தை தவறவிட்டால் மீண்டும் பதாமிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதால் துணைக்கு யாரும் இல்லை என்றாலும் பரவாயில்லை தனியாக சென்றாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்தேன். கன்னடம் தெரியாது, புதிய இடம் எனத் தயக்கம் இருந்தது. இருந்தாலும் வதாபியை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து படுப்பதற்கு முன் 05.30க்கு அலாரம் வைத்தேன். அரைமணி நேரம் பத்து பத்து நிமிடங்களாக ஸ்நோஸ் வைத்து ஒரு வழியாக ஆறு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கிளம்பிவிட்டேன். கிளம்பி வெளியே வந்து பார்த்தால் ஒரே பனி. எதிரில் வருபவர் தெரியாத அளவிற்குப் பனி. இந்த பனியில் கிளம்பித்தான் ஆகவேண்டுமா என்ற சந்தேகம் கிளம்பிய பிறகும் தோன்றியது எனக்கு. இருந்தும் சென்று விடுவது என்று தீர்மானித்து புறப்பட்டுவிட்டேன். முகத்தில் அறைந்த பனிக்காற்று உடலை சிலிர்க்க வைக்க அந்தப் பனிக்காற்றையும் அனுபிவித்தபடியே  முதூலிலிருந்து இரண்டு மணி நேரம் பயணித்து பாகல்கோட்டை சென்றேன். பிறகு அங்கிருந்து முக்கால் மணி நேர பேருந்து பயணம்தான், பதாமி வந்துவிட்டது. சரியாக பாகல்கோட்டை மாவட்டத்திலிருந்து முப்பது கி.லோ மீட்டர். வழி நெடுக கரும்பு, முத்து சோளம், நாட்டு சோளம், சுண்டல், சூரிய காந்தி எனப் பயிர்கள் விளைந்து செழித்திருக்க அவற்றைப் பார்த்து அனுபவித்தபடியே கிட்டத்தட்ட 9.30 மணிக்கு பதாமியை அடைந்தேன்.

சோளக் காடு
 அங்கேயே பதாமி பேருந்து நிலையம் அருகில் ஒரு வீணாகப் போன கடையில் காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பெரும் பசியுடன், வெறும் வயிற்றுடன் குகைகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து சென்றேன். 
பச்சை நிறத்தில் பறந்து விரிந்த சற்றே பெரிய அகஸ்தியர் ஏரி அமைந்திருக்க அதைச் சுற்றிலும் உயர்ந்த பாறைகளைக் கொண்டசிறு சிறு குன்றுகள் (மலை) உயர்ந்து நின்றுகொண்டிருந்தன. அகஸ்தியர் ஏரியின் முன்பு சிறு சிவாலயம், சில நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த மசூதி, ஏரிக்குப் பின்னால் பௌத்த நாதா கோயில் வலப்புறம் உயர்ந்த பாறையில் வரிசையாக குகைகள் அழகான சிற்பங்களுடன் அமைந்திருக்கின்றன. ஏரிக்கு இடப்புடம் மலையின் அடிவாரத்தில் அருங்காட்சியகம் இருக்கிறது. அதன் வழியே மலையேறினால் சிறு சிறு கற்கோயில்கள், மேலே பீரங்கி தளம், மலையின் உச்சியில் சிவன் கோயில் வரிசையாக அமைந்திருக்கிறது. 

இன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் ஏராளமான கல்லூரிப் பெண்களும், பள்ளிப் பெண்களும் வதாபிக்கு வருகை தந்திருந்தனர். அகஸ்தியர் ஏரியில் வரிசையாக உள்ளூர் பெண்கள் துணி துவைத்துக்கொண்டிருக்க முதலில் எதைக் காண்பது என்று சற்று குழம்பவே செய்தேன். முதலில் வந்த வேலை தான் முக்கியம் (???) என்று முடிவெடுத்து பௌத்த குகைகளை நோக்கி நகர்ந்தேன்.
பதாமியில் நாம் பார்க்க இருப்பவை கீழ்க்கண்ட இடங்கள் தான்.
   ===> பௌத்த குகை 1
   ===> பௌத்த குகை 2
   ===> பௌத்த குகை 3
   ===> பௌத்த குகை 4
   ===> பௌத்த குகை 5
   ===> ஏரியை நோக்கியிருக்கும் பௌத்த நாதா கோயில்
   ===> மியூசியம்
   ===> பீரங்கிதளம்
   ===> மலைமீதிருக்கும் சிவன் கோயில்கள்.

பௌத்த குகைகள்:

அகஸ்தியர் ஏரிக்கு வலப்புறம் சென்றால் வரிசையாக பௌத்தர் குகைகள் அமைத்திருக்கின்றனர். அனைத்தும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் குகை சிற்பங்கள்.

பௌத்த குகை - 1

குகைச் சிற்பம் - சிவன்

பௌத்த குகை - 2
 சத்தியமாக மேலே இருக்கும் படம் எதார்த்தமாக எடுத்ததுதான்.

