Feb 15, 2015

உதிரும் நான் - 36

ஒற்றை மரக்கள்ளின் 
போதையை 
கண நேரத்தில் ஊட்டிவிடுகிறாள்...

பின்னாலிருந்து அழைக்கும் 
குழந்தையைப் பார்க்கும்
தருணங்களில்
திருட்டுத்தனமாக எனை நோக்கும்போது!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 10, 2015

உதிரும் நான் - 35

பெரும் மழையினூடே
இடிவிழுந்த ஒற்றைப் பனைமரமென
எரிந்துகொண்டிருக்கிறது மனம்...

எனக்குள் 

சுழன்றுகொண்டிருக்கும்
அவளது நினைவலைகளால்!


சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...

Feb 2, 2015

கவிதை: காதலியை வெறுக்கிறேன்...

நான்தான் முதலில் நோக்கினேன்
அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்
பிறிதொரு சமயம் அவளும் நோக்கினாள்
பார்வை காதலானது
காதல் தெய்வீகமானது

அவள் விழிகளைப் பார்த்தே
காலத்தைக் கடக்கும் வித்தையறிந்தேன்.

உதட்டுப் பிளவினூடே
உயிரை உறிஞ்சினாள்...
அமரத்துவத்தை உணர்ந்தேன் நான்.

ஓருயிர் ஈருடலானோம்.

பிறவிப்பலனை அவள்மூலம்
அடைந்தேன்.

அவளின்றி நானில்லை
எனும் நித்திய நிலை.

அவளது புன்னகையைக் கொண்டே 
யுகங்களைக் கடக்க 
முனைந்தேன்...

காலம் கடந்தது.

மனம் இப்போதெல்லாம்
என் காதலியை 
வெறுக்கவே செய்கிறது.

காரணம் தெரியவில்லை.

ஒருவேளை
காதலி மனைவியானதும்கூட
காரணமாக இருக்கலாம்...

அவள் காதலியாகவே 
இருந்திருக்கலாம்...!

சி.வெற்றிவேல்...
சாளையக்குறிச்சி...