குகைச் சிற்பம் - விஷ்ணுவுன் வராக அவதாரம்

பௌத்த குகை - 3 (இயற்கையாக அமைந்த குகை
பௌத்த குகை - 4


குகைச் சிற்பம்

பௌத்த குகை - 5

குகைச் சிற்பம் - பௌத்தர்

குகையிலிருந்து அகஸ்தியர் ஏரி

ஏரியை நோக்கியிருக்கும் பௌத்த நாதா கோயில்:
குகைகளைத் தவிர்த்த கற்கோயில்கள் அனைத்தும் கற்களை அடுக்கி செய்யப்பட கோயில்கள். பௌத்த நாதா கோயில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கற்கோயில். ஏரியை நோக்கி அமைந்திருக்கிறது. எப்போதும் குளிர் காற்று வீசிக்கொண்டிருக்க சுற்றி புள் வெளிகள் சூழ்ந்துசில கோபுரங்களுடன் அமைந்திருக்கிறது. பௌத்த நாதா கோயில் என அழைக்கப்பட்டாலும் உள்ளே சிவ லிங்கம் தான் இருக்கிறது.

பௌத்த நாதா கோயிலின் அழகிய தோற்றம்

பௌத்த நாதா கோயில் வலப்புற தோற்றம்

பௌத்தநாதா கோயிலின் பின்புறம்

உள்ளிருக்கும் மூலவர்

அருகிலிருக்கும் பாறையில் செதுக்கப்பட்ட கோயில் வடிவங்கள்

பௌத்த நாதா கோயிலின் முன்புறத் தோற்றம்

அகஸ்தியர் ஏரியின் கரையிலிருக்கும் சிறு சிவாலயம்
அருங்காட்சியகம்:
வதாபியைச் சுற்றிலும் கிடைத்திருக்கும் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்டு அருங்காட்சியகத்தை  அமைத்திருக்கிறார்கள். உள்ளே புகைப்படமெடுக்க அனுமதி கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக நான் எடுத்த திருட்டுப் புகைப்படங்கள்.

பணிப் பெண்கள்


நந்தி

கலவிக்கு முன் காதலர்கள்
 ஏனோ, அருங்காட்சியகத்தில் இருந்தசிற்பங்களில் மேலிருக்கும் ஓவியம் தான் என்னை மிகவும் கவர்ந்தது. இதை செதுக்கிய சிற்பியை எண்ணி எண்ணி வியக்கிறேன். அவனது முகம் சிதைவடையாமல் இருந்திருந்தால் இந்தச் சிற்பம் மிகவும் அழகாக இருந்திருக்கும்.


மலை கற்கோயில்கள்:

கற்கோயில்

கற்கோயில்

மலை மீதிருக்கும் கற்கோயில்

பீரங்கி தளம்

மேலகட்டி சிவா கோயில் - 7ம் நூற்றாண்டு கோயில்

கோயிலின் சுவரில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பம்
சிற்பங்கள் மீதும், வரலாறு மீதும் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் கண்டுகளிக்க வேண்டிய இடம் வதாபி. ஒருநாள் பொழுதினை அற்புதமாக கழிக்கலாம். சிற்பங்களும், குகைளும் பார்க்க பார்க்க சலிக்காத இடம். நான் எடுத்த நானூறு புகைப் படங்களில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்திருக்கிறேன். 

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

9 comments:

 1. http://thaenmaduratamil.blogspot.com/2016/01/travel-with-my-friends.html
  இனியும் விட்டுவைக்க முடியாது :)

  ReplyDelete
 2. உறக்கம் தொலைத்து அருமையான பயணம் செய்திருக்கிறீர்கள்

  ReplyDelete
 3. காண நினைக்குமோர் இடம்.

  தங்கள் பதிவு காண ஆர்வம் இன்னும் மிகுகிறது.

  நன்றி .


  தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. VERYGOOD SIR. BUT PERIYAPURANAM RECORD THIS CITY AS VAATHABI வாதாபி. NEARBY WONDERS AIHOLE AND PAATADHKAL ALSO WORTH VISITING. HENCE BADAMI NEEDS ATLEAST TWO DAYS. THANKS

  ReplyDelete
 5. VERYGOOD SIR. BUT PERIYAPURANAM RECORD THIS CITY AS VAATHABI வாதாபி. NEARBY WONDERS AIHOLE AND PAATADHKAL ALSO WORTH VISITING. HENCE BADAMI NEEDS ATLEAST TWO DAYS. THANKS

  ReplyDelete
 6. மறை முகமாக எடுத்திருந்தாலும் புகைப்படங்கள் அருமை சிறுத்தை படத்தின் கடைசிகாட்சிகள் இங்குதான் படமாக்கினார்கள்

  ReplyDelete
 7. பார்க்க வேண்டும் வெற்றி இந்த இடத்தை எங்கள் லிஸ்டில் உள்ள இடம்...

  ReplyDelete
 8. இது வாதாபி என்று அழைக்கப்பட்டதாகத்தான் தெரிகின்றது வெற்றி. கர்நாடக சங்கீத உலகின் மும்முர்த்திகளில் ஒருவரான தீட்சிதர் எழுதிய ஒரு கீர்த்தனம் "வாதாபி கணபதிம் பஜே" இந்தக் கோயிலைப் பற்றியதுதான் என்பது என் அனுமானம்.

  கீதா

  ReplyDelete
 9. இது வாதாபி என்று அழைக்கப்பட்டதாகத்தான் தெரிகின்றது வெற்றி. கர்நாடக சங்கீத உலகின் மும்முர்த்திகளில் ஒருவரான தீட்சிதர் எழுதிய ஒரு கீர்த்தனம் "வாதாபி கணபதிம் பஜே" இந்தக் கோயிலைப் பற்றியதுதான் என்பது என் அனுமானம்.

  கீதா

  ReplyDelete

மனதில் பட்ட தங்கள் கருத்துகளை மறக்காமல் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்